ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது!

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் க்கு published on பிப்ரவரி 28, 2020 02:04 pm by rohit

  • 53 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

கிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது

Hyundai Grand i10 Nios Turbo

  • இது ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் முதலில் வெளியிடப்பட்டது. 

  • கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ இரு வகைகளில் வழங்கப்பட்டுள்ளது: ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் (இரட்டை தொனி).

  • அவுராவில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.

  • டர்போ-இயந்திரம் 5-வேகக் கைமுறை மூலம் மட்டும் வருகிறது. 

  • இதன் விலை ரூபாய் 7.68 லட்சம் முதல் ரூபாய் 7.73 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா).

ஹூண்டாய்  கிராண்ட் ஐ10 நியோஸின்’ டர்போ வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது இரு வகைகளை வழங்கியுள்ளது: ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் (இரட்டை தொனி). இதன் விலைகள் முறையே ரூபாய் 7.68 லட்சம் மற்றும் ரூபாய் 7.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும். கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் ஹேட்ச்பேக்கின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பதிப்பை வெளிப்படுத்தியது.

வழக்கமான ஸ்போர்ட்ஸ் வகையுடன் ஒப்பிடப்பட்ட டர்போ வகையின் விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

வகை

கிராண்ட் ஐ10 நியோஸ் (பெட்ரோல் எம்‌டி) விலை 

கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ விலை

வித்தியாசம் 

ஸ்போர்ட்ஸ்

ரூபாய் 6.43 லட்சம் 

ரூபாய் 7.68 லட்சம்

ரூபாய் 1.25 லட்சம்

ஸ்போர்ட்ஸ் இரட்டை தொனி

ரூபாய் 6.73 லட்சம்

ரூபாய் 7.73 லட்சம்

ரூபாய் 1 லட்சம்

 

Hyundai Grand i10 Nios Turbo badge

கிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பானது இதன் முந்தைய செடனான அவுராவில் பார்த்ததை போலவே அதே பி‌எஸ்6- இணக்கமான 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. ஹேட்ச்பேக்கும் செடானும் 5-வேக கைமுறை செலுத்தலை மட்டும் பயன்படுத்தி அதே ஆற்றலையும், முறுக்குத்திறனையும் (100பி‌எஸ்/172என்‌எம்) வெளியிடுகிறது. மற்றொரு புறம், கிராண்ட் ஐ10 நியோஸின் 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களானது 5-வேகக் கைமுறை மற்றும் தானியங்கி முறையுடன் வருகிறது. வென்யூவில் ஹூண்டாய் இந்த டர்போ-பெட்ரோல் இயந்திரத்தை 7-வேக டி‌சி‌டி உட்செலுத்தல் விருப்பத்துடனும், அதிக செயல்திறனுடனும் வழங்குகிறது.

Hyundai Grand i10 Nios Turbo cabin

கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போவில் சிவப்பு நிறத்துடன் கூடிய வெளிப்புறமும், கருப்பு நிறத்தாலான உட்புறமும் இடம்பெறுகிறது. உட்புறத்தின் முகப்பு பக்கம் முழுவதிலும் இணைக்கப்பட்ட அமைப்புகள் ஆற்றல் வாய்ந்த தோற்றத்தை அளிக்கிறது. அதேபோல், இதிலுள்ள வசதிகள் அனைத்தும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் வகைக்கு இணையாக இருக்கின்றன, இதில் தானியங்கி முறையிலான காலநிலை கட்டுப்பாடு, 8-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா மற்றும் பட்டனை அழுத்தி வாகனத்தை இயக்கி-நிறுத்தும் அமைப்பு ஆகிய அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போவின் வெளிப்புறத்தில் உள்ள தனித்துவமான அம்சம் அவுராவில் உள்ளதைப் போலவே அதன் முன்பக்க பாதுகாப்பு கவசத்தில் உள்ள ‘டர்போ’ முத்திரை ஆகும்.

Hyundai Grand i10 Nios Turbo

இந்த டர்போ பதிப்புடன், ஹூண்டாய் ஆனது அதன் ‘என்’ முத்திரையைத் தவறவிட்டிருந்தாலும் கூட இந்தியாவில் ஹேட்ச்-பேக் பிரிவில் நுழைந்தது. ஆற்றல் வாய்ந்த கிராண்ட் ஐ10 நியோஸ் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, மற்றும் நிஸான் மைக்ரா ஆகியவற்றுடனான இதன் போட்டியைத் தொடங்குகிறது. செயல்திறனைப் பொறுத்தவரை, இது வோல்க்ஸ்வாகன் போலோ ஜி‌டி டி‌எஸ்‌ஐ மற்றும் மாருதி சுசுகி பாலினோ ஆர்‌எஸ் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது சிறிது உயர் செயல்திறன் கொண்டது, ஆகவே இதன் விலை அதிகமாக இருக்கும். உண்மையில், பாலினோ ஆர்‌எஸ் ஆனது வரவிருக்கும் பி‌எஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக இனி கிடைக்காது. நடைமுறையில் இருக்கும் போலோ ஜி‌டி டி‌எஸ்‌ஐயும் இதே வழியில் செல்லவுள்ளது. 

மேலும் படிக்க: கிராண்ட் ஐ10 நியோஸ் ஏ‌எம்‌டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹூண்டாய் Grand ஐ10 Nios

Read Full News
அதிக சேமிப்பு!
% ! find best deals on used ஹூண்டாய் cars வரை சேமிக்க
பயன்படுத்தப்பட்ட <cityname> இல் <modelname>ஐ காண்க

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

trendingஹாட்ச்பேக்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience