இந்தியா, பலேனோ கார்களை வரும் ஜனவரி 2016 ல் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.
published on டிசம்பர் 15, 2015 10:16 am by sumit for மாருதி பாலினோ 2015-2022
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : இந்திய பிரதமர் நரேந்திரா மோடி நம் நாட்டில் தயாரிக்கப்படும் கார்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். மாருதி சுசுகி நிறுவனம் இங்கே கார்களை முழுமையாக தயாரித்து ஜப்பான் நாட்டுக்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யுள்ளது.
“மாருதி (சுசுகி) இங்கே தயாரிக்கும்....... இந்த ஜப்பான் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும்" , என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியா - ஜப்பான் வர்த்தக தலைவர்கள் மன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் , இந்தியாவும் ஜப்பானும் அதி வேக ரயில்கள் திட்டத்தில் மட்டும் இணைந்து பணியாற்றக்கூடாது , அதிவேகமாக வளர்ச்சி அடையும் முயற்சியிலும் ஒன்றாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்று கூறினார்.
மாருதி நிறுவனத்தின் பலேனோ கார்கள் தான் முதலில் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. வருடத்திற்கு 20,000-30,000 கார்கள் வரை ஏற்றுமதி செய்யப்படும் என்று இந்நிறுவனத்தின் சேர்மன் R C பார்கவா தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சம்மந்தமான சட்ட திட்டங்கள் சற்று சிக்கலானது என்றும் , பலேனோ கார்களின் ஏற்றுமதி ஜனவரி 2016 ல் இருந்து தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாருதி நிறுவனத்தின் பலேனோ கார்கள் இந்திய வாகன சந்தையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை பெரிய வெற்றியை பெற்று விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.
இந்தியா ஜப்பான் நாட்டிடம் இருந்து அகமதாபாத் - மும்பை மார்க்கத்தில் இயக்குவதற்காக அதி வேக புல்லட் ரயில் ஒன்றை வாங்குவது என்று முடிவு செய்துள்ள தருணத்தில் இந்த ஏற்றுமதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரிய அளவில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ரயில் வாங்கப்படுகிறது. ஜப்பான் நாடு இந்த திட்டத்திற்காக வட்டியே இல்லாத என்று சொல்லும் அளவுக்கு மிக குறைந்த வட்டி விகிதத்தில் ( சரியாக 0.1%) இந்தியாவிற்கு கடனுதவி செய்துள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 98,000 கோடியாக ($12 பில்லியன்) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர சிவில் அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் பலவும் இரு நாட்டிற்கும் இடையே கையெழுத்தானது.
இதையும் படியுங்கள்