Hyundai Creta EV அறிமுக தேதி உறுதியாகியுள்ளது
published on டிசம்பர் 17, 2024 03:57 pm by dipan for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
- 66 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்த வருடம் ஜனவரி 17 அன்று கிரெட்டா EV அறிமுகப்படுத்தப்படும். மேலும் இது இந்தியாவில் கியா -வால் விற்பனை செய்யப்படவுள்ள விலை குறைவான காராகவும் இருக்கும்.
-
வெளிப்புற வடிவமைப்பு கிரெட்டாவை போலவே இருந்தாலும் EV என்பதை காட்டும் வகையில் சில குறிப்பிட்ட மாற்றங்களுடன் இருக்கும். மேலும் எலக்ட்ரிக் கார் என்பதை காட்டும் வகையில் இதில் குளோஸ்டு கிரில் இருக்கும்.
-
புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டூயல் ஸ்கிரீன் செட்டப்பை இருக்கும்.
-
பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பேட்டரி விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட 400 கி.மீ தூரம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா -வின் எலக்டரிக் வெர்ஷனுக்கு ஹூண்டாய் கிரெட்டா EV என்று பெயரிடப்பட வாய்ப்புள்ளது. மேலும் எங்கள் இந்திய சாலைகளில் நீண்ட காலமாகவே சோதனை செய்யப்பட்டு வருகிறது. வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி 2025 ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த்தது. இப்போது கியா நிறுவனம் ஜனவரி 17 ஆம் தேதி கிரெட்டா EV அறிமுகப்படுத்தப்படும் என தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது காரை பற்றி விரிவாக பார்ப்போம்:
கிரெட்டா போன்ற வடிவமைப்பு
கிரெட்டா EV -ன் அதிகாரப்பூர்வ படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை ஆனால் ஸ்பை ஷாட்களை பார்க்கும் போது எலக்ட்ரிக் கிரெட்டா அதன் ICE காரை போலவே இருக்கும் என தெரிகிறது. வெர்டிகலான ஹெட்லைட் அமைப்பு, கனெக்டட் LED DRLகள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை இதில் இருக்கும்.
இருப்பினும் இது ஒரு குளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் ஏரோடைனமிக்ஸ் ரீதியாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் உட்பட சில EV க்கென இருக்கும் மாற்றங்களுடன் வரலாம்.
உட்புறம் கிரெட்டாவை போலவே இருக்கும்
வெளிப்புறமானது கிரெட்டாவை போல இருப்பது மட்டுமல்லாமல் உட்புறமும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூ -வியை போலவே இருக்கும். ஸ்பை ஷாட்கள் மூலமாக இது டூயல்-டோன் இன்டீரியர் மற்றும் டேஷ்போர்டில் டூயல்-ஸ்கிரீன் செட்டப்பை உடன் வரும் என்று தெரியவந்துள்ளது. ஹூண்டாய் அயோனிக் 5 EV -யை போலவே கிரெட்டா EV ஆனது 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 2024 இல் இந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்து எலக்ட்ரிக் கார்களின் விவரங்கள்
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
முன்பே குறிப்பிட்டது போல கிரெட்டா EV ஆனது டாஷ்போர்டில் டூயல் ஸ்கிரீன்களுடன் மட்டுமில்லாமல் வழக்கமான கிரெட்டாவில் காணப்படும் அதே 10.25-இன்ச் யூனிட் உடன் வரலாம். பனோரமிக் சன்ரூஃப், டூயல்-சோன் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற மற்ற வசதிகளும் சேர்க்கப்படும். வெஹிகிள் டூ லோடிங் (V2L) சார்ஜிங் மற்றும் மல்டி-லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற EV-சார்ந்த வசதிகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது 400 கி.மீ தூரம் மற்றும் சிங்கிள் மோட்டார் செட்டப் உடன் மல்டி பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா EVயின் விலைகள் ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது டாடா கர்வ்வ் EV, மஹிந்திரா BE 6, MG ZS EV மட்டுமில்லாமல் வரவிருக்கும் மாருதி eVX கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.
குறிப்பு: ICE-பவர்டு கிரெட்டாவின் படங்கள் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன்ரோடு விலை