• English
  • Login / Register

ரூ.17.99 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகமானது Hyundai Creta Electric

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் க்காக ஜனவரி 18, 2025 10:19 am அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 28 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அதிகபட்சமாக 473 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது.

Hyundai Creta Electric at auto expo 2025

  • கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.17.99 லட்சம் முதல் ரூ.23.50 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.

  • இது எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ் என 4 வேரியன்ட்களில் கிடைக்கும்.

  • டூயல் ஜோன் ஏசி, டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS ஆகிய வசதிகள் காரில் உள்ளன.

  • 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி பேக்குகள் உள்ளன; 171 PS வரை அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் காரில் உள்ளது

இந்தியாவில் ஹூண்டாயின் மிகவும் விலை குறைவான மற்றும் முதல் முழுமையாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ரூ. 17.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. எக்ஸிகியூட்டிவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸலன்ஸ் என 4 நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதனுடன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கிடைக்கும்.

வேரியன்ட் வாரியான விலை விவரம்

வேரியன்ட்

மீடியம் ரேஞ்ச் (42 kWh)

லாங் ரேஞ்ச் (51.4 kWh)

எக்ஸிகியூட்டிவ்

ரூ.17.99 லட்சம்

ஸ்மார்ட்

ரூ.19 லட்சம்

ஸ்மார்ட் (O)

ரூ.19.50 லட்சம்

ரூ.21.50 லட்சம்

பிரீமியம்

ரூ.20 லட்சம்

எக்ஸலென்ஸ்

ரூ.23.50 லட்சம்

மேலே உள்ள அட்டவணையில் உள்ளபடி பெரிய பேட்டரி பேக் மிட்-ஸ்பெக் ஸ்மார்ட் (O) மற்றும் அனைத்து எலக்ட்ரிக் கிரெட்டாவின் டாப்-ஸ்பெக் எக்ஸலன்ஸ் டிரிம்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 11 கிலோவாட் ஏசி சார்ஜரின் விலை விட ரூ.73,000 கூடுதலாகும். (மேலே அட்டவணையில் உள்ள விலையோடு சேர்க்கப்படவில்லை)

மேலும் பார்க்க: டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் பதிப்பு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது

வடிவமைப்பு

கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவியின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பைப் போலவே இருக்கிறது. இருப்பினும் எலக்ட்ரிக் கார் என்பதை காட்ட நுட்பமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குளோஸ்டு ஆஃப் கிரில், ஆக்டிவ் ஏர் ஃபிளாப்ஸ், 17-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட பம்பர்கள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.

Hyundai Creta Side

டேஷ்போர்டு அமைப்பைப் ICE வெர்ஷன் போலவே இருகிறது. ஆனால் அயோனிக் 5 இல் காணப்படுவது போல் புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது. இது பிளாக் மற்றும் வொயிட் சீட் செட்டப்பை கொண்டுள்ளது. கேபினில் நீல நிற ஸ்பிளாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரின் ஆல் எலக்ட்ரிக் தன்மையை காட்டுகிறது.

எலக்ட்ரிக் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்கிற்கு இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்கியுள்ளது: 42 kWh யூனிட் ARAI கிளைம்டு 390 கி.மீ ரேஞ்சையும் மற்றொன்று 51.4 kWh அலகு 473 கி.மீ கிளைம்டு ரேஞ்சையும் கொண்டுள்ளது. ஆல்-எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 171 PS வரை (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து) முன் சக்கரங்களுக்கு பவ்ர் கொடுக்கும் வகையிலான எலக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.

காரிலுள்ள வசதிகள்

Hyundai Creta Electric cabin

டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்னொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வருகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் டூயல்-ஜோன் ஏசி ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் ஆகியவை உள்ளன.

போட்டியாளர்கள்

Hyundai Creta Electric launches at auto expo 2025

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் MG ZS EV, மாருதி சுஸூகி மற்றும் விட்டாரா, டாடா கர்வ்வ் EV மற்றும் மஹிந்திரா பிஇ 6 போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் பார்க்க: மாருதி சுஸூகி இ விட்டாரா ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்டது, 8 படங்களில் காரை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா எலக்ட்ரிக்

explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வேரியன்ட்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience