• English
  • Login / Register

உலகளாவிய வெற்றியில் ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் 2014-2020 க்காக ஜூலை 17, 2015 05:09 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 11 Views
  • 2 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஹோண்டா  ஜாஸ் அக்க ஃபிட் என்ற பெயரே உலகளவில் புகழ் வாய்ந்ததாக இருந்தாலும் இந்திய சந்தையில் இதன் இரண்டாவது ஜென் மாடல் ஜெயிக்கவில்லை, ஆனாலும் அடுத்த வாரத்தில் அறிமுகமாக உள்ள மூன்றாவது ஜென் மாடல் முந்தைய ஜென் குறைபாடுகளை முழுவதுமாக நீக்கி மிகவும் தரமாக வடிவமைக்கபட்டுள்ளதால், இந்திய சந்தையில் தனது முழுமையான ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகிறது.

சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் நடைமுறை விஷயங்கள் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது போல் சில பிராண்ட்கள் மற்றவர்கள் செய்யும் வித்தியாசங்களை வழங்கவில்லை என்றால் கவனத்தை பெறாமலேயே சென்றுவிடுமகின்றன. அதுதான் இதற்கு முந்தைய ஹோண்டா ஜாஸ் மாடலுக்கும் நடந்தது.  சிறிய ரக கார் ஆன ஜென் ஹோண்டா ஜாஸ் சேடன் விலையில் இருந்ததால் ஒரு ஹாட்ச்பேக்குக்காக  அதிக விலை செலுத்த வேண்டியதிருப்பதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் சந்தையில் உலா வரும் நடுத்தர சேடன்களை விட அந்த மாடலில் அதிக பயன்பாடு உள்ளதை என்னால்  பந்தயம் கட்டி உறுதியாக கூற முடியும்.

உலக அளவில் பிரபலமான இரண்டாம் ஜென் ஜாஸ் இந்தியாவில் கடந்த மாதங்களில் கணிசமான விலை குறைப்பு செய்த போதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய சிரமப்பட்டது.  இருந்தாலும், ஜாஸின் சிறந்த பயன்பாட்டு முறையால் பெரிய வரவேற்பு கிடைக்கிறது, முக்கியமாக அதன் மடக்கும் வசதி கொண்ட மாய இருக்கைகள் மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது. (மூன்றாம் ஜென் கார் மாய இருக்கைகளின் வசதிகளை  கீழே உள்ள படத்தி ல் பார்க்க). இதன் அனைத்து வசதிகளும் முதல் முதலாக தாய்நாடான  ஜப்பானில் 2001 ஆம் ஆண்டு அறிமுகபடுத்தபட்ட முதன்மை ஜென் ஜாஸ் / ஃபிட் ஹோண்டா வாகனம் வெளியிடப்பட்ட நாளில் இருந்தே வாடிக்கையாளர்களுக்கு வழங்கபடுகிறது. ஹோண்டா  ஜாஸ் ஃபிட் கார் ஜப்பானில் நடந்த முதல் ஜென் 2001 வெளியீட்டு விழாவிற்கு பிறகு அதீத வெற்றிபாதையில் தனது தாய்நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் வெற்றி நடை போடுகிறது. ஹோண்டா இந்தியாவும் தன்னுடைய  ஆன்லைன்  விளம்பரங்களில் 75 நாடுகளில் 5.5 மில்லியன் கார்களை விற்றுள்ளோம் என்ற செய்தியை பெருமையாக கூறிக் கொண்டது.

இந்தியாவில், புத்தம் புதிய ஜாஸ் இரண்டு முக்கியமான அம்ஸங்களில் கவனம் செலுத்துகிறது. முக்கியமாக, முந்தைய ஜென்னில் விட்ட இடத்தை நிரப்ப டீசல் இஞ்ஜின் மற்றும் மலிவான விலை என்னும் ஆயுதங்களை ஹோண்டா எடுத்துள்ளது.

இம்முறை வெளிவரவுள்ள புதிய ஜாஸ் எப்படிப்பட்ட வரவேற்பை பெறப்போகிறது என்பதை நாம் அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

was this article helpful ?

Write your Comment on Honda ஜாஸ் 2014-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மாருதி பாலினோ 2025
    மாருதி பாலினோ 2025
    Rs.6.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டியாகோ 2025
    டாடா டியாகோ 2025
    Rs.5.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 4 இவி
    எம்ஜி 4 இவி
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி வாகன் ஆர்
    மாருதி வாகன் ஆர்
    Rs.8.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf8
    vinfast vf8
    Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience