புதிய புண்டோ அபார்த்தின் முதல் படத்தை ஃபியட் வெளியிட்டது

published on செப் 22, 2015 03:01 pm by manish for ஃபியட் புண்டோ அபார்த்

ஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆண்டின் ஹாட்-ஹேட்ச் காரான ஃபியட் அபார்த் புண்டோவின், டயல்-டோன் நிற திட்டத்திலான காரின் முதல் படத்தை, ஃபியட் இந்தியா நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்நிறுவன இணையதளத்தின் முன் பக்கத்தின் மத்திய பகுதியில், கருப்பு மற்றும் சிவப்பு நிற திட்டத்தில் அமைந்த காரை காண முடிகிறது. இந்த இணையதள பக்கத்தில், “விரைவில் வருகிறது (கம்மிங் சூன்)” என்ற ஒரு செயல்படாத பட்டன் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலும் இந்த காரின் அறிமுக தேதி முடிவு செய்யப்பட்டு, அது நெருங்கும் போது, அந்த இணைப்பு பட்டன் செயல்பட ஆரம்பிக்கலாம்.

இந்த ஹாட்-ஹேட்ச் காரில், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் 1.4 லிட்டர் T-ஜெட் மோட்டார் இணைந்து, 145 குதிரை திறன் ஆற்றலையும், 195Nm முடுக்குவிசையையும் வெளியிடும். இந்த ஆற்றல் அமைப்பை பயன்படுத்தி 10 விநாடிகளுக்குள் மணிக்கு 0 – 100 கி.மீ. வேகத்தை இந்த கார் எட்டி விடுகிறது. இந்த காரில் 20mm உயரம் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மற்றும் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் (கெர்ப் வெய்ட்) காரின் ஒட்டுமொத்த எடை சுமார் 1100 கிலோவாக உள்ளது. இதனால் அபார்த் புண்டோ காரின் எடைக்கும், ஆற்றலுக்கும் இடையிலான விகிதம் மற்றும் ஏரோடைனாமிக்ஸ் ஆகியவை சிறப்பாக இருக்கும்.

இந்த கார் 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொண்டு, 195/55 R16 டயர்கள் அவற்றை சூழ்ந்து காணப்படுகிறது. ஒளிரும் நிறங்களில் கிரில் அமைய பெற்று, காரின் பக்க பகுதியில் அபார்த் என்று எழுதப்பட்டுள்ளது. காரின் பின்பக்கம் ஒரு ஸ்பாயிலரை கொண்டுள்ளது. இது அபார்த்தின் முத்திரை மற்றும் அடையாளத்தோடு சேர்ந்து, பின்பக்கத்தின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டுகிறது.

உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, ஸ்போர்ட்டி மஞ்சள் மற்றும் சிவப்பு தையல் கொண்ட கருப்பு உட்புற நிற திட்டத்தை தவிர, புண்டோ EVO-வின் உட்புற அமைப்பை ஒத்து காணப்படுகிறது. ஒரு ஸ்போர்ட்டியர் இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் கிளெஸ்டர் மற்றும் அலுமினியம் ரேஸிங் ஃபுட் பெடல்கள் ஆகியவை கூட காட்சிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஃபியட் புண்டோ அபார்த்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience