• Maruti Dzire 2017-2020

மாருதி டிசையர் 2017-2020

change car
Rs.5.70 - 9.53 லட்சம்*
இந்த கார் மாதிரி காலாவதியானது

மாருதி டிசையர் 2017-2020 இன் முக்கிய அம்சங்கள்

என்ஜின்1197 cc - 1248 cc
பிஹச்பி74.0 - 83.14 பிஹச்பி
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மைலேஜ்20.85 க்கு 28.4 கேஎம்பிஎல்
எரிபொருள்பெட்ரோல்/டீசல்
boot space378 L (Liters)

டிசையர் 2017-2020 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்

மாருதி டிசையர் 2017-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.5.70 லட்சம்* 
டிசையர் 2017-2020 லெக்ஸி 1.21197 cc, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.5.89 லட்சம்* 
டிசையர் 2017-2020 வக்ஸி 1.2 பிஸிவ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.6.58 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஐடிஐ1248 cc, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.6.67 லட்சம்* 
டிசையர் 2017-2020 வக்ஸி 1.21197 cc, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.6.79 லட்சம்* 
டிசையர் 2017-2020 அன்ட் வக்ஸி பிஸிவ்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.7.05 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.2 பிஸிவ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.7.20 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஎம்பி விஎக்ஸ்ஐ1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.7.32 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஸ்க்சி 1.21197 cc, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.7.48 லட்சம்* 
டிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர்1197 cc, மேனுவல், பெட்ரோல், 20.85 கேஎம்பிஎல்EXPIREDRs.7.50 லட்சம்* 
டிசையர் 2017-2020 விடிஐ1248 cc, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.7.58 லட்சம்* 
டிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிஸிவ்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.7.67 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.8.01 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஎம்டி விடிஐ1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.8.05 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஸ்க்சி பிளஸ் பிஸிவ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.8.10 லட்சம்* 
டிசையர் 2017-2020 இசட்டிஐ1248 cc, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.8.17 லட்சம்* 
டிசையர் 2017-2020 இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.8.28 லட்சம்* 
டிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.0 கேஎம்பிஎல்EXPIREDRs.8.57 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐ1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.8.63 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.8.80 லட்சம்* 
டிசையர் 2017-2020 இசட்டிஐ பிளஸ்1248 cc, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.9.06 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஜிஎஸ் இசட்டிஐ பிளஸ்1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDRs.9.20 லட்சம்* 
டிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்1248 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்EXPIREDLess than 1 மாத காத்திருப்புRs.9.53 லட்சம்* 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி டிசையர் 2017-2020 விமர்சனம்

இந்த புதிய மாருதி சுஸூகி டிசையர், பிரிமியம் தன்மையை உணர வைக்கும் தன்மை கொண்டது.

வெளி அமைப்பு

பழைய டிசையர் காருக்கு பெரிய அளவிலான வெற்றி கிடைத்தது என்றாலும், சிறந்த தோற்றத்தை பெற்றிருக்கவில்லை. ஆனால் இந்த புதிய மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த டிசையர், அழகாக காட்சி அளிக்கிறது. மேலும் பசுமையாக, நவீன தன்மையோடு பார்ப்பதற்கு இதன் பிரிவை கடந்த ஒரு சேடன் போல தெரிகிறது.

இது ஒரு வகையில் பெரியதாகவும் இருக்கிறது. அந்த காரின் நீளத்தில் அல்ல, அகலத்தில் 40 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீல்பேஸ் 20 மிமீ வரை அதிகரித்துள்ளது. இந்த புதிய டிசையரின் உயரம் 40 மிமீ வரை குறைக்கப்பட்டு, கிரவுண்டு கிளியரன்ஸ் 170 மிமீ இருந்து 163 மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய இந்த மாற்றங்கள் மூலம் டிசையர் காருக்கு, அதிக சமநிலையையும் கவர்ச்சிகரமான உருவத்தையும் பெற்றுள்ளது. 4 மீட்டருக்கு குறைவு என்ற விதிமுறைகளில் உட்படுத்தாமல் இருந்திருந்தால், இந்த புதிய டிசையர் இன்னும் கூட கவர்ச்சிகரமாக தெரிந்து இருக்கும். கோவா சாலைகளில் இந்த புதிய டிசையர் உடன் சென்ற போது, அநேகரின் கவனத்தை ஈர்த்ததோடு, சில வாகன ஓட்டுநர்கள் இந்த சேடனை உற்று பார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரின் முன்பக்கத்தில் உள்ள அழகான புதிய கிரில், அடர்த்தியான அடுக்கில் அமைந்த கிரோம் அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வகையில், இந்த அமைப்பை பார்த்தால் ஃபியட் புண்டோ இவோ காரில் உள்ள கிரில்லை நினைவுப்படுத்துகிறது. இது தவிர, டிஆர்எல்-களை கொண்ட அழகான எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்களை கொண்டுள்ளது. பொதுவாக இது போன்ற அமைப்பை, உயர்தர பிரிவைச் சேர்ந்த ஹோண்டா சிட்டி போன்ற கார்களில் மட்டுமே காண முடிந்தது. ஆனால் சமீபகாலமாக இக்னீஸ் போன்ற சிறிய வகை கார்களிலும் காண கிடைக்கிறது. முன்பக்கத்தை மேலும் அழகுப்படுத்து வகையில், ஃபேக் லெம்ப்களின் கீழே மெல்லிய மீசை போன்ற வடிவில் அமைந்த கிரோம் உள்ளீடுகளை கொண்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த அம்சங்களுடன் புதிய 15 இன்ச் பிரிஸியன் கட் அலாய்கள் உள்ளிட்ட அனைத்தும் உயர்தர வகைகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது என்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறைந்த வி வகையில், செயல்பாட்டிற்கு 14 இன்ச் ஸ்டீல் வீல்கள், கவர்களுடன் அளிக்கப்படுகின்றன.

