சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

கேமராவில் முதன்முதலாக படம்பிடிக்கப்பட்டட ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸான் EV இன் முக்கிய விவரங்கள்

published on மே 24, 2023 06:48 pm by rohit for டாடா நிக்சன் ev max 2022-2023

ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் EV முதல் முறையாக LED ஹெட்லைட்களைப் பெறலாம்.

  • உளவு பார்த்த மாடல் காரின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்ட பேட்டரி பேக்கைக் காட்டும் போது டெயில் பைப்பைக் காணவில்லை.

  • வரவிருக்கும் ஃபேஸ்லிப்டட்நெக்ஸானில் காணப்படுவது போல் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்களையும் இது குறிக்கிறது.

  • இது முன்பு இருந்த அதே இரண்டு மறுபதிப்புகளில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பிரைம் மற்றும் மேக்ஸ்.

  • அவற்றின் பேட்டரி பேக்குகள் மற்றும் ரேஞ்ச் 30.2kWh (312km) மற்றும் 40.5kWh (453km) ஆக இருக்கலாம்.

  • அது 2024 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும் மற்றும் ரூ 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, ஃபேஸ்லிப்டட் டாடா நெக்ஸானின் பலதரப்பட்ட உளவு ப் படாங்களை நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று எங்களுக்கு உறுதி . நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது போல, டாடா எஸ்யூவி யின் ஃபேஸ்லிப்டட் EV வேரியன்ட்டின் மறுபதிப்புகளை தயார் செய்து வருகிறது, அதன் முதல் உளவு வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

வீடியோவில் கவனிக்கப்பட்ட விவரங்கள்

எமிஷன் பைப் இல்லாததே அது மின்சார மாடல் என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். கவனிக்கக்கூடிய மற்றொரு சுவாரஸ்யமான விவரம் நெக்ஸான் EV இன் கீழ்தளத்தில் பொருத்தப்பட்ட பேட்டரி பேக் ஆகும். ஃபேஸ்லிப்டட்ட நெக்ஸான் EV ஆனது, உளவு வீடியோ பரிந்துரைத்தபடி LED ஹெட்லைட்களைப் பெறலாம், அதே சமயம் அது ஃபேஸ்லிப்டட் நெக்ஸான்-இன் சோதனைளில் கவனிக்கப்பட்ட அதே இணைக்கப்பட்ட LED டெயில்லைட் அமைப்பைக் கொண்டிருந்தது.

மேலும் பார்க்கவும்: ஃபேஸ்லிப்டட் டாடா சஃபாரி மீண்டும் சோதனை செய்யப்பட்டதை உளவு காட்சி உறுதிப்படுத்தியது ஆனால் இந்தியாவில் நடைபெறவில்லை

முன்பு இருந்த அதே எலக்ட்ரிக் பவர் ட்ரெயின்கள் உள்ளதா?

டாடா முன்பு இருந்த அதே டிரிம்களில் ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் EVயை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்: பிரைம் (ஸ்டாண்டர்டு ரேஞ்ச்) மற்றும் மேக்ஸ் (லாங் ரேஞ்ச்). இரு மாடல்களில் ஏற்கனவே உள்ள பவர்டிரெய்ன்கள் பின்வருமாறு:

  • நெக்ஸான் EV பிரைம்- 30.2kWh பேட்டரி பேக், 312km ரேஞ்ச் ஐ கொண்டுள்ளது, 129PS/245Nm மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது

  • நெக்ஸான் EV மேக்ஸ்- 40.5kWh பேட்டரி பேக் மற்றும் , 453km ரேஞ்ச் ஐ கொண்டுள்ளது மேலும் 143PS/250Nm மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான அம்சங்கள்

ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் EV இன் கேபின் வீடியோவில் காணப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் நெக்ஸான் உடன் சில ஒற்றுமைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் பேடில் ஷிஃப்டர்கள் (இங்கே, பேட்டரி மீளுருவாக்கம் செய்