மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் இன்ட்டீரியர் விவரம் வெளியாகியுள்ளது.
published on மார்ச் 07, 2024 07:15 pm by sonny for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
முந்தைய N லைன் மாடல்களை போலவே கிரெட்டா N லைன் கேபினும் டாஷ்போர்டில் ரெட் கலர் இன்செர்ட்களுடன் டேஷ்போர்டையும் கிராஸ் ஸ்டிச்சிங் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.
-
கிரெட்டா N லைன் டூயல்-இண்டெகிரேட்டட் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்களை சுற்றி ரெட் கலர் இன்செர்ட்டை பெறுகிறது.
-
டாஷ்போர்டின் பயணிகள் பக்கத்திலும் ரெட் ஆம்பியன்ட் லைட்ஸ்.
-
N லைன் பிராண்டட் ஸ்டீயரிங் வீல் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கியர் செலக்டர் ஆகியவற்றுடன் அனைத்து பிளாக் தீம்களையும் கொண்ட ரெட் ஸ்டிச் இருக்கும்.
-
பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட் மற்றும் ADAS ஆகியவையும் உள்ளன.
-
160 PS டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டிருக்கும்.
ஹூண்டாய் கிரெட்டா N லைன் கேபின் காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஸ்போர்டியர் பதிப்பிற்கான மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு ஸ்டைலை காட்டும் வகையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான அமைப்பிலோ அல்லது வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இப்போது பிளாக் அவுட் கேபினில் பல்வேறு ரெட் இன்செர்ட்கள் உள்ளன. இது மற்ற ஹூண்டாய் N லைன் மாடல்களிலும் உள்ளதைப் போலவே இருக்கின்றது.
டாஷ்போர்டில் ரெட் ஆக்ஸன்ட்ஸ்
கிரெட்டா N லைன் டாஷ்போர்டில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் கேஜ் கிளஸ்டருக்கான இன்டகிரேட்டட் 10.25-இன்ச் டிஸ்ப்ளேவை சுற்றியுள்ள ரெட் இன்செர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் பயணிகள் பக்கத்தில் மற்றொரு ரெட் இன்செர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் ஏசி வென்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறிய ஸ்டோரேஜ் பிளேட் ரெட், ஆம்பியன்ட் லைட்களையும் கொண்டுள்ளது.
N லைன் எலமென்ட்கள்
வடிவமைப்பை பொறுத்தவரையில் கிரெட்டா N லைனில் உள்ள மற்றொரு எதிர்பார்க்கப்படும் மாற்றம் என்னவென்றால் இது மாடல் பிரத்தியேகமான ஸ்டீயரிங் மற்றும் டிரைவ்-செலக்டரை பெறுகிறது. இரண்டுமே N லைன் பிராண்டிங் மற்றும் லெதரெட் ஃபினிஷ் ரெட் கிராஸ் ஸ்டிச் ஆகியவற்றைப் பெறுகின்றன. இது ஆக்சலரேஷன் மற்றும் பிரேக் பெடல்களுக்கு மெட்டல் ஃபினிஷிங்கை பெறுகிறது. மேலும் N லைன் பிராண்டிங் மற்றும் வெவ்வேறு அப்ஹோல்ஸ்டரியை இருக்கைகளில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Hyundai Creta N Line vs Hyundai Creta: வெளிப்புற மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன
வசதிகளுடன் நிரம்பியுள்ள கிரெட்டா N லைன்
கிரெட்டா N லைன் வேரியன்ட்கள் வழக்கமான கிரெட்டா எஸ்யூவியின் ஹையர் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதில் உள்ள சில முக்கிய வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் பனோரமிக் சன்ரூஃப் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் 8-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டிரைவ் மோடுகள் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை கிடைக்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை கிரெட்டா N லைன் 6 ஏர்பேக்குகள் ADAS மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வரும்.
கிரெட்டா N லைன் செயல்திறன்
வழக்கமான கிரெட்டாவில் உள்ள அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோலை ஹூண்டாய் கிரெட்டா N லைன் பெறும். இது 160 PS மற்றும் 253 Nm அவுட்புட்டை கொடுக்கின்றது. வழக்கமான கிரெட்டா அந்த இன்ஜினை 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்குகிறது, N லைன் 6-ஸ்பீடு மேனுவல் உடனும் கிடைக்கும்.
இருப்பினும் கிரெட்டா N லைனை அதன் வழக்கமான எஸ்யூவி பதிப்பைக் காட்டிலும் சிறப்பாக காட்டுவதற்கு மாற்ற சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் சிறிய மெக்கானிக்கல் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய டூயல்-டிப் செட்டப் அதற்கு ஒரு காரணமாக இருக்கும். மேலும் ஸ்போர்ட்டி சவுண்டிங் எக்ஸாஸ்ட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா N லைன் மார்ச் 11 ஆம் தேதி ஆரம்ப விலை ரூ.17.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகமாகும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் வேரியன்ட்கள் மற்றும் கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய கார்களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை