ஹோண்டா ஜாஸ் போல வேறு எதுவும் இல்லை என்பதற்கான 5 காரணங்கள்
published on ஆகஸ்ட் 27, 2015 05:42 pm by bala subramaniam for ஹோண்டா ஜாஸ் 2014-2020
- 17 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
இந்த தயாரிப்பு விளம்பரம் செய்ய பயன்படும் இதே வார்த்தைகளையே, தலைப்பிற்கும் பயன்படுத்தி உள்ளதன் மூலம் ஹோண்டா ஜாஸ் உண்மையிலேயே எவ்வளவு சிறப்பானது என்பது தெரிய வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜாஸ், அது முதல் விமர்சனம் மற்றும் விற்பனை பாராட்டு என்று இரண்டையும் பெற்று வருகிறது. சமீபத்தில் மூன்றாம் தலைமுறைக்குள் நுழைந்த ஹோண்டா ஹேட்ச்பேக்கான இது, இந்திய சந்தையின் B+ பிரிவிற்குள் மீண்டும் நுழைந்துள்ளது. இந்த பிரிவிலேயே மேம்பட்ட அம்சங்களான, புதிய டீசல் என்ஜின் தேர்வு மற்றும் போட்டியிட தகுந்த விலை நிர்ணயம் ஆகியவை மூலம் பழைய ஜாஸ் இழந்த வெற்றியை புதிய ஜாஸ் பெறுமா? இது வெற்றி பெறும் என்பதற்கான ஐந்து காரணங்கள் இதோ.
1. சர்வதேச அளவில் வெற்றி பெற்ற தயாரிப்பான ஹோண்டா ஜாஸ், ஏற்கனவே 75 நாடுகளுக்கும் மேலாக, 5.50 மில்லியன் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி உள்ளது. அது இந்தியாவில் இல்லையே என்ற குரலை என்னால் கேட்க முடிகிறது. இதற்கான முயற்சியாக அந்நிறுவனம் கடந்த முறை செய்த தவறுகளை, இந்த முறை திருத்தம் செய்துள்ளது.
2. ஜாஸ் முதல் முறையாக புதிய டீசல் என்ஜினை பெற்றுள்ளது. சிட்டியில் உள்ள 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட 1.5-litre i-DTEC டீசல் என்ஜினையே, இதிலும் காண முடிகிறது. ஆற்றல் வெளியேற்றம் கூட ஒரே மாதிரியாக, அதாவது 100 PS and 200 Nm. எரிபொருள் பயன்பாடு லிட்டருக்கு 27.3 கி.மீ அளித்து, நம் நாட்டில் உள்ள அதிக எரிபொருள் சிக்கனம் செய்யும் டீசல் கார்களில் ஒன்றாக திகழ்கிறது.
3. 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினை பொறுத்த வரை, 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது CVT கியர்பாக்ஸ் என்ற இரு தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக, பேடில்-ஸ்ஃப்டர்கள் உடன் கூடிய CVT கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜினில் கூட சிறந்த எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் வண்ணம், CVT வகையில் லிட்டருக்கு 19 கி.மீட்டர்களும், மேனுவல் வகையில் லிட்டருக்கு 18.7 கி.மீட்டர்களும் கிடைக்கிறது.
4. இடவசதிக்கு பெயர் பெற்ற ஜாஸ், இந்த முறையும் அதை தக்க வைத்து கொள்ளும் வகையில், இப்பிரிவு கார்களில் முன்னோடியாக 354 லிட்டருக்கு பொருட்களை வைக்கும் இடவசதியை (பூட் ஸ்பேஸ்) கொண்டுள்ளது. சரக்குகளை ஏற்றும் வகையில் அல்லது அமர்வை திருத்தம் செய்யவும், மேஜிக் சீட்களை 4 மாடல்களில் மாற்றி அமைக்க முடியும்.
5. ஹோண்டா நிறுவனம், ஜாஸை முதல் முறை அறிமுகப்படுத்திய போது, மற்ற கார்களோடு போட்டியிட முடியாத வகையில் விலை நிர்ணயம் செய்து, பரவலாக இல்லாத நிலையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஜாஸ் ஒரு நல்ல காராக இருந்தாலும், ஒரு ஹேட்ச்பேக்கிற்கு ரூ.8 லட்சம் செலவிடுவதை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. அதேபோல பழைய ஜாஸ் 72% மட்டுமே பரவலாக இருந்த நிலையில், புதிய ஜாஸ் 95% பரவலாக இருப்பது, விலை நிர்ணயத்திலும் எதிரொலித்து போட்டியிடும் வகையில் மாறியுள்ளது.
0 out of 0 found this helpful