காரின் பின்பக்கத்தில், தற்போது எல்இடி அலகுகள் கொண்ட டெயில்லெம்ப்கள் உடன் ஒருங்கிணைந்த வகையில் காணப்படும் பூட் நீளத்திற்கு இணையாக, ஒரு மெல்லிய கிரோம் ஸ்ட்ரீப் ஓட்டத்தை கொண்டு, எளிய முறையில் விடப்பட்டுள்ளது. மிகவும் ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள பூட் அதிக சிறப்பாக காட்சி அளிக்கிறது. இதை பார்க்கும் போது, 4 மீட்டருக்கு குறைவான உயரத்தில் அமைய வேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டது போல தெரியவில்லை. உங்கள் சுமைகளை அதிக அளவில் சுமந்து செல்லும் வகையில், பூட் இடவசதியை 62 லிட்டர் வரை அதிகரித்து மொத்தம் 378 லிட்டர் என்று அமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும், இதன் போட்டியாளர்களான டாடா டிகோர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகியவை முன் குறைவு தான். இவை அனைத்தும் 400 லிட்டருக்கு மேற்பட்ட பூட் இடவசதியை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், பெரிய பைகளை வைப்பதற்கு எதுவாக பெரிதாக இருப்பதோடு, கேமராவும் கொண்டதாக உள்ளது (இதை அறிய கேலரியில் உள்ள படங்களை பார்க்கவும்).

Exterior Comparison

Hyundai Xcent
Volkswagen Ameo
Length (mm)3995mm3995mm
Width (mm)1660mm1682mm
Height (mm)1520mm1483mm
Ground Clearance (mm)165mm165mm
Wheel Base (mm)2425mm2470mm
Kerb Weight (kg)10801153kg
 

Boot Space Comparison

Hyundai Xcent
Volkswagen Ameo
Volume407330

உள்ளமைப்பு

இந்த காரின் உள்ளே விரும்பத்தக்க அளவில் சரக்குகளை சுமப்பதோடு, டிசையர் கேபின் உள்ளே எவ்வளவு சுமைகளை ஏற்ற முடியும் என்று பார்த்து ஆச்சரியப்பட நேரிடும். காரின் உள்ளே முதலில் உங்கள் கண்களில் தெரிவது இரட்டை டோன் உடன் கூடிய டேஸ்போர்டு ஆகும். அதனுடன் கிரோம் வரிசையை கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும்செயற்கையான மர உள்ளீடுகள் ஆகியவை பார்ப்பதற்கு ஆச்சரியத்தை (இவை மலிவு விலையில் கிடைப்பவை அல்ல என்பதை படிக்க) ஏற்படுத்துவதாக உள்ளன. தட்டையான அடி பாகத்தை கொண்ட ஸ்டீயரிங் வீல், இந்த பிரிவில் முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது துவக்க வகையான எல் கார்களில் இருந்து எல்லாவற்றிலும் அளிக்கப்பட்டுள்ளது என்பது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.உயர் வகைகளுக்கு செல்லும் போது, ஸ்டீயரிங் வீல் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, செயற்கையான லேதர் மூலம் சூழப்பட்டதாக உள்ளது. ஆடியோ மற்றும் தொலைபேசி பயன்பாடுகளுக்கு ஸ்டீயரிங் வீல்லில் பட்டன் அளிக்கப்பட்டுள்ளன. இவை தொடுவதற்கு மென்மையாகவும் சந்தையில் உயர்ந்ததாகவும் தெரிகிறது.ஆனால் பவர் விண்டோ செயல்பாட்டிற்கு டோரில் அளிக்கப்பட்டுள்ள சுவிட்ச்கள் இதற்கு ஒத்தவை என்று கூற முடியாது.ஏஎம்டி வகையில் உள்ள கியர் லீவரில் கூட அந்த மேன்மையான தன்மை தொடர்கிறது. பிரிமியம் அனுபவத்தை அளிக்கக் கூடிய லேதர் மூலம் கியர் லீவர் சூழப்பட்டு, அழகியலை கூட்டும் வகையில் கிரோம் சுற்றுப்புறத்தையும் பெற்றுள்ளது.

காரில் உள்ள டேஸ்போர்டு ஓட்டுநரை நோக்கி தெளிவாக தெரியும் கோணத்தில் வைக்கப்பட்டு உள்ளதோடு, 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு பார்க்கும் வகையில் உள்ளது. இதன்மூலம் தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை பயன்படுத்த முடிகிறது. 6 ஸ்பீக்கர்களை கொண்ட ஒலி தரம் சிறப்பாக உள்ளது. ஆனால் இதை உயர் வகையில் மட்டுமே பெற முடிகிறது. துவக்க வகைகளில் யூஎஸ்பி, ஆக்ஸ், சிடி மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவை உடன் செயல்படும் வழக்கமான ஆட்டோ சிஸ்டம் மட்டுமே கிடைக்கிறது. இவற்றை நாங்கள் சோதித்து பார்க்க முடியவில்லை என்றாலும், அவற்றின் படங்களை வைத்து பார்க்கும் போது, ஸ்மார்ட்ப்ளே சிஸ்டம் உடன் கூடிய பிரிமியம் தரத்திற்காக சளைத்தவை ஆக இருக்காது என்று தோன்றுகிறது. அதேபோல, வழக்கமான பேனல் இடைவெளிகளை கொண்டு சில பகுதிகளில் பிளாஸ்டிக் கச்சிதமாகவும் முழுமையாகவும் இல்லை.

இந்த காரில் ஓட்டுநருக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி, ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், மின்னூட்ட முறையில் மடக்க கூடிய மற்றும் கட்டுப்படுத்த கூடிய வெளிப்புற பின்பக்க மிரர்கள், ஓட்டுநரின் பக்கத்தில் உள்ள தானியங்கி பவர் விண்டோ மேலே கீழே செல்லும் வசதி ஆகியவை உள்ளது. முன்பக்க சீட்கள் பெரியதாகஇருப்பதால், பெரிய உருவம் கொண்ட நபர்கள் கூட வசதியாக அமரமுடியும். மாருதி இன்னும் ஒரு படி முன்னே சென்று, ஓட்டுநருக்கு ஒரு ஆம்ரெஸ்ட்டை அளித்து இருக்கலாம். ஏஎம்டி வகையிலாவது அப்படி ஒரு வசதியை அளித்து இருக்கலாம்.

இந்த காரில் வீல்பேஸ் மற்றும் அகலம் ஆகியவை அதிகரிக்கப்பட்டு உள்ளதால், கேபின் இடவசதி மேம்பட்டுள்ளது. இதில் அதிகமாக பயன் பெறுபவர்கள், பின்பக்க சீட்டில் அமரும் பயணிகள் தான். உங்கள் கால்களை இதமாக விரித்து கொள்ளும் வகையில் முட்டி இடவசதி குறிப்பிட தகுந்த முறையில் உள்ளது.உயரம் குறைவாக உள்ளது என்ற ஒருபிரச்சனையை தவிர, கேபின் உள்ளே ஹெட்ரூம் அதிகமாக பாதிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 6 அடிக்கு குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு பாதிப்பு அடைவதில்லை. தோள்பட்டை இடவசதி கூட சற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 3 பெரியவர்கள் கச்சிதமான அமர்ந்து சாலை பயணத்தில் செல்ல முடிகிறது. நகர பகுதிக்குள் செல்லும் குறுகிய பயணங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கும் போது, பின்பக்கத்தில் ஒரு புதிய ஏசி திறப்பி இருப்பதால், கேபினை குளுமையாக உணர வைக்கிறது. நடுவில் உள்ள சீட் பயன்பாட்டில் இல்லாத போது, அதை அப்படியே மடக்கி கப் ஹோல்டர் உடன் கூடிய ஒரு சென்டர் ஆம் ரெஸ்ட் ஆக பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர பின்பக்கத்தில் இன்னும் அநேக பொருட்கள் வைக்கும் அறைகளை காண முடிகிறது. டோரில் பாட்டில் ஹோல்டர்கள், சீட் பின்னால் பாக்கெட் மற்றும் ஏசி திறப்பிக்கு அடுத்தப்படியாக மொபைல் ஹோல்டர் ஆகியவை உள்ளன.மேலும் நீங்கள் பயன்படுத்தும்சாதனங்கள் சார்ஜ் இழந்து நிலைக்கு வந்தால், அதை மீண்டும் உயிர் அளிக்க உதவும் பவர் சாக்கெட் கூட அளிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு

டிசையர் காரில் உள்ள ஒரு மிகப் பெரிய காரியம் என்றால், அதில் தற்போது இரட்டை ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. துவக்க வகையான எல் முதல் எல்லாவற்றிலும் வழங்கப்படுகிறது. பழைய மாடலான எல் (தேர்விற்குரியது) வகையின் விலையை குறைக்க, இந்த பாதுகாப்பு அம்சங்களுக்கு ரூ. 7ஆயிரம் என்று அறிவித்துள்ளது. பாதுகாப்பை முன்னுறுத்தி, மேற்கண்ட இந்த உயர்வான அறிவிப்பை மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. மாருதியின் ஹார்ட்டெக்ட் தளத்தில் டிசையர் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்காலத்திற்கு ஏற்றவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் இளம் குழந்தைகளின் பாதுகாப்பில் ஈசோபிக்ஸ் குழந்தை சீட் ஆங்கரேஜ்கள், முன்பக்க சீட் பெல்ட்கள் உடன் கூடிய ப்ரீடென்ஸர்கள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர் உள்ளிட்ட மற்ற தரமான பாதுகாப்பு அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸர், இசட் வகையில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வேண்டுமானால், இசட்+ வகையை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். தற்போதைய காலத்தில் உள்ள சாலை நிலவரத்தை உணர்ந்தவர்களாக, பார்க்கிங் சென்ஸர்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை மாருதி நிறுவனம் அறிந்து, வி வகையில் இருந்து வழங்கி உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். வி வகையில் இருந்து சென்டரல் லாக்கிங், ஸ்பீடு சென்ஸிங் டோர் லாக்கிங் மற்றும் ஆன்டி-தேஃப்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் முன்பு எல்லா வகைகளுக்கும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இவை அனைத்து வி வகைகளில் இருந்து மட்டுமே அளிக்கப்படுகிறது.

செயல்பாடு

பழைய டிசையர் காரில் பயன்படுத்தப்பட்ட நம்பகமான அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின்கள், புதிய டிசையர் காரையும் இயக்க உள்ளன. எனவே ஆற்றல் மற்றும் முடுக்குவிசையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே அளவில் தொடர்கின்றன. இதில் மாற்றம் அடைந்திருப்பது, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டுமே.‘வி’ வகையில் இருந்து உயர் தர வகைக்கு முன்னால் வரைக்கும் உள்ள எல்லா வகைகளிலும் ஒரு 5 ஸ்பீடு ஏஎம்டி (ஆட்டோமேட்டேடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்) யூனிட்டை, மாருதி நிறுவனம் அளித்துள்ளது. இந்த புதிய டிசையர் காரின் எடையில் கூட, என்ஜினை பொறுத்து 85 முதல் 95 வரையிலான எடை குறைக்கப்பட்டுள்ளது.

இக்னீஸ் காரில் இருந்த ஏஎம்டி அமைப்பை கண்டு நாங்கள் மிகவும் கவரப்பட்டோம். அதேபோல டிசையர் காரில் உள்ள ஏஎம்டி அமைப்பிலும் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளது.இது குறித்து மாருதி நிறுவனம் கூறுகையில், டிசையர் காரில் உள்ள ஏஎம்டி கியரிங் அமைப்பை முடுக்கி உள்ளதோடு, ஒழுங்குப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. நகர்புறத்தில் டிசையர் டீசல் ஏஎம்டி வைத்து ஓட்டுவது சுமூகமாக உள்ளது. மேலும் அவ்வப்போது நிறுத்துவதும் போவதுமான சூழ்நிலைகளில் கூடுதல் சுமூக தன்மையை அளிக்கிறது. ஆனால் ஆள்நடமாட்டம் குறைந்த சாலைகளில் ஏஎம்டி கியர்பாக்ஸ்கள் (இக்னீஸ் காரில் ஆச்சரியப்படும் வகையில் இதை காண முடியாது) உடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தலைகுனிவை ஏற்படுகிறது. அதிலும் 2 ஆயிரம் ஆர்பிஎம் என்ற நிலையை ஒட்டி வரும் போது, கியர் உயர்த்த திணறுகின்றன. இந்த நிலையில் முந்திசெல்ல பார்த்தால்? எனவே முன்கூட்டியே உங்கள் இயக்கத்தை நீங்கள் திட்டமிட்டு ஆக்ஸிலேட்டரை அழுத்தி பிடித்து செயல்பட வேண்டும் அல்லது அது கடந்து போகும் வகையில் வேகத்தை குறைத்து கொண்டு பின்செல்ல வேண்டும். எங்களைப் பொறுத்த வரை, மேனுவல் முறையை தேர்ந்தெடுப்பது தான் எளிமையான தேர்வாகதெரிகிறது. ஆனால், உங்கள் இடது கைக்கு தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதிக அளவிலான நெடுஞ்சாலை பயணங்களில் ஈடுபடும் நபராக இருக்கும் பட்சத்தில், டீசல் மேனுவலை தேர்ந்தெடுப்பது நல்லது. கியர் பாக்ஸ் மிகவும் பொறுப்பாக செயல்படுகிறது என்பதோடு, எந்த சிரமமும் இல்லாமல் கியர் மாற்றங்கள் நிகழ்கின்றன. அரிதாக மட்டுமே திணறலை உணர முடியும். எடை குறைவாக இருந்தாலும், டீசல் என்ஜின் சற்று பளுவாக உணரும் என்பதால், அதன் வேகத்தை அடைய நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, எந்த ஒரு தங்குதடையும் இல்லாமல் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் மகிழ்ச்சியாக பயணிக்கலாம். ஒட்டுமொத்தமாக நாம் பார்த்தால், என்ஜின் இதமாகவும் கூடுதல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, குறைந்த சத்தம் கொண்டதாக தற்போது இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் சற்று கடினத் தன்மை இருக்க தான் செய்கிறது.

