Hyundai Creta N Line வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்
கிரெட்டா N லைன் N8 மற்றும் N10 என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஆனால் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
ஸ்டாண்டர்டு கிரெட்டா எஸ்யூவியின் ஸ்போர்டியர் எடிஷனான ஹூண்டாய் கிரெட்டா N லைன் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் முன்பதிவு பிப்ரவரி 2024 மாத பிற்பகுதியில் திறக்கப்பட்டது. ஹூண்டாய் இதை இரண்டு வேரியன்ட்களில் வழங்குகிறது: N8 மற்றும் N10. அதன் வேரியன்ட் வாரியான அறிமுக விலை விவரங்கள் பின்வருமாறு:
வேரியன்ட் |
விலை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) |
N8 MT |
ரூ.16.82 லட்சம் |
N8 DCT |
ரூ.18.32 லட்சம் |
N10 MT |
ரூ.19.34 லட்சம் |
N10 DCT |
ரூ.20.30 லட்சம் |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஸ்போர்ட்டியர் கிரெட்டாவை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த வேரியன்ட்களில் ஒவ்வொன்றும் என்ன வசதிகளை கொண்டுள்ளது என்பதை கீழே பார்க்கலாம்:
தனித்துவமான வசதிகள் |
N8 |
N10 (N8 -க்கு மேல்) |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
*DCT வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்
கிரெட்டா N லைன் வழக்கமான கிரெட்டாவின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் டூயல் கேமரா டேஷ்கேமுடன் கிட்டத்தட்ட அதே வசதிகளைக் கொண்டுள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள பொதுவான வசதிகளில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இங்குள்ள ரேஞ்ச்-டாப்பிங் N10 டிரிம் -க்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. N10 DCT வேரியன்ட்டில் ADAS வசதி சேர்க்கப்பட்டிருப்பதால் வழக்கமான க்ரூஸ் கன்ட்ரோலுக்கு பதிலாக அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலை பெறுகிறது.
டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் மட்டும்
ஹூண்டாய் கீழே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் ஒரே ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்குகிறது:
விவரங்கள் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
160 PS |
டார்க் |
253 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
கிளைம்டு மைலேஜ் |
18 கிமீ/லி 18.2 கிமீ/லி |
விலை என்ன?
ஹூண்டாய் கிரெட்டா N லைன் வழக்கமான கிரெட்டாவுடன் ஒப்பிடும் போது ரூ.16.82 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது கியா செல்டோஸ் GTX+ மற்றும் எக்ஸ்-லைன், மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கும் போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: Hyundai Creta N Line மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
மேலும் படிக்க: கிரெட்டா N லைன் ஆன் ரோடு விலை