ஹுண்டாய் எலைட் i20/ஆக்டிவ் கார்களில் சிறிய மேம்பாடுகள் மற்றும் அனைத்து டிரிம்களிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் இடம்பெறுகின்றன
published on ஜனவரி 06, 2016 10:04 am by raunak for ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி சுசுகி பலீனோவின் அனல் பறக்கும் வெற்றியைத் தொடர்ந்து, எலைட் i20 காரின் உயர்தர வேரியண்ட்டான ஆஸ்டா (O) காரிலும் காலையிலும் பளீரென்று எரியக்கூடிய LED பல்புகள் பொருத்தப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள் இணைக்கப்பட்டுள்ளன.
எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் 2016 ஆண்டு மாடல்களில், ஹுண்டாய் நிறுவனம் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகளை அனைத்து டிரிம்களிலும் பொதுவான அம்சமாக இணைத்து மேம்படுத்தியுள்ளது. முக்கிய பாதுகாப்பு அமைப்பான டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் தவிர, எலைட் i20 வரிசைகளில் மேலும் சில குறிப்பிடத்தக்க மாறுதல்களையும் நாம் பார்க்கலாம். மேம்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள், வெகு விரைவில் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துவிடும் என்று இந்த கொரிய வாகன தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஹுண்டாய் ஏற்கனவே அறிவித்தது போலவே, இந்த இரண்டு மாடல்களின் விலையும் சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஞ்ஜின் தரத்தைப் பொறுத்த வரை, எந்த வித மாறுதல்களும் இல்லாமல், அதே 6 ஸ்பீட் MT அமைப்புடன் இணைந்த 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 5 ஸ்பீட் MT அமைப்புடன் இணைந்த 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்.
எலைட் i20 –யின் வரிசையில் டாப் எண்ட் வேரியண்ட்டான ஆஸ்டா (O), இப்போது புதிய கார்னரிங்க் லாம்ப் மற்றும் காலையிலும் பளிச்சென்று எரியும் LED பொருத்தப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள் இணைக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி பலீனோவில், இந்த பிரிவிலேயே முதல் முறையாக காலையிலும் பளீரென்று எரியும் LED இணைக்கப்பட்ட Bi-Xenon புரொஜெக்டர் விளக்குகள் பொருத்தப்பட்டு வந்தது. மற்றுமொரு முக்கிய செய்தி என்னவென்றால், ஹுண்டாய் எலைட் i20 வரிசையில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் (O) வேரியண்ட்டின் தயாரிப்பு மற்றும் விற்பனை இனி நிறுத்தப்பட்டுவிடும். எனினும், ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா, மற்றும் ஆஸ்டா (O) ஆகிய மாடல்களும், அடிப்படை வேரியண்ட்களான எரா மற்றும் மகானா ஆகிய மாடல்களும், தங்கு தடை இல்லாமல் தொடர்ந்து வெளிவரும். மேற்சொன்னது போல, எலைட் i20/ஆக்டிவ் மாடலின் அனைத்து வகைகளிலும் டூயல் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டு வரும், எனினும், ABS அமைப்பு ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் இருந்து ஆரம்பித்து மற்ற உயர்தர வரிசைகளில் பொருத்தப்பட்டு வரும். மேலும், கடந்த வருடத்தின் இறுதியில் ஆஸ்டா (O) டிரிம்மில் இணைக்கப்பட்ட டச் ஸ்கிரீன் நேவிகேஷன் அமைப்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து வெளிவரும். இதற்கு முன்பு காமிரா ஸ்கிரீன் இணைக்கப்பட்டு வந்த ஆட்டோமேடிக் எலக்ட்ரோக்ரோமிக் மிர்ரர், இப்போது மேனுவலாக மாற்றப்பட்டுள்ளது.
ஆதாரம்: Autocar India
மேலும் வாசிக்க
இந்தாண்டின் 5.05 மில்லியன் கார்களின் விற்பனை இலக்கு: ஹூண்டாய் இழக்க வாய்ப்பு
0 out of 0 found this helpful