மாருதியின் ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவை பெற, நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங ்கள்!
modified on நவ 25, 2015 06:06 pm by sumit for மாருதி டிசையர் 2017-2020
- 15 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மாருதி சுசுகியின் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய அந்நிறுவனத்தின் பிரபலமான கார்களின் எல்லா வகைகளிலும் பயன்படுத்தும் வகையிலான இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவற்றை அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும். ஏனெனில் பாதுகாப்பை பெறுவதற்காக இனி ஆடம்பர அம்சங்களுக்கு செலவு செய்யாமல், பாதுகாப்பு கிட் பெற மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதை குறித்து நமது வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், இந்த பாதுகாப்பு கிட் பெற நுகர்வோர் எவ்வளவு அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பதை குறித்த ஒரு சிறிய அளவிலான ஆய்வை செய்துள்ளோம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இவ்விரு கார்களின் (டிசையர் மற்றும் ஸ்விஃப்ட்) விற்பனை முறையும், இந்த வாகன தயாரிப்பு தொழில்துறையின் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக (ட்ரையல்பிளைஸர்) செயல்படுபவை. ஏனெனில் 2014-15 ஆம் நிதியாண்டில் இவ்விரு கார்களின் விற்பனையும், மாதந்தோறும் ஏறக்குறைய 17,000 யூனிட்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாடல் |
பாதுகாப்பு கிட் இல்லாமல் (ரூபாய்) |
பாதுகாப்பு கிட் உட்பட (ரூபாய்) |
வித்தியாசம் (ரூபாய்) |
ஸ்விஃப்ட் LDI |
584341 |
604,341 |
20,000 |
ஸ்விஃப்ட் VXI |
540180 |
560,180 |
20,000 |
ஸ்விஃப்ட் VDI |
631184 |
643,184 |
12,000 |
ஸ்விஃப்ட் LXI |
478299 |
490,000 |
11,701 |
டிசையர் LDI |
599451 |
619,450 |
19,999 |
டிசையர் VXI |
594556 |
614,555 |
19,999 |
டிசையர் VDI |
694963 |
706,963 |
22,000 |
டிசையர் LXI |
528350 |
540,000 |
11,650 |
டிசையர் VXI AT(O) |
673974 |
693,974 |
20,000 |
இது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடேட் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், “இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்களில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய இரண்டும் உட்படுகின்றன. இந்திய வாகன தயாரிப்பு தொழில்துறையின் உருவாக்கத்தில் இவ்விரண்டும் முக்கிய பங்கு வகித்துள்ளன. அவற்றில் உள்ள சமகால ஸ்டைல், உன்னத இதமான அனுபவம், செளகரியமான அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகிய தன்மைகளுக்காக அவை பெயர்பெற்றுள்ளன. ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்களின் எல்லா வகைகளிலும் டிரைவர் மற்றும் சக-டிரைவர் ஆகியோருக்கான ஏர்பேக்குகள் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) ஆகியவற்றை அளிப்பதன் மூலம் இவ்விரண்டின் பிரபலத் தன்மையை வாடிக்கையாளர்கள் இடையே இன்னும் அதிகமாக பலப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful