ஃபியட் லீனியாவிற்கு புதிய டிப்போ ஓய்வு கொடுக்குமா?
published on டிசம்பர் 01, 2015 05:01 pm by raunak for ஃபியட் லீனியா
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
உலகம் முழுவதும், இந்த புதிய வாகனம் பழைய மாடலை ஓய்வு பெற வைப்பது போலவே, நம் நாட்டிலும் நடக்கும்.
மே மாத ஆரம்பத்தில், இந்த வாகனம் துருக்கி நாட்டில் முதல் முதலாக வெளியிடப்பட்டது, ஆனால் அங்கே, இதற்கு ஏகியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும், உலகம் முழுவதும் இந்த கார் டிப்போ என்ற பெயரில் அறியப்படுகிறது. டிப்போ என்ற இந்த பெயருக்கான பெயர் காரணத்தையும் ஃபியட் நிறுவனம் விளக்குகிறது. உண்மையில், சில தசாப்தங்களுக்கு முன், இதே பெயரில் இந்நிறுவனத்தின் கார் ஒன்று மிகவும் பிரபலமாக இருந்தது. 1988 –ஆம் ஆண்டிலிருந்து 1995 –ஆம் ஆண்டு வரை இந்த கார் உலகெங்கிலும் அறியப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், டிப்போ மாடலில் 2 மில்லியன் கார்களை இந்த நிறுவனம் தயாரித்தது.
இது வரை, இந்திய சந்தையில் டிப்போவை அறிமுகப்படுத்தப் போவது பற்றிய செய்திகள் எதையும் ஃபியட் நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், ஃபியட் இந்தியா நிறுவனம் அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் இதை அறிமுகப்படுத்தி, பல ஆண்டுகளாக சந்தையில் உள்ள லீனியாவை ஓய்வு பெறச் செய்யும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டிப்போ அறிமுகம் ஆனா கையோடு, இந்தியாவின் நடுத்தர அளவில் உள்ள சேடான் வகைக் கார்களான ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் போன்ற கார்களுடன் போட்டியிடும்.
புத்தம் புதிதாக உள்ள. டிப்போவின் தோற்றத்தை, ஃபியட் ‘குய்ண்ட்எஸ்ஸென்ஷியலி இட்டாலியன்’ (அப்பட்டமான இத்தாலியன்) என்று குறிப்பிடுகிறது. புது யுகத்திற்கான இந்த ஃபியட் காரின் முன்புற தோற்றத்தில், இரண்டு ஓரங்களிலும் சற்றே பின்னோக்கி நீண்ட ஹெட் லாம்ப்களுக்கு இடையில் டிப்போவின் கிரில்லானது அம்சமாகப் பொருத்தப்பட்டுள்ளது. அது போலவே, பின்புறத்தில் ராப் அரௌண்ட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டிப்போவின் நீளம் 4.54 மி என்ற அளவிலும்; அகலம் 1.79 மி என்ற அளவிலும்; இதன் உயரம் 1.49 மி என்ற அளவிலும்; மற்றும் இதன் வீல் பேஸ் 2.64 மி என்ற அளவிலும் இருப்பதால், தற்போது இந்தியாவில் நடுத்தர அளவு சேடான் கார் பிரிவில், மிகவும் நீளமாக தோற்றம் அளிக்கும் சியாஸ் காரை விட டிப்போ நீளமாக உள்ளது. இதன் பூட் பகுதி 520 லிட்டர் கொள்ளளவைக் கொண்டதாக இருக்கிறது. டிப்போவின் உள்ளே சென்று பார்த்தால், ஃபியட்டின் பிரத்தியேகமான 5 அங்குல U-கனேக்ட் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. புளு டூத் அமைப்பு, ஆடியோ ஸ்ட்ரீமிங், டெக்ஸ்ட் ரீடர் மற்றும் வாய்ஸ் ரெக்கக்னிஷன், iPod பொருத்திக் கொள்ள ஏதுவாக AUX மற்றும் USB போர்ட்கள், ஸ்டியரிங் வீலுக்கான கண்ட்ரோல் போன்ற சிறப்பம்ஸங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தேவை என்றால் ரியர் பார்க்கிங் காமிரா மற்றும் நேவிகேஷன் போன்றவற்றை இன்ஃபோடைன்மேன் சிஸ்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.
மெக்கானிக்கல் ரீதியாகப் பார்க்கும் போது, உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக டிப்போவிற்கு சக்தியூட்டப் போவது 1.4 16v ஃபயர் 95 HP மற்றும் 1.6 1.6 v E torQ 110 HP பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் 1.3 மல்டி ஜெட் II 95 HP மற்றும் 1.6 மல்டி ஜெட் II 120 HP டர்போ டீசல் இஞ்ஜின்களாகும்.
ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷங்களைப் பற்றி பார்த்தால், 5 அல்லது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் போன்றவை வாடிக்கையாளின் தேர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும் போது, புதிய 1.5 லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும். இதன் பெட்ரோல் வேரியண்ட்டில், தற்போது லீனியாவில் உள்ள, 1.4 லி பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கவும்
0 out of 0 found this helpful