ஹயுண்டாய் எளிட் ஐ 20 மற்றும் ஐ 20 ஆக்டிவ் டச் ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் அமைப்புடன் கூடிய மாடல்களின் வேலை வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்டது மீது Aug 31, 2015 06:52 PM இதனால் Manish for ஹூண்டாய் Elite i20

  • 18 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:  இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான ஹயுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடட் 7” டச் ஸ்க்ரீன் ஒளி - ஒலி நாவிகேஷன் அமைப்பை தன்னுடைய ஐ 20 மற்றும்  ஐ 20  ஆக்டிவ் கார்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. மிக அதிக மான பயணிகள் கார்களை ஏற்றுமதி செய்யும் ஹயுண்டாய் நிறுவனம் இந்த நேர்த்தியான இன்போடைன்மென்ட் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  எதிர்காலத்தில் அறிமுகமாகும் கார்களில் ஓட்டுனர் மற்றும் பயணி ஆகிய இருவருமே அற்புதமான ஒரு வசதியையும் சூழலையும் உணரும் வகையில் கார்கள் தயாரிக்கப்பட  வேண்டும் என்று ஹயுண்டாய் நினைக்கிறது. 

இந்த புதிய 7” டச் ஸ்க்ரீன் ஒளி - ஒலி நாவிகேஷன் அமைப்பு முன்னமே லோட் செய்யப்பட்ட ( ப்ரி - லோட் ) மேப்கள், செயற்கைகோள் உதவியுடன் குரல் மூலம்  நாவிகேஷன் செய்யும் வசதி. பின்புற கேமரா, மற்றும் முழுமையான பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு அம்சங்கள் ஆகியவைகளும்  கூடுதலாக இணைக்கப்பட்டு வெளி வர உள்ளது. இவை தவிர ப்ளுடூத் தொடர்பும் இணைக்கப்படிருக்கிறது.  இதன் மூலம் ஒருவர் தன் கைபேசியுடன் காரின் பொழுதுபோக்கு அமைப்பை  இந்த  ப்ளுடூத் வசதியின் மூலம்   இணைத்துக்கொண்டு காரின் டச் ஸ்க்ரீன் அமைப்பில் கைபேசியின் அழைப்பை பெற்று பதில் கூறவோ, டயல் செய்யவோ அல்லது இசையை ரசிக்கவோ முடியும்.  மேலும் இந்த நாவிகேஷன் அமைப்பு மிக நேர்த்தியான கிபோர்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட ஒரு இடத்தை தேடுவதோ அல்லது அடைவதோ  இந்த அமைப்பின் உதவியுடன் மிக எளிதில் செய்து கொள்ள முடியும்.   

விலைகள் ( எக்ஸ் - ஷோரூம், டெல்லி)

எளிட் ஐ 20 ஆஸ்தா(ஒ) பெட்ரோல்: ரூ. 716,547 

எளிட் ஐ 20 ஆஸ்தா(ஒ) டீசல் :  ரூ. 828,496  
 
 ஐ 20  ஆக்டிவ் எஸ் எக்ஸ் பெட்ரோல்: ரூ. 792,045

ஐ 20  ஆக்டிவ் எஸ் எக்ஸ் டீசல்: 916,685 

வெளியிட்டவர்

Write your Comment மீது ஹூண்டாய் i20

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

எக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?