Tata Curvv EV காரின் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் வெளியிடப்பட்டுள்ளது!
published on ஜூலை 09, 2024 06:13 pm by samarth for டாடா கர்வ் இவி
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடாவின் எஸ்யூவி-கூபே EV மற்றும் ICE ஆகிய இரண்டு வெர்ஷன்களிலும் வருகிறது. அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
-
டாடா கர்வ் EV காரின் அறிமுகத்திற்கு முன்னதாக முதல் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
-
டாடாவின் Acti.ev பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. கர்வ் EV-இன் ரேஞ்ச் 500 கிமீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்வ் EV -காரின் தனித்துவமான டிசைனில் சாய்வான ரூஃப் லைன், கனெக்டட் டெயில் லைட் செட் அப் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் போன்றவை அடங்கும்.
-
ஆன்போர்டு அம்சங்களில் டூயல் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்பை பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ஸ்டாண்டர்டான 2 ADAS ஆகியவற்றுடன் வருகிறது.
-
இந்தக் காரின் ஆரம்ப விலை சுமார் 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்புக்கு முந்தைய கான்செப்ட் மற்றும் டெஸ்ட் மியூல்களின் பார்வை போன்ற பல முன்னோட்டங்களுக்குப் பிறகு டாடா கர்வ் EV-க்கான முதல் அதிகாரப்பூர்வ டீசரை டாடா வெளியிட்டுள்ளது. அதன் எலெக்ட்ரிக் வேரியன்ட் முதலில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும், அதன் பிறகு அதன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (ICE) வெர்ஷனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளரிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த EV-இன் பல்வேறு கூறுகளைக் காட்டுகிறது. இந்த வரவிருக்கும் அறிமுகத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு காத்திருங்கள்!
டீசர்களில் மூலம் தெரிந்தது கொண்டது என்ன?
டாடா மோட்டார்ஸ் அவர்களின் டீசரில் கர்வின் நேர்த்தியான சாய்வான ரூஃப் லைனை காட்டுகிறது. ஃப்ரண்ட் மற்றும் ரியர் ஆகிய இரண்டு பக்கங்களிலும் நெக்ஸான் EV போன்ற கனெக்டட் லைட் செட்அப்களை கொண்டுள்ளது. ஏரோ இன்செர்ட் உடன் கூடிய நெக்ஸான் EV-யை நினைவூட்டும் அலாய் வீல் டிசைன் உள்ளது. கூடுதலாக டீஸர் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை முன்னிலைப்படுத்தியது. மேலும் இந்த வசதியை கொண்ட முதல் டாடா கார் இதுவாகும். இது தவிர மூடிய கிரில் போன்ற பிற வடிவமைப்பு விவரங்களும் EV வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி-கூபே ஆனது 12.3-இன்ச் டச்ஸ்க்ரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பை பொறுத்தவரை இது ஆறு ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவை இதில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
தற்போதைய நிலவரப்படி,கர்வ் எலக்ட்ரிக் எஸ்யூவிக்கான பேட்டரி பேக் மற்றும் மோட்டார் பற்றிய குறிப்பிட்ட விவரங்களை டாடா இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், அதிகபட்சமாக 500 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட ரேஞ்சை அடையும் திறன் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடாவின் Acti.ev பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது அதன் சிறிய இணையான பன்ச் EV போன்றே கர்வ் ஆனது DC ஃபாஸ்ட் சார்ஜிங், V2L (வெஹிகிள்-டு-லோட்) வசதி, பல்வேறு டிரைவ் மோட்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் எனர்ஜி ரிஜெனரேஷன் போன்ற வசதிகளை இது கொண்டிருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ் EV ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் கிரெட்டா EV உடன் போட்டியிடும்.
ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கர்வ் -ன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது சிட்ரோன் பசால்ட்டுடன் நேரடியாகப் போட்டியிடுவதுடன், சந்தையில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்க்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற பிரபலமான மாடல்களுடனும் போட்டியிடும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
0 out of 0 found this helpful