ஃபியட் அகேயா: ஒரு முழுமையான முன்னோட்டம்

ஃபியட் லீனியா க்கு published on sep 07, 2015 05:20 pm by அபிஜித்

  • 8 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

2015 வருடத்தின் ஆரம்பத்தில், இஸ்தான்புல் கார் கண்காட்சியில் வெளியான பியாட்டின் C ரக செடான் காரான அகேயா (Aegea), முழுமையாக உளவு பார்க்கப்பட்டது. இந்த வாகனம், தற்போது உற்பத்தி நிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது. இது, ஃபியட் லீனியாவிற்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இத்தகைய செய்தியை FCA இந்தியா இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்கு, மேலும் ஒரு வருடமாவது ஆகும் என்று தெரிகிறது. அகேயா தயாரிப்பாளர், இதனை 40 நாடுகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். எனினும், முதல் கட்டமாக இடது கை இயக்கத்தில் (லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவ்) மட்டுமே வெளிவரும்.

உளவு பார்க்கப்பட்ட இந்த கார், இஸ்தான்புல் மோட்டார் ஷோவில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில், காண்பிக்கப்பட்ட வடிவத்தை ஒத்திருக்கிறது. அங்கு காண்பிக்கப்பட்டதைப் போலவே, ஒற்றை இடைவெளி கொண்ட கம்பி வலையில் (கிரில்) ஒருங்கிணைத்து வரும் பட்டிழைவான முன்புற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தால், மிகப் பிரமாண்டமான தோள்பட்டையும், பெரிய அலாய் சக்கரங்களும் பொருத்தப்பட்டு ஸ்டைலாக இருக்கிறது. இதன் பின்புற விளக்குகள், இடுக்குக்குள் இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளன. அவற்றை கிரோமிய வேலைப்பாடுகள் ஒன்றிணைக்கின்றன. பாங்காக வடிவமைக்கப்பட்ட பூட் பகுதியின் மேல், இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன்ன.

ஃபியட்டின் இரண்டு வகை மல்டிஜெட் II டீசல் இஞ்ஜின்கள் மற்றும் இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின்கள் என்ற, 4 விதமான விருப்பத் தெரிவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இஞ்ஜின்களின் குதிரைதிறன் 94 bhp முதல் 118 bhp வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டீசல் இஞ்ஜின் 24 kmpl மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.

ஃபியட் நிறுவனத்தின் அதி நவீன உட்புறத் தோற்ற அம்ஸங்கலான உயர்தர 500 X போன்றவை இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் காக்பிட் பகுதி, ஃபியட் நிறுவனத்தின் பிரேத்யேக ரெட்ரோ பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறப் பகுதியானது, தொடு திரை (டச் ஸ்கிரீன்) மீடியாநவ் அமைப்பை பெற்றுள்ளது.
அகேயாவின் அளவுகளைப் பார்க்கும் போது, இதன் நீளம் 4,500 எம்‌எம் ஆகவும்; 1,750 எம்‌எம் அகலமாகவும்; 1480 எம்‌எம் உயரமாகவும், இதன் வீல் பேஸ் 2640 mm ஆகாவும் இருக்கிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மாருதி சியாஸ் காரின் நீளம் 4490 எம்‌எம் ஆகவும், 1730 எம்‌எம் அகலமாகவும், 1485 எம்‌எம் உயரமாகவும், வீல் பேஸ் 2650 எம்‌எம் ஆகவும் இருக்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இதன் உயரம் மற்றும் வீல் பேஸ் அதிகமாக உள்ளது. எனவே, இத்தகைய அளவுகள், நிச்சயமாக இதன் போட்டியாளர்களுடன் போட்டி போட வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஃபியட் லீனியா

Read Full News

trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience