ரெனால்ட் க்விட் காரின் தயாரிப்பு மையமாக இந்தியா அறிவிப்பு
published on ஜனவரி 25, 2016 03:03 pm by nabeel for ரெனால்ட் க்விட் 2015-2019
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
க்விட் ஹேட்ச்பேக்கின் ஒரே தயாரிப்பு மையமாக இந்தியா மட்டும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் (வோல்டு எக்னாமிக்ஸ் ஃபார்ம்) பேசிய ரெனால்ட்-நிசான் CEO கார்லோஸ் கோஸ்ன், இதை உறுதி செய்தார். உலக நாடுகளுக்கு விரைவில் ரெனால்ட் க்விட் ஏற்றுமதி செய்யப்பட இருந்தாலும், அதன் தயாரிப்பு இந்தியாவில் மட்டுமே நடைபெற்று, இந்திய கரையில் இருந்து மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் க்விட் காருக்கு ஒரு மலைக்க வைக்கும் வரவேற்பு கிடைத்ததோடு, ஒரு சிறப்பான விருதை நோக்கி அது தங்குதடையின்றி பயணிக்கிறது.
க்விட் தயாரிப்பில் 97%-க்கும் மேலாக உள்ளூர் தயாரிப்பு நடைமுறையை செயல்படுத்தியதால், அதற்கு கவர்ச்சிகரமாக ரூ.2.56 – 3.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) என்று விலை நிர்ணயிக்க ஏதுவாக அமைந்தது. இந்த போட்டியிடும் தன்மை கொண்ட விலை நிர்ணயத்தின் மூலம், ரெனால்ட் க்விட் காருக்கு 85,000-க்கும் மேலான முன்பதிவுகளை பெற முடிந்தது. இதில் ஒரு 799cc 3-சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரை கொண்டு, 53bhp ஆற்றல் மற்றும் 72Nm அதிகபட்ச முடுக்குவிசையை அளிக்கிறது. இந்த மோட்டார், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு விரைவில் AMT செயல்பாடும், ஒரு மூத்த உடன்பிறப்பும் அளிக்கப்பட உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த க்விட்டில், ஒரு AMT மற்றும் 1-லிட்டர் பதிப்புகளை, 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு கொண்டுவர உள்ளது. இதனிடையே சமீபத்தில் 1000cc திறன் கொண்ட க்விட் கார், பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட உளவுப்படத்தில் சிக்கியுள்ள நிலையில், ஆட்டோ எக்ஸ்போவை ஒட்டி, இதுவும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் மத்தியில் க்விட் காரின் தயாரிப்பை அதிகரிக்க, ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான முன்பதிவு 50,000-த்தை தாண்டியதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து க்விட் காரின் மாத தயாரிப்பு அளவு 6,000 இல் இருந்து 10,000 ஆக ரெனால்ட் நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி அளவு உயர்வு 2016 பிப்ரவரி அல்லது மார்ச் முதல் அமலுக்கு வரும். ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமித் சாஹ்னி கூறுகையில், “க்விட் ஒரு சிறப்பான வெற்றியை அடைந்துள்ள நிலையில், அதன் தேவையை பூர்த்தி செய்ய கொள்முதலை சரிந்துவிடாமல் பாதுகாத்து வருகிறோம். 98 சதவீத உள்ளூர் பங்களிப்பை பெற்று, விற்பனையாளர்களுடன் இணைந்து நாங்களும் அதன் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். சென்னை மழை பொழிவு, இதை சீர்க்குலைப்பதாக அமைந்த போதும், மேற்கூறிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாங்கள் பணி நீட்டிப்பு செய்து வருகிறோம்” என்றார்.
மேலும் வாசிக்க
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய 15,000-க்கும் மேற்பட்ட கார்களை, ரெனால்ட் திரும்ப அழைக்கிறது