நீங்கள் வைத்துள்ள நகர்புறத்திலும் சரி, நெடுஞ்சாலையிலும் சரி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்பினால், டிசையர் பெட்ரோல் ஏஎம்டி-

யை தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த என்ஜின் மறுசீரமைப்பு செய்யப்பட்டு நன்றாகவும, ஓட்டுநரின் விருப்பத்திற்கு ஏற்ப கியர் மாற்றங்கள் இதமாகவும் அமைகின்றன.

பயணம் மற்றும் கையாளும் திறன்

இந்த டிசையர் காரில் உள்ள ஒரு காரியமான பயண தன்மை எங்களை மிகவும் பிரமிக்க வைத்தது. அதன் சஸ்பென்ஸன் மிகவும் மிருதுவாகவும் பயணம் மேன்மையாகவும் அமைகிறது. இந்த அனுபவம் ஒரு சேடன் காரில் கூட கிடைப்பது இல்லை என்று கூறுவது பெரிய காரியமாக தோன்றினாலும், அந்த கூற்றில் தவறு இல்லை.சில உடைந்த கரடுமுரடாக சாலைகளில் நாங்கள் பயணித்தோம். ஆனால் டிசையர் காரில் உள்ள சஸ்பென்ஸன் மூலம் எந்த ஒரு குலுக்கத்தையோ அசைவையோ நாங்கள் உணர முடியவில்லை. அதிலும் குறிப்பாக ஏஎம்டி வகைகளில் பிரமாதம்.பழைய டிசையரை போல இல்லாமல், இதில் எந்த ஒரு குலுக்கத்தையும் பின்பக்கத்தில் தெரியவில்லை. இது தவிர, 7 மிமீ அளவிற்கு கிரவுண்டு கிளியரன்ஸ் குறைத்துள்ள நிலையில், வேகத் தடையை கடக்கும் போது, வாகனத்தின் கீழ் பகுதிகள் சாலையில் மோதவில்லை.இதமான பயணத்திற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால், உங்களுக்கு டிசையர் கார் ஏற்றதாக இருக்கும்.

நீண்ட நேரான சாலைகளில் காரின் வேகம் மணிக்கு 100 கி.மீ எட்டிய போதும், டிசையர் நிலையாக செல்வதை உணர முடிந்தது. இதில் உள்ள 186/ 65 அளவிலான டயர்கள், உறுதியான சாலை பிடிப்பை அளிக்கின்றன.ஆனால் சாலை வளைவுகளில், அதே நிலையிலான உறுதியை அளிக்க தவறுகின்றன. குறைந்த வேகத்தில் ஓட்டும் போது, ஸ்டீயரிங் வீல் போதுமான அளவு எடை இறுக்கம் கொண்டதாக தெரிகிறது. ஆனால் கார் சற்று வேகத்தை பெற்ற பிறகு, ஸ்டீயரிங் வீல் லேசாக மாற ஆரம்பிக்கிறது. இதனால்முன் வீல்கள் எந்த நிலையில் பயணிக்கின்றன என்பதை நீங்கள் உறுதியாக கூற முடியாது. காரில் உள்ள பிரேக்குகள் பொறுப்பாக செயல்பட்டு, அதன் வேலை செய்கின்றன. ஆனால் அதிரடி பிரேக்கிங் சூழ்நிலைகளை தவிர்ப்பது நல்லது. 

எரிபொருள் சிக்கனம்

இந்த புதிய மாருதி சுஸூகி டிசையரில் பெட்ரோல் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகியவற்றில் லிட்டருக்கு 22 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது முந்தைய டிசையரை விட லிட்டருக்கு 1.1 கி.மீ. அதிகம் ஆகும்.ஆனால் டீசல் மாடலில் லிட்டருக்கு 28.04 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என்பது நம்ப மறுக்கும் ஒரு காரியமாக உள்ளது. காகித அளவிலாவது இந்தியாவில் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட கச்சிதமான சேடன் மாடலாக டிசையரை காண முடிகிறது. குறிப்பாக, லிட்டருக்கு 25.83 கி.மீ. மைலேஜ் அளித்து இரண்டாவது இடத்தில் உள்ள ஃபோர்டு ஆஸ்பியரை விட சிறந்தது. அதேபோல பெட்ரோல் டிசையர் கூட, அதன் போட்டியாளர்களான டிகோர் மற்றும் எக்ஸ்சென்ட் ஆகியவை முறையே லிட்டருக்கு 20.3 கி.மீ மற்றும் 20.14 கி.மீ. என்ற அளவை மிஞ்சியுள்ளது. ஒரு முழுமையான சோதனையில் மட்டுமே, டிசையர் கார் மூலம் இந்த மைலேஜை பெற முடியுமா என்பதை உறுதியாக கூற முடியும். எனவே இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு, எங்களோடு இணைந்து இருங்கள்.

 

verdict

தனது போட்டியாளர்களை விட அதிக விலைக் கொண்டதாக புதிய டிசையர் கார் இருந்தாலும், அது அமைக்கப்பட்டுள்ள தளத்தின் மூலம் அடுத்த வரவுள்ள மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் கிரஷ் தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை சமாளிக்க தகுந்த பிரிமியம் தன்மையை கொண்டுள்ளது.

“புதிய மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரில் கவர்ந்து இழக்கக் கூடிய பிரிமியம் தன்மை உள்ளது.”

எனவே, விலை சற்றும் அதிகம் என்பதோடு, சில குறைகளை தவிர, மற்றப்படி மாருதி சுஸூகி நிறுவனத்தின் புதிய டிசையர் கார், அதன் பிரிவில் உறுதியான பிடிப்பை கொண்டுள்ளது.

மாருதி டிசையர் 2017-2020 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • முன்பு அளிக்கப்படாத அதிக பயணிகள் மற்றும் லக்கேஜ் இடவசதி
  • தரமான பாதுகாப்பு அம்சங்கள்: இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பின்பக்க குழந்தை சீட் ஆங்கர்கள்
  • நவீன காலத்திற்கு ஏற்ற சிறந்த தோற்றத்தை டிசையர் கொண்டுள்ளது. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த காரை விட, மிகவும் சரியான வடிவமைப்பை கொண்டுள்ளது.
  • புதிய, லேசான மற்றும உறுதியான பேலினோ காரின் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இது, அடுத்த வரவுள்ள கிரேஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
  • விலை குறைந்த ஏஎம்டி கிடைக்கிறது (எல் வகையை தவிர, மற்ற எல்லாவற்றிலும் கிடைக்கிறது)
  • அட்டகாசமான பயணம் தரம்– குண்டும் குழியுமான மற்றும் பாதிக்கப்பட்ட சாலைகளில் கூட டிசையர் கார் திணறாமல் செல்கிறது.

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இந்த காரில் சில இடங்களில் உள்ள பிளாஸ்டிக், நம் எண்ணங்களுக்கு ஏற்ப நன்றாகவும் பணி முடிப்பு கொண்டதாவும் இல்லை.
  • ஒலி வடிகட்டுவது சிறப்பாக இருந்தாலும் கேபின் உள்ளே என்ஜின் சத்தம் அதிக அளவில் கேட்க முடிகிறது.
  • புதிய இசட்+ வகை, சற்று அதிக விலையாக உள்ளது.
  • ஏஎம்டி சிறப்பாக டியூன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறுசீரமைப்பில் சாதகமான ஏடி-களுடன் ஒப்பிட முடியாத நிலையில் உள்ளது.
  • பெட்ரோல் என்ஜினை ஒப்பிட்டு பார்க்கும் போது, டிசையர் டீசல் ஏஎம்டி இதமாக தெரிவது இல்லை.
  • கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிசையர் கார், வாடிக்கையளர்களின் கைகளுக்கு கிடைக்க நீண்ட காத்திருப்பு நேரத்தை எடுத்து கொள்கிறது.

தனித்தன்மையான அம்சங்கள்

  • மாருதி டிசையர் 2017-2020 இந்த புதிய டிசையர் காரின் கேபினில் தட்டையான அடிப்பகுதியை கொண்ட ஸ்டீரியங் வீல் காணப்படுவதால் அது ஸ்போர்டியான தோற்றத்தை அளிக்கிறது.

    இந்த புதிய டிசையர் காரின் கேபினில் தட்டையான அடிப்பகுதியை கொண்ட ஸ்டீரியங் வீல் காணப்படுவதால், அது ஸ்போர்டியான தோற்றத்தை அளிக்கிறது.

  • மாருதி டிசையர் 2017-2020 எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உடன் கூடிய எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லெம்ப்கள்

    எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் உடன் கூடிய எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லெம்ப்கள்

  • மாருதி டிசையர் 2017-2020 ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் கூடிய 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் அமைப்பு

    ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் கூடிய 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் அமைப்பு

  • மாருதி டிசையர் 2017-2020 இந்த புதிய டிசையர் காரின் டெயில்லெம்ப்களில் இப்போது எல்இடி கிராஃபிக்ஸை பெற்றுள்ளன.

    இந்த புதிய டிசையர் காரின் டெயில்லெம்ப்களில் இப்போது எல்இடி கிராஃபிக்ஸை பெற்றுள்ளன.

arai mileage22.0 கேஎம்பிஎல்
fuel typeபெட்ரோல்
engine displacement (cc)1197
சிலிண்டரின் எண்ணிக்கை4
max power (bhp@rpm)81.80bhp@6000rpm
max torque (nm@rpm)113nm@4200rpm
seating capacity5
transmissiontypeமேனுவல்
boot space (litres)378
fuel tank capacity37.0
உடல் அமைப்புசேடன்-
தரையில் அனுமதி வழங்கப்படாதது163mm

மாருதி டிசையர் 2017-2020 Car News & Updates

  • நவீன செய்திகள்
  • Must Read Articles

மாருதி டிசையர் 2017-2020 பயனர் மதிப்புரைகள்

4.6/5
அடிப்படையிலான1532 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (1532)
  • Looks (341)
  • Comfort (462)
  • Mileage (499)
  • Engine (161)
  • Interior (181)
  • Space (231)
  • Price (151)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • VERIFIED
  • CRITICAL
  • Excellent Sedan Car

    Excellent sedan car with comfort in riding and without affecting pocket. Low maintenance cost with high performance and comfort.

    இதனால் ravindra dasari
    On: Mar 07, 2021 | 66 Views
  • Best Gadi

    It is the best car.

    இதனால் anku choudhary
    On: Feb 22, 2021 | 46 Views
  • Great Car

    Maruti Swift Dzire is a very good and comfortable car at a good price. I and my family is so impressed and I consider everyone to buy this car.

    இதனால் amarjit
    On: Mar 20, 2020 | 52 Views
  • Best in the class.

     I have purchase Dzire AMT in 2017, I m truly satisfied with this car. My friends suggested me to purchase Ford Ecosport at this price, but I take this due to my wor...மேலும் படிக்க

    இதனால் dev
    On: Mar 18, 2020 | 127 Views
  • Best in safety.

    Dzire completes my all Dzire. I am very much satisfied with the comfort and mileage of the car. It has good space inside and as well as boot space. It has very good ...மேலும் படிக்க

    இதனால் suresh rajpurohit
    On: Mar 18, 2020 | 102 Views
  • எல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க

டிசையர் 2017-2020 சமீபகால மேம்பாடு

டிசையர் சமீபத்திய செய்தி

 மாருதி சுசுகி டிசையர் விலை மற்றும் மாறுபாடுகள்: டிசையரின் விலை ரூ 5.82 லட்சத்தில் தொடங்கி ரூ 9.52 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) செல்கிறது. மாருதி டிசையரை நான்கு வகைகளில் வழங்குகிறது: L, V, Z,  மற்றும் Z+ என்ஜின் ஆப்ஷன்களுடன்.

 மாருதி சுசுகி டிசையர் எஞ்சின், டிரான்ஸ்மிஷன் மற்றும் மைலேஜ்: மாருதியின் துணை-4 மீ செடான் 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3-லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுடன் வருகிறது. பெட்ரோல் அலகு அதிகபட்சமாக 83PS சக்தி மற்றும் 113Nm டார்க் கொண்டது. டீசல் 75PS சக்தி மற்றும் 190Nm டார்க் கொடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு என்ஜின்களும் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் தரமாக வந்துள்ளன, 5 ஸ்பீடு AMT (ஆட்டோமேட்டிக்-மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஒரு விருப்பமாக வழங்கப்படுகிறது. மாருதி முறையே டிசையரின் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளுக்கு (மேனுவல் மற்றும் AMT இரண்டிற்கும்) 21.21kmpl  மற்றும் 28.40kmpl மைலேஜ் கோருகிறது.

