அடுத்த தலைமுறை புண்டோவை, ஃபியட் சோதிக்கிறது

ஃபியட் புண்டோ அபார்த் க்கு published on dec 09, 2015 07:50 pm by raunak

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

வரும் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; மேலும் புதிய என்ஜின் தேர்வுகள் மற்றும் அதன் அபார்த் பதிப்பும் வெளியாகலாம் என்ற ஊகம் நிலவுகிறது!

ஜெய்ப்பூர்:

உலகிலேயே ஃபியட் நிறுவனத்திற்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான பிரேசிலில், புதிய தலைமுறையைச் சேர்ந்த புண்டோவை, ஃபியட் சோதித்து பார்க்க துவங்கியுள்ளது. சில தகவல்களின் அடிப்படையில் இந்த வாகனத்திற்கு X6H என்ற குறியீட்டுப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஏதாவது ஒரு பெரிய ஆட்டோ எக்ஸ்போவில், ஒரு அடுத்தடுத்த உலகளாவிய சந்தை அறிமுகங்களோடு, அந்த வாகனத்தை ஃபியட் நிறுவனம் காட்சிக்கு வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபியட்டின் தயாரிப்பு திட்டத்தின்படி (அநேகமாக கசிந்தது) கடந்த ஆண்டு அந்த வாகனம் சுற்றுலா வந்த நிலையில், பெரும்பாலும் வரும் 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதன் இந்திய அறிமுகம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செயல்திறன் மிகுந்த வகையான அதன் 145 bhp அபார்த் புண்டோவை குறித்து சமீபத்தில் ஃபியட் நிறுவனம் ஒரு பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ள அடுத்த தலைமுறை புண்டோவில், ஒரு அபார்த் பதிப்பை பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பிரிவிலேயே சிறந்த கையாளும் திறன், சிறந்த பயணம் ஆகியவற்றை புண்டோ அளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சில பணிச்சூழலியல், தர பிரச்சனைகள் மற்றும் முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் ஆகியவற்றை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த அடுத்த தலைமுறை பதிப்பில் பெரும்பாலும் எல்லாவற்றையும் திருத்தப்பட்டு காணப்படலாம். இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொறுத்த வரை, இதிலும் புதிய டிப்போவில் (புதிய ஃபியட் டிப்போவின் தகவல்களை குறித்து படியுங்கள்) இருக்கும் ஃபியட்டின் யூகனெக்ட் (கீழே உள்ள படத்தை பார்க்கவும்) டச்ஸ்கீரின் யூனிட்டை பெற்று, இந்தியாவில் லீனியாவின் மாற்றாக அமைந்து கவர்ச்சிகரமாக அமையும் என்று தெரிகிறது.

இயந்திரவியலை பொறுத்த வரை, இந்திய சந்தையின் வரிகளில் இருந்து தப்பும் வகையில், புண்டோவை ஃபியட்டின் புதிய 1.5-லிட்டர் மல்டிஜெட் டீசல் இயக்கலாம் என்ற வதந்தி பரவி வருகிறது. இந்த என்ஜின் மூலம் வெளியாகும் ஆற்றல் 100 bhp-வை விட அதிகமாகவும், 250 Nm-வை விட கணிசமான அளவு அதிகமான முடுக்குவிசையையும் வெளியிடும். இந்த டீசலை தவிர, அடுத்த தலைமுறை புண்டோவில், ஒரு டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வை மட்டுமே ஃபியட் நிறுவனம் அளிக்கும் என்று தெரிகிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பொறுத்த வரை, டீசலில் இப்பிரிவின் மாதிரிகளில் துவக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பெரும்பாலும் ஃபியட் நிறுவனம் மூலம் 6-ஸ்பீடு மேனுவலை அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது.

ஆட்டோமெட்டிக்ஸில் ஒரு AMT தேர்வு அல்லது ஒரு 6-ஸ்பீடு ஆட்டோவை பெற வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள் 

பியட் அபர்த் புன்டோ ஈவோ மற்றும் அவெஞ்சுரா ரூ. 9.95 லட்சங்கள் என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

அடுத்து வரவுள்ள 124 ஸ்பைடர் ரோட்ஸ்டரின் முதல் படத்தை ஃபியட் வெளியிட்டது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஃபியட் புண்டோ அபார்த்

Read Full News

trendingஹாட்ச்பேக்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience