ஹோண்டா ஜாஸ் வேரியண்ட்கள்: உங்களுக்கான சிறந்த காரைத் தேர்ந்தெடுங்கள்

published on டிசம்பர் 09, 2015 05:46 pm by manish for ஹோண்டா ஜாஸ் 2014-2020

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Honda Jazz

பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் அறிமுகமான பின், ஹோண்டா ஜாஸ் கார் பல வித மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த பிரிவிலேயே சிறந்த அம்சங்களை உள்ளடக்கியபடி வந்த இந்த காரை பாராட்டாதாரே இல்லை எனலாம். ஏனெனில், விமர்சகர்கள் மற்றும் நுகர்வோர், என்ற இரண்டு முக்கிய பிரிவுகளிலும் இதற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. புத்தம் புதிய டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், 100 PS சக்தியை உற்பத்தி செய்தாலும், எரிபொருள் சிக்கன நடவடிக்கையையும் விட்டுக் கொடுக்கவில்லை. 27 kmpl என்ற அளவிற்கும் அதிகமான மைலெஜை தரும் வகையில் புதிய ஜாஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் i-DTEC இஞ்ஜின், 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு தகுந்தபடி, புதிய ஜாஸ் 95 சதவிகிதம் மாற்றங்களைப் (லோக்கலைசேஷன்) பெற்று வருகிறது. ஆனால், இதற்கு முன்னர் வெளியான ஜெனரேஷன்களில் 72 சதவிகிதம் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும், இந்த மாற்றங்கள், இதன் விலையில் பிரதிபலிப்பதை நாம் உணர முடிகிறது. 

Honda Jazz interior

ஜாஸ் காரின் வேரியண்ட்களில் இருந்து உங்களுக்கான சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க, நாங்கள் பல காரணங்களை தொகுத்துள்ளோம். தொடர்ந்து வாசித்து, விவரம் அறிந்து கொள்ளுங்கள். 

E வேரியண்ட்

விலை (புது டெல்லி எக்ஸ்-ஷோரூம்): ரூ. 5.4 லட்சங்கள் முதல்

ஒரு பிரிமியம் ஹாட்ச்பேக் காரின் செயல்திறனை, மிகவும் குறைந்த விலையில் அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்த வேரியண்ட் உங்களுக்கான தீர்வாக அமையும். பந்தய கார்களில் உள்ளதைப் போல நேர்த்தியான முன்புற விளக்குகள் மற்றும் LED பொருத்தப்பட்ட பின்புற விளக்குகள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. 

  • கருப்பு நிறத்தில் முன்புற கிரில்
  • R14 அளவிலான டயர்கள்
  • கருப்பு நிற கதவு கைப்பிடிகள்
  • முன்புறத்தின் நடுவில் ஆன்டெனா
  • நீல நிற வெளிச்சத்தில், பல விவரங்களைக் காட்டும் ஸ்டாண்டர்ட் காம்பிமீட்டர்
  • எரிபொருள் உபயோகத்தை காட்டும் ஃப்யூயல் கன்சப்ஷன் டிஸ்ப்ளே / வார்னிங்க் கருவி 
  • டாக்கோமீட்டர்
  • சிங்கிள் ட்ரிப் மீட்டர்
  • கியர் நாப்பில் கருமை நிற ஃபினிஷ்
  • சில்வர் நிறத்தில், உட்புற கதவு கைப்பிடிகள்
  • டீசல் வேரியண்ட்டில் மட்டும் வரும் EBD அமைப்புடன் வரும் ABS

S வேரியண்ட்:

விலை (புது டெல்லி எக்ஸ்-ஷோரூம்): ரூ. 6.0 லட்சங்கள் முதல்

பரபப்பான நகர போக்குவரத்தை ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்டு சமாளிக்கும் போதே, பிரிமியம் ஹாட்ச்பேக் காரில் செல்லும் அனுபத்தையும் உணரவேண்டும் என்று எண்ணுபவர்களுக்காவே தயாரிக்கப்பட்டதுதான் இந்த S வேரியண்ட். 

  • க்ரோமிய வேலைப்பாடுகளைக் கொண்ட கருப்பான, பளபளப்பான கிரில் 
  • R15 என்ற அளவில் டயர்கள்
  • ஸ்டாண்டர்ட்டாக டிரிம் வீல்
  • பாடி நிரத்திலேயே கதவு கைப்பிடி
  • CVT
  • கியர் நாப்பில் சில்வர் நிற ஃபினிஷ்
  • முன்புற கன்சோலில் வெள்ளி நிற ஃபினிஷ்
  • 3 அங்குல டிஸ்ப்ளே யூனிட்டுடன் வரும் இண்டெக்ரேடெட் ஆடியோ சிஸ்டம்
  • ஹாண்ட்ஸ்-ஃப்ரீ தொலைபேசி இணைப்பு

SV வேரியண்ட்:

விலை (புது டெல்லி எக்ஸ்-ஷோரூம்): ரூ. 6.5 லட்சங்கள் முதல்

பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவிற்கு நீங்கள் மிகவும் புதிதென்றால்; முதல் முறையாக சொந்தமாக கார் வாங்க முடிவு செய்திருந்தால்; நீங்கள் நினைக்கும் அனைத்து சீரிய அம்சங்களும் நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணினால், இது உங்களுக்கான வேரியண்ட். 

  • பின்புறத்தில் மைக்ரோ ஆன்டெனா
  • LCD டிஸ்ப்ளே மற்றும் நீல நிறத்தில் பேக் லைட் பொருத்தப்பட்ட மேம்பட்ட மல்டி-இன்ஃபர்மேஷன் காம்பினேஷன் மீட்டர்
  • காம்பிமீட்டரில் பலவிதமான ஆம்பிஎண்ட் ரிங்குகளைக் கொண்ட எக்கோ அஸ்சிஸ்ட் சிஸ்டம்
  • உடனடியாக எரிபொருள் சிக்கனத்தை காட்டும் ஃப்யூயல் எகானமி டிஸ்ப்ளே
  • டூயல் ட்ரிப் மீட்டர்
  • 5 இன்ச் டிஸ்ப்ளே யூனிட்டுடன் வரும் மேம்பட்ட இண்டெக்ரேட்டட் ஆடியோ சிஸ்டம்
  • டூயல் ஃப்ரண்ட் ஏர் –பேக்குகள்
  • ஸ்டாண்டர்ட்டாக வரும் EBD வசதி கொண்ட ABS
  • மல்டி-வியூ பார்க்கிங் காமிரா

V வேரியண்ட்

விலை (புது டெல்லி எக்ஸ்-ஷோரூம்): ரூ. 6.9 லட்சங்கள் முதல்

நீங்கள் என்னென்ன சொகுசான வசதிகளை எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தும் பொருத்தப்பட்ட ஆட்டோமேடிக் வேரியண்ட். 

  • அலாய் சக்கரங்கள் ஸ்டாண்டர்ட்டாக பொருத்தப்பட்டுள்ளன
  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர் ஸ்டாண்டர்ட்டாக பொருத்தப்பட்டுள்ளன
  • ORVM –களில் டர்ன் இன்டிகேட்டர்
  • வெளியில் உள்ள தட்பவெட்பத்தை காண்பிக்கும் கருவி
  • CVT
  • ஸ்டியரிங் வீலில் லெதர் வேலைப்பாடு
  • பளபளப்பான சில்வர் நிறத்தில் கதவு கைப்பிடிகள்

VX வேரியண்ட்:

விலை (புது டெல்லி எக்ஸ்-ஷோரூம்): ரூ. 7.4 லட்சங்கள் முதல்

சக்திவாய்ந்த இஞ்ஜின் மற்றும் இந்த பிரிவிலேயே சிறந்த ஆடம்பரமான வசதிகளும் இணைந்த பிரிமியம் ஹாட்ச்பேக் காரை வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தீர்வாகும். 

  • முன்புறம் மற்றும் பின்புறத்தில் மட்கார்ட்
  • 6.2 அங்குல டச் ஸ்கிரீன் நேவிகேஷன் சிஸ்டம்
  • DVD ப்ளேயர்
  • ஆன்-போர்டு நேவிகேஷன்
  • பின்புறத்தில் மாற்றியமைக்கக் கூடிய மேஜிக் சீட்கள்
  • 60:40 விகிதத்தில் மடிக்கக் கூடிய பின்புற சீட்

இதையும் படியுங்கள் 

ஒப்பீடு: மாருதி சுசுகி பெலினோ vs எலைட் i20 vs ஜாஸ் vs போலோ vs புண்டோ இவோ

2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா ஜாஸ் 2014-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience