• English
  • Login / Register

ஹுឈடாயிប i20 ரக காណகធ សឝபிឃகឋபជடன

published on ஆகஸ்ட் 12, 2015 11:55 am by nabeel for ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிரேட்டாவில் 7 அங்குலத்தில் உள்ள தொடு திரை அமைப்பில் உள்ள ஒலி ஒளி பயண வழிகாட்டும் கருவியின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹுண்டாய் நிறுவனம் இத்தகைய தனிச் சிறப்பு மிக்க அமைப்பை, தனது எலைட் i 20 மற்றும் எலைட் i 20 ஆக்டிவ் ஆகிய கார் வரிசைகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தொடு திரை வசதியை எலைட் i20 மாடல் கார்களில் பொருத்தியதால் இதன் பிரிவில் இந்த அமைப்பை கொண்ட இரண்டாவது காராக போற்றபடுகிறது. ஆனால், மிகவும் சிறந்த எலைட் i20 ஆக்டிவ் மாடல்களில் இத்தகைய அம்சம் புதுப்பிக்கப்பட உள்ளது. எனவே, இதன் ரகத்தில், இது ஒன்று மட்டுமே இத்தகைய AVN தொடுதிரை அமைப்புடன் உலா வரும் என்று கூறலாம்.

எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் தவிர, சென்ற மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டாவின் புதிய ஜாஸ் காரும், இத்தகைய வியக்கத்தக்க தொடு திரை அம்ஸங்களைப் பெற்றுள்ளது. இதன் வரிசையில், இந்த கார் மட்டுமே இத்தகைய அசத்தலான தொடு திரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை கொண்ட கார் என்று கூறப்படுகிறது.

கிரேட்டாவின் 7 அங்குல AVN இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, வாடிக்கையாளர்களிடம் மட்டும் அல்லாமல் விமர்சகர்களிடமிருந்தும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த அமைப்பு மிகவும் ஏற்புத்தன்மை உடையதாகவும், எளிதாக உபயோகிக்கக் கூடியதாகவும் உள்ளது. இதன் தரவுகளும், விவர குறிப்புகளும் மிகவும் அருமையாக ஒழுங்குபடுத்தப்பட்டு, தெளிவாக ஏற்றுக் கொள்ளப்படுவதால், உபயோகிப்பதற்கு எந்த விட சிரமமும் இல்லாமல் நேர்த்தியாக உள்ளது.

AVN இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு மூலம், புளு டூத், AUX-In அல்லது USB இணைப்பு வசதி மற்றும் நுண்ணறிவு கைபேசியை (ஸ்மார்ட் ஃபோன்) ஒருங்கிணைக்கும் வசதியும் பெற்றுக் பயணத்தின் போது சுகமான அனுபவத்தை தருகிறது. மேலும், இதன் ஒலி பெருக்கி (ஸ்பீக்கர்) அமைப்பில், 2 ஒலி பெருக்கிகளும், 2 உயர் தொனி ஒலி பெருக்கிகளும் (ட்வீட்டர்) பொருத்தப்பட்டு, மிகவும் உயர்தரமான ஒலி தரத்தை சராசரி பயணிகளுக்கு அளிக்கின்றன.

AVN இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பில் உள்ள 7 அங்குல திரை, பின்புறமாக சென்று காரை எளிதாக நிறுத்துவதற்கு தேவையான பின்புற நிழல்பட காட்சி (காமிரா டிஸ்ப்ளே) வசதி மற்றும் நிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டும் முறையையும் ஓட்டுனருக்கு தந்து பின்புறமாக நிறுத்துவதை எளிமைப்படுத்துகிறது.

ஹுண்டாய்யின் எலைட் i20 ரக கார்கள் புதிய அஸ்டா (O) என்ற வகையிலும், எலைட் i20 ஆக்டிவ் SX கார்கள், AVN அமைப்பு கொண்டும் வெற்றி வாகை சூடி உள்ளன. இந்த இரண்டு வகைகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் ரக கார்களில், இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு பொருத்தப்பட்டு, சிறிய விலை வேறுபாட்டில் கிடைக்கின்றன.

எலைட் i20 மற்றும் எலைட் i20 ஆக்டிவ் கார்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விலைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

எலைட் i20 டீசல் வகைகள் 

எலைட் i20 எரா

ரூபாய் 6.46 லட்சம்

எலைட் i20 மேக்னா

ரூபாய் 7.00 லட்சம்

எலைட் i20 ஸ்போர்ட்ஸ்

ரூபாய் 7.54 லட்சம்

எலைட் i20 ஸ்போர்ட்ஸ் (O)

ரூபாய் 7.87 லட்சம்

எலைட் i20 அஸ்டா

ரூபாய் 8.09 லட்சம்

எலைட் i20 அஸ்டா (O)*

ரூபாய் 8.69 லட்சம்*

எலைட் i20 பெட்ரோல் வகைகள் 

எலைட் i20 எரா

ரூபாய் 5.34 லட்சம்

எலைட் i20 மேக்னா

ரூபாய் 5.88 லட்சம்

எலைட் i20 ஸ்போர்ட்ஸ்

ரூபாய் 6.39 லட்சம்

எலைட் i20 ஸ்போர்ட்ஸ் (O)

ரூபாய் 6.75 லட்சம்

எலைட் i20 அஸ்டா

ரூபாய் 6.98 லட்சம்

எலைட் i20 அஸ்டா (O)*

ரூபாய் 7.49 லட்சம்*

எலைட் i20 ஆக்டிவ் டீசல் வகைகள் 

எலைட் i20 ஆக்டிவ் பேஸ்

ரூபாய் 7.72 லட்சம்

எலைட் i20 ஆக்டிவ் S

ரூபாய் 8.43 லட்சம்

எலைட் i20 ஆக்டிவ் SX*

ரூபாய் 9.61 லட்சம்*

எலைட் i20 ஆக்டிவ் பெட்ரோல் வகைகள் 

எலைட் i20 ஆக்டிவ் பேஸ்

ரூபாய் 6.47 லட்சம்

எலைட் i20 ஆக்டிவ் S

ரூபாய் 7.18 லட்சம்

எலைட் i20 ஆக்டிவ் SX*

ரூபாய் 8.30 லட்சம்*

டெல்லி ஷோரூம் (*) – புதிய வகைகள்

was this article helpful ?

Write your Comment on Hyundai எலைட் ஐ20 2017-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • வாய்வே மொபிலிட்டி eva
    வாய்வே மொபிலிட்டி eva
    Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 ev
    எம்ஜி 4 ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience