Hyundai Creta மற்றும் Verna பெட்ரோல்-சிவிடி யூனிட்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
published on மார்ச் 21, 2024 03:15 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
2023 பிப்ரவரி மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையில் தயாரிக்கப்பட்ட யூனிட்களுக்காக ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா மற்றும் வெர்னாவின் 7698 யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது.
-
எலக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோலரில் சிக்கல் ஏற்படலாம் என்பதற்காக இந்த ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இது CVT ஆட்டோமேட்டிக் உடன் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும் வேரியன்ட்களை மட்டுமே உள்ளடக்கியது.
-
பாதிக்கப்பட்ட மாடல்களை அவற்றின் தற்போதைய நிலையில் இயக்குவது பாதுகாப்பானதா என்பது இன்னும் தெரியவில்லை.
-
மேலும் விவரங்களுக்கு கார் உரிமையாளர்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தை 1800-114-645 என்ற எண்ணில் அழைக்கலாம்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா எஸ்யூவி மற்றும் வெர்னா செடான் ஆகிய கார்களின் 7698 யூனிட்களை சர்வீஸ் செய்ய தானாக முன்வந்து ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. இந்த ரீகால் ஆனது CVT ஆட்டோமேட்டிக் உடன் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் வேரியன்ட்களை உள்ளடக்கியது.
ரீகால் பற்றிய கூடுதல் விவரங்கள்
எலக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோலரில் சிக்கல் ஏற்படலாம் என்பதனால் அதை சரி செய்வதற்கு இந்த அழைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் காரணமாக எலக்ட்ரானிக் ஆயில் பம்பின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாகலாம். பாதிக்கப்பட்ட யூனிட்கள் பிப்ரவரி 13 2023 மற்றும் ஜூன் 06 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்டவையாகும்.
உறுதிப்படுத்தப்பட வில்லை என்றாலும் கூட ஹூண்டாய் டீலர்ஷிப்கள் இந்த ரீகாலின் ஒரு பகுதியாக ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்களைத் சர்வீஸ் -க்காக தனித்தனியாகத் தொடர்புகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் அருகிலுள்ள ஹூண்டாய் டீலரைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 1800-114-645 என்ற எண்ணில் அதன் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உங்கள் கிரெட்டா அல்லது வெர்னா திரும்ப அழைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?
எஸ்யூவி மற்றும் செடானின் பாதிக்கப்பட்ட யூனிட்கள் அவற்றின் தற்போதைய நிலையில் இயக்கப்படுவது பாதுகாப்பானதா என்பதை ஹூண்டாய் குறிப்பிடவில்லை என்றாலும் உங்கள் வாகனம் திரும்ப அழைக்கப்படுகிறதா என்பதை விரைவில் சரி பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். ஆம் எனில் உங்கள் வாகனத்தை எந்த சிக்கலும் இல்லாமல் வைத்திருக்க எந்த தாமதமும் இன்றி அதை பரிசோதிக்கவும்.
மேலும் பார்க்க: காண்க: 2024 ஹூண்டாய் கிரெட்டா வேரியன்ட்கள் விளக்கப்பட்டுள்ளன: நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
மற்ற பவர்டிரெய்ன்கள்
மேலே குறிப்பிட்டுள்ள 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பவர்டிரெய்ன் தவிர கிரெட்டா மற்றும் வெர்னா இரண்டும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட்டுடன் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொறுத்தவரையில் 6-ஸ்பீடு MT 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆகியவை இந்த இன்ஜினுடன் கிடைக்கிறன.
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful