உலகளவில் வெளியிடப்பட்டது Hyundai Inster கார், இந்தியாவிலும் இது அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது
published on ஜூன் 27, 2024 05:39 pm by shreyash
- 104 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் சிறிய EV இந்தியாவில் டாடா பன்ச் EV க்கு போட்டியாக 355 கிமீ வரை செல்லும்.
-
ஹூண்டாய் இன்ஸ்டர் வடிவமைப்பு காஸ்பர் கார் போலவே உள்ளது.
-
இன்ஸ்டர் பிக்சல் போன்ற LED DRLகள் மற்றும் டெயில் லைட்களை கொண்டுள்ளது.
-
உள்ளே ஒரு லைட் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் மினிமலிஸ்ட் தோற்றமுடைய கேபின் உள்ளது.
-
10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகிய வசதிகள் இந்த காரில் உள்ளன.
-
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் இது கிடைக்கும்: 42 kWh மற்றும் 49 kWh (லாங் ரேஞ்ச்).
-
விலை ரூ.12 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் இன்ஸ்டர் காரின் டீசர் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று 2024 பூசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோவில் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுவரை வெளியானதிலேயே ஹூண்டாயின் மிகச்சிறிய EV ஆன இந்த கார் சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள காஸ்பர் மைக்ரோ எஸ்யூவி -யின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பாகும். இது முதலில் கொரியாவிலும், அதைத் தொடர்ந்து மற்ற உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும். மேலும் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பு
இன்ஸ்டர் EV ஆனது அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) போலவே உள்ளது. முன்புறத்தில், LED DRL -கள் சூழப்பட்ட வட்ட வடிவ ஹெட்லைட்கள் மற்றும் பெரிய பம்பருடன் கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கேஸ்பரில் இருந்து அதை வேறுபடுத்துவது அதன் புதிய பிக்சல் போன்ற LED DRL -கள் பம்பருக்கு மேலே உள்ளன. மற்றும் குரோம் எலமென்ட்கள் இதில் இல்லை.. பக்கத்தில், நீங்கள் அதன் அளவைக் கவனிக்கலாம் மற்றும் பின்புற கதவுகள் சி-பில்லரில் பொருத்தப்பட்ட டோர் ஹேண்டில்கள் உள்ளன, இது EV -க்கான குறிப்பிட்ட அலாய் வீல்களை 15-இன்ச் மற்றும் 17-இன்ச் என இரண்டு அளவுகளில் பெறுகிறது.
பின்புறத்தைப் பற்றி பேசுகையில் காஸ்பரிலிருந்து இன்ஸ்டரை மீண்டும் வேறுபடுத்துவது அதன் பிக்சல் போன்ற LED டெயில் லைட்ஸ் ஆகும். இதற்கிடையில் மீதமுள்ள விஷயங்கள் எதுவும் மாறாமல் இருக்கும்.
இன்ஸ்டர் நீளம் மற்றும் அகலம் இரண்டிலும் காஸ்பரை விட சற்று பெரியது. எடுத்துகாட்டுக்காக அவற்றின் அளவீவுகளின் ஒப்பீடு இங்கே:
அளவுகள் |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
ஹூண்டாய் காஸ்பர் |
நீளம் |
3825 மி.மீ |
3595 மி.மீ |
அகலம் |
1610 மி.மீ |
1595 மி.மீ |
உயரம் |
1575 மி.மீ |
1575 மி.மீ |
வீல்பேஸ் |
2580 மி.மீ |
2400 மி.மீ |
மேலும் பார்க்க: பார்க்க: பயணிகள் ஏற்றப்பட்ட EV மற்றும் பயணிகள் இல்லாத EV: உண்மையில் எந்த லாங் ரேஞ்ச் டாடா நெக்ஸான் EV கார் அதிக துரம் செல்கிறது?
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
உள்ளே இன்ஸ்டர் டூயல்-டோன் டேஷ்போர்டு தீம் ஹார்ன் பேடில் பிக்சல் விவரங்களுடன் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை கொண்டுள்ளது. இது ஹூண்டாய் அயோனிக் 5 காரில் நாம் பார்த்ததைப் போன்றது கேபின் லைட் க்ரீம் தீமுடன் வருகிறது. டேஷ்போர்டில் செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் உள்ளன. சென்ட்ரல் டனல் இல்லை ஆகவே ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளுக்கு அதிக இடம் கிடைக்கிறது, மேலும் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மினிமலிஸ்ட் பாணியில் உள்ளது.
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் V2L (வெஹிகிள் டூ வெஹிகிள்) ஃபங்ஷன் போன்ற வசதிகளுடன் ஹூண்டாய் இன்ஸ்டரை பொருத்தியுள்ளது. இன்ஸ்டர் சூடான இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் இன்ஸ்டரை 42 kWh மற்றும் 49 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கொண்டு வரும். கூடுதல் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
பேட்டரி பேக் |
42 kWh |
49 kWh (லாங் ரேஞ்) |
பவர் |
97 PS |
115 PS |
டார்க் |
147 Nm |
147 Nm |
அதிகபட்ச வேகம் |
மணிக்கு 140 கி.மீ |
மணிக்கு 150 கி.மீ |
எதிர்பார்க்கப்படும் திட்டமிடப்பட்ட ரேஞ்ச் (WLTP) |
300 கி.மீ -க்கு மேல் |
355 கிமீ வரை (15 இன்ச் சக்கரங்களுடன்) |
பொறுப்பு துறப்பு: இந்த விவரங்கள் இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு மாறுபடலாம்
இன்ஸ்டர் பல சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கிறது மற்றும் அதன் நேரங்கள் பின்வருமாறு:
சார்ஜர் |
சார்ஜிங் நேரம் |
120 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80 சதவீதம்) |
~ 30 நிமிடங்கள் |
11 kW ஏசி சார்ஜர் |
4 மணிநேரம் (42 kWh) / 4 மணிநேரம் 35 நிமிடங்கள் (49 kWh) |
எதிர்பார்க்கப்படும் விலை & வெளியீடு
இன்ஸ்டர் இந்த கோடையில் கொரியாவில் முதலில் விற்பனைக்கு வரும். அதைத் தொடர்ந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பசிபிக் சந்தைகளில் விற்பனைக்கு வரும். இன்ஸ்டர் இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை ஹூண்டாய் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால் அதன் விலை ரூ. 12 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா பன்ச் EV -க்கு போட்டியாக இருக்கும். மேலும் இது டாடா டியாகோ EV, டாடா பன்ச் EV, சிட்ரோன் eC3, மற்றும் எம்ஜி காமெட் இவி போன்றவற்றுக்கு மாற்றாகவும் இருக்கும்.
மேலும் கூடுதல் அப்டேட்களுக்கு கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
0 out of 0 found this helpful