 மாருதி சுசுகி டிசையர் அம்சங்கள்: இது இரட்டை முன் ஏர்பேக்குகள், தலைகீழ் பார்க்கிங் சென்சார்கள், கோ-டிரைவர் சீட் பெல்ட் நினைவூட்டல், வேக எச்சரிக்கை, ABS யுடன் EBD, மற்றும் பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்களுடன் அதன் வரம்பில் தரநிலையுடன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதன் அம்ச பட்டியலில் தானியங்கி LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், DRL, சென்சார்கள் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே பொருந்தக்கூடிய 7-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது புஷ்-பொத்தான் எஞ்சின் ஸ்டார்ட் / ஸ்டாப், ரியர் ஏசி வென்ட்களுடன் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் அனுசரிப்பு மற்றும் மடிக்கக்கூடிய ORVM களுடன் கிடைக்கின்றன.

 மாருதி சுசுகி டிசையர் போட்டியாளர்கள்: வோக்ஸ்வாகன் அமியோ, ஹோண்டா அமேஸ், டாடா டைகர் ,  மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் போன்றவற்றை மாருதி சுசுகி டிசையர் பெறுகிறது. இது வரவிருக்கும் ஹூண்டாய் அராவுக்கும்  எதிராக நடைபோடும்.

மேலும் படிக்க

மாருதி டிசையர் 2017-2020 வீடியோக்கள்

  • Which Maruti Dzire Variant Should You Buy?
    8:29
    Which Maruti Dzire Variant Should You Buy?
    மே 20, 2017 | 82818 Views
  • Maruti DZire Hits and Misses
    3:22
    Maruti DZire Hits and Misses
    aug 24, 2017 | 52793 Views
  • Maruti Suzuki Dzire 2017 Review in Hinglish
    8:38
    Maruti Suzuki Dzire 2017 Review in Hinglish
    ஜூன் 06, 2017 | 28822 Views

மாருதி டிசையர் 2017-2020 மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: மாருதி டிசையர் 2017-2020 dieselஐஎஸ் 28.4 கேஎம்பிஎல் | மாருதி டிசையர் 2017-2020 petrolஐஎஸ் 22.0 கேஎம்பிஎல்.ఆటోమేటిక్ வகைகளுக்கான கோரப்பட்ட ARAI மைலேஜ்: மாருதி டிசையர் 2017-2020 dieselஐஎஸ் 28.4 கேஎம்பிஎல் | மாருதி டிசையர் 2017-2020 petrolஐஎஸ் 22.0 கேஎம்பிஎல்.

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்arai மைலேஜ்
டீசல்மேனுவல்28.4 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்28.4 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்22.0 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்22.0 கேஎம்பிஎல்

Found what you were looking for?

மாருதி டிசையர் 2017-2020 Road Test

Ask Question

Are you Confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • நவீன கேள்விகள்

Samastipur Bihar? இல் What ஐஎஸ் the விலை அதன் மாருதி Suzuki Dzire

Rakesh asked on 18 Mar 2020

Maruti Dzire is priced between Rs.5.82 - 9.52 Lakh (ex-showroom Samastipur). In ...

மேலும் படிக்க
By Cardekho experts on 18 Mar 2020

Where I can get Dzire petrol car by end of March 2020 in Goa?

Faroj asked on 18 Mar 2020

For the availability of Dzire petrol variant in Goa, we would suggest you walk i...

மேலும் படிக்க
By Cardekho experts on 18 Mar 2020

desire பெட்ரோல் vdi model? இல் What are the நிறங்கள்

Subbarao asked on 18 Mar 2020

Maruti Dzire is offering 6 different colours for it's variants - Silky silve...

மேலும் படிக்க
By Cardekho experts on 18 Mar 2020

Bokakhat Assam? இல் What ஐஎஸ் the விலை அதன் Dzire விஎக்ஸ்ஐ

DIBYAJYOTI asked on 13 Mar 2020

Maruti Dzire VXi is priced at Rs.6.73 Lakh (ex-showroom Bokakhat). In order to k...

மேலும் படிக்க
By Cardekho experts on 13 Mar 2020

Dzire இசட்எக்ஸ்ஐ Plus AMT. இல் Please give the பட்டியலில் அதன் ஆல் the accessories கிடைப்பது

Ajitkumar asked on 8 Mar 2020

For this, we would suggest you walk into the nearest dealership as they will be ...

மேலும் படிக்க
By Cardekho experts on 8 Mar 2020

போக்கு மாருதி கார்கள்

  • பாப்புலர்
  • உபகமிங்
view மே offer
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience