ஹோண்டா ஜாஸ் கார்கள் ஜெய்ப்பூரில் ரூ 5.4 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்தது
published on ஜூலை 16, 2015 04:57 pm by raunak for ஹோண்டா ஜாஸ் 2014-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: ஹோண்டா நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஜாஸ் கார்களை இப்போது ரூ 5.4 லட்சம் என்ற ஆரம்ப விலைக்கு (எக்ஸ் – ஷோரூம் ஜெய்பூர்) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜாஸ் மாடல் கார்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெறும் என்று ஹோண்டா நிறுவனம் எதிர்பார்ப்பதுடன் இந்த முறை அதற்கான சரியான சூத்திரமுமான டீஸல் எஞ்சினும் ஜாஸ் என்ற பெயரும் அவர்களிடம் இருக்கிறது. மேலும் இந்த ஜாஸ் கார்கள் பல பிரிவுகளில் – குறிப்பாக முதல் முறையாக டச் ஸ்க்ரீன் நேவிகேஷன்,சிவிடியுடன் ஸ்டீரிங் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பேடல் ஷிப்டர்ஸ் என ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் களம் கண்டுள்ளது. இதே பிரிவை சேர்ந்த கார்களான ஹயுண்டாய் எளிட் ஐ 2௦,பியட் புன்டோ, ஈவோ மற்றும் வோல்க்ஸ்வாகன் போலோ கார்களுக்கு இந்த ஜாஸ் கார்கள் கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் துணைத்தலைவர் & இயக்குனர் திரு. ராமன் குமார் ஷர்மா ஜாஸ் காரின் அறிமுக நிகழ்ச்சியில் பேசுகையில் பின்வரும் கருத்துக்களை பதிவு செய்தார். ”இந்த ஜாஸ் கார்கள் செயல்திறன், வடிவமைப்பு, ஸ்டைல் மற்றும் பலதரப்பட்ட சிறப்புக்களுடன் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு கூடுதல் மதிப்பை தரும். வாடிக்கையாளரின் அனைத்து வகையான தேவை மற்றும் எதிர்பார்புகளை இந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார்கள் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்திய சார் சந்தையில் ஹோண்டா கார்களின் வர்த்தக வளர்ச்சிக்கு இந்த ஜாஸ் மாடல் கார்கள் ஒரு தூணாக செயல்படும்” என்று கூறினார்.
ஜாஸ் கார்கள் இரண்டுவகையான என்ஜின்கள் மற்றும் மூன்று வகையான ட்ரான்ஸ் மிஷன் மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலில் என்ஜின் 1.2 லிட்டர் i – VTEC 9௦ps என்கிற அளவுக்கு திறனையும் 11௦ nm என்கின்ற அளவுக்கு இழுவை சக்தியையும் வெளிபடுத்துகிறது. மேலும் 5 ஸ்பீட் கியர், க்ளட்ச் மற்றும் க்ளட்ச் இல்லாத பேடல் ஷிப்டேர்களுடன் கூடிய மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. டீஸல் என்ஜினைப் பொறுத்தவரை அமேஸ் மற்றும் சிட்டி கார்ககளில் உள்ள அதே 1.5 லிட்டர் i – DTEC 100 ps என்கிற அளவுக்கு திறனையும் 20௦ nm என்ற அளவுக்கு அதிகபட்ச இழுவை சக்தியையும் வெளிபடுத்தக்கூடிய 6 கியர் என்ஜினுடன் கூடிய மாடல்கள் வெளிவந்துள்ளன.
தவற விடாதீர்கள்: ஹோண்டா ஜாஸ் Vs சுவிப்ட் vs எளிட் i 2௦ vs போலோ vs புன்டோ இவிஓ.
வாரியான்ட் | ஜெய்பூர் எக்ஸ் – ஷோரூம் விலைகள் |
இ எம்டி பெட்ரோல் | ரூ. 5,40,500 |
எஸ் எம்டி பெட்ரோல் | ரூ. 605,100 |
எஸ் வி எம்டி பெட்ரோல் | ரூ.656,000 |
வி எம்டி பெட்ரோல் | ரூ.693,000 |
எஸ் சிவிடி பெட்ரோல் | ரூ.710,100 |
விஎக்ஸ் எம்டி பெட்ரோல் | ரூ.742,100 |
வி சி பெட்ரோல் | ரூ.798,100 |
வாரியான்ட் | ஜெய்பூர் எக்ஸ் – ஷோரூம் |
இ எம்டி டீஸல் | ரூ.665,000 |
எஸ் எம்டி டீஸல் | ரூ.730,600 |
எஸ் வி எம்டி டீஸல் | ரூ.781,500 |
வி எம்டி டீஸல் | ரூ.828,500 |
விஎக்ஸ் எம்டி டீஸல் | ரூ.877,600 |
0 out of 0 found this helpful