• English
  • Login / Register

ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது

ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020 க்காக நவ 26, 2015 12:56 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போனால், இந்த வியத்தகு புள்ளிவிவரம் உள்நாட்டு விற்பனையை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை இதில் அடங்காது. உலகிலேயே முதல் முறையாக, 2014 –ஆம் வருட மார்ச் மாதம் இந்த ஹாட்ச் பேக் கார் இந்தியாவில் அறிமுகப்பட்டது. அதன் பின்னர், 2015 -ஆம் ஆண்டு, இந்தியன் கார் ஆஃப் தி இயர் (ICOTY) என்ற பெருமையையும் இந்த கார் தட்டிச் சென்றது. இந்திய வாகன சந்தையின் பிரிமியம் காம்பாக்ட் கார் பிரிவின் விற்பனையில், எலைட் i20 கார் 66 சதவிகிதம் பங்களிக்கிறது என்று, இந்த தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் கூறுகிறது.

HMIL நிறுவனத்தின் சேல்ஸ் & மார்கெட்டிங் பிரிவின் சீனியர் துணைத் தலைவர் திரு. ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, தன் நிறுவனத்தின் உறுதியான விற்பனை செயல்திறன் மற்றும் பிராண்ட் வெற்றியைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, “எலைட் i20 காரின் உள்நாட்டு விற்பனை தன்னிகரில்லா 1,50,000 என்ற அளவை எட்டும்படி செய்த, எங்களது வாடிக்கையாளர்களின் பேராதரவைப் பார்க்கும் போது, எங்களுக்கு பூரிப்பாக உள்ளது. வாடிக்கையாளர்களுடன் எங்களுக்குள்ள இணக்கத்தையும், அவர்களுக்கு ஹுண்டாய் கார்களின் மேல் உள்ள நம்பிக்கையையும் இந்த சாதனை பிரதிபலிக்கிறது. எலைட் i20 காரை தேர்வு செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன் மிகுந்த பிராண்டாக தகுதிபடுத்திய எங்களது வாடிக்கையாளர்கள், சேனல் பார்ட்னர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகங்களுக்கும், மேலும் இத்தகைய மாபெரும் சாதனை புரிய பங்களித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

சமீப மாதங்களில் இந்திய வாகன சந்தையில், ஹோண்டா ஜாஸ், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுசுகி பலீனோ மற்றும் ஹுண்டாய் எலைட் i20 ஆகிய கார்கள் முட்டி மோதி, கடுமையான போட்டியில் ஈடுபட்டன. சில மாதங்களுக்கு முன்பு, ஹோண்டா ஜாஸ் மறு அறிமுகம் செய்யப்பட பின்பு, இந்த கார் நிறுவனம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் வரிசையில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பைப் பொறுத்தியது. ஜாஸ் மற்றும் பலீனோ ஆகிய கார்களின் அறிமுகத்திற்குப் பிறகு போட்டியின் கடுமை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் பிரிமியம் ஹாட்ச் பேக் விற்பனை பிரிவில் தொடர்ந்து எலைட் i20 கார் முன்னணியில் இருக்கிறது.

மேலும் வாசிக்க

was this article helpful ?

Write your Comment on Hyundai எலைட் ஐ20 2017-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience