ஹோண்டா ஜாஸ் மற்றும் அடுத்த ஜெனரேஷன் ஆடி A4 கார்கள், ஈரோ NCAP -யின் 5 நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன
published on நவ 05, 2015 02:32 pm by raunak for ஹோண்டா ஜாஸ் 2014-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆடி A4 ஐந்தாவது ஜெனரேஷன் கார் அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் ஏற்கனவே, ஹோண்டா நிறுவனம் மூன்றாவது ஜெனரேஷன் ஜாஸ் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திவிட்டது.
பிரஸ்ஸல்ஸ்ஸில், இந்த மாதம் நடந்த கார் பாதுகாப்பு செயல்திறனை மதிப்பிடும் நிகழ்ச்சியில் சோதனை செய்யப்பட்ட கார்களின் விவரத்தை ஈரோ NCAP (ஐரோப்பிய புதிய கார் மதிப்பிடும் திட்டம்) வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட 4 கார்களில், ஹோண்டா ஜாஸ் மற்றும் அடுத்த ஜெனரேஷன் ஆடி A4 ஆகிய இரண்டு மட்டும் இந்தியர்களான நமக்கு தேவையானதாக இருக்கும். ஐந்தாவது ஜெனரேஷன் ஆடி A4 மற்றும் மூன்றாவது ஜெனரேஷன் ஹோண்டா ஜாஸ் ஆகிய இரண்டு கார்களும், மதிப்பீட்டு சோதனையில் 5 நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்று முழுமையான வெற்றி வாகை சூடியுள்ளன.
இந்தியாவில் உள்ள ஜாஸ் மாடலில் ஏர் பேக்கள் பொருத்தப்படவில்லை என்றாலும், இந்த சோதனை செய்யப்படும் போது ஜாஸ் காரில் பல ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு காற்றுப் பைகளும், மேலும் சில பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் ஐரோப்பிய சட்டதிட்டப்படி பொருத்தப்பட்டு இருந்தது. ஜாஸ் கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 93 சதவிகிதம் மதிப்பெண்ணும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 85 சதவிகிதம் மதிப்பெண்ணும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாதசாரிகள் பாதுகாப்பில் 73 சதவிகிதமும், பாதுகாப்பு உதவி பிரிவுகளில் 71 சதவிகிதமும் பெற்று ஜாஸ் கார் தேர்ச்சி அடைந்துள்ளது.
பார்த்து மகிழ: ஈரோ NCAP கிராஷ் சோதனையில் ஹோண்டா 2015 ஜாஸ்
ஆடி A4 காரின் ஐந்தாவது ஜெனரேஷன் சேடான் கார், அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள 2016 இந்தியா வாகன கண்காட்சியில் (இந்தியா ஆட்டோ எக்ஸ்போ) காட்சிப்படுத்தப்படும், அதன் பின்னர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். 2015 ஃபிராங்க்பார்ட் மோட்டார் கண்காட்சியில் முதல் முதலில் ஆடி A4 அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே, இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர் புதிய A4 காரை இந்தியாவில் சோதனை செய்த போது, இரண்டு முறை உளவாளிகளின் கண்ணில் பட்டுவிட்டது. இப்போது, சோதனையின் முடிவுகளைப் பற்றி பார்ப்போம். A4 ஐந்தாவது ஜெனரேஷன் கார், பெரியவர்களின் பாதுகாப்பில் 90 சதவிகிதமும், குழந்தைகளின் பாதுகாப்பில் 87 சதவிகிதம் மதிப்பெண் பெற்று அதிரடி வெற்றி பெற்றுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி அமைப்புகளின் பிரிவிலும் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்று A4 தேர்ச்சி பெற்றுள்ளது.
பார்த்து மகிழ: ஈரோ NCAP கிராஷ் சோதனையில் ஆடி A4 2015
மேலும் வாசித்து தெரிந்து கொள்ள: ஹோண்டா ஜாஸ்
0 out of 0 found this helpful