பியட் அபர்த் புன்டோ ஈவோ மற்றும் அவெஞ்சுரா ரூ. 9.95 லட்சங்கள் என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
ஃபியட் புண்டோ அபார்த் க்காக அக்டோபர் 19, 2015 05:44 pm அன்று konark ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
பியட் இந்தியா நிறுவனம் அபர்த் புன்டோ ஈவோ மற்றும் அவ்வெஞ்சுரா என்ற இரு வாகனங்களை முறையே ஹேட்ச்பேக் மற்றும் க்ராஸ் ஓவர் பிரிவுகளில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு கார்களுமே ரூ. 9.95 லட்சம் (எக்ஸ் - ஷோரூம், டெல்லி )விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான அபர்த் தேளின் சின்னத்தை பெற்றுள்ள இந்த இரண்டு வாகனங்களுமே 1 .4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டி - ஜெட் பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. புன்டோ கார்களில் இந்த என்ஜின் 145 PS அளவு சக்தியையும், இதே இஞ்சின் அவ்வேஞ்சுரா கார்களில் 140 PS அளவிலான சக்தியையும் வெளியிடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. . இதற்கு முந்தைய காம்படிசியன் கார்களை போல் அல்லாமல் இந்த இரு கார்களும் 5 - வேக கைககளால் இயக்கக்கூடிய ( மேனுவல்) கியர் அமைப்பு இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. புன்டோ கார்கள் 100 கி.மீ வேகத்தை 8.8 வினாடிகளிலும் அதே வேகத்தை அவ்வெஞ்சுரா 9.9 வினாடிகளிலும் அடைந்து விடுகிறது.
புன்டோ கார்களின் ஆன்- ரோட் விலையை பெறுங்கள்
வெளிப்புற தோற்றத்தைப் பொறுத்தவரை எதிர்மறையான .பளிச்சென்று கண்ணை கவரும் வண்ணத்தில் ஸ்டிக்கர்கள் (டிகால்ஸ்), 16 அங்குல அல்லாய் சக்கரங்கள் , சிறப்பு வண்ண பூச்சுக்கள் மற்றும் பிரசித்தி பெற்ற 'அபர்த் தேள்' சின்னம் முன்புறம் மற்றும் பின்புறங்களில் பொறிக்கப்பட்டு காருக்கு ஒரு ஸ்போர்ட்டியான தோற்றம் தரப்பட்டு சாதரண புன்டோ ஈவோ கார்களில் இருந்து தனித்து தெரியும் வண்ணம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவெஞ்சுரா கார்களை பொறுத்த வரை பெரிய அளவிலான வெளிப்புற மாற்றங்களை காண முடியவில்லை. இருப்பினும் " powered by Abarth” என்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை மட்டும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக சொல்லலாம்.
உட்புற தோற்றத்தைப் பொறுத்தவரை கருப்பு வண்ணமே பிரதான நிறமாக கொடுக்கப்பட்டுள்ளது. சீட் கவர்களில் அபர்த் சின்னத்தில் உள்ள மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் ஆகிய இரண்டு நிறங்களும் கொடுக்கப்பட்டு உட்புறம் ஸ்போர்டியாக காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அபர்த் புன்டோ ஈவோ கார்கள் முந்தைய சாதாரண புன்டோ ஈவோ கார்களை விட 20 மீ.மீ. உயரம் குறைக்கப்பட்டு அணைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ABS மற்றும் EBD தொழில்நுட்பமும் இணைத்தே வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அபர்த் புன்டோ மற்றும் அவெஞ்சுரா கார்கள் முறையே லிட்டருக்கு 16.8 மற்றும் 17.1கி.மீ மைலேஜ் தரும் என்று கூறப்பட்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ GT TSI மற்றும் சமீபத்தில் வெளியான மேம்படுத்தப்பட்ட போர்ட் பீகோ கார்கள் இந்த புதிய புன்டோ கார்களுக்கு முக்கிய போட்டியாக கருதப்படுகிறது.
எங்களுடைய சிறப்பு ஒப்பீட்டை படியுங்கள் அபர்த் புன்டோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI vs போர்ட் பீகோ
இதையும் படியுங்கள் : பியட் லினியா டிபோ என்று பெயர் மாற்றப்பட்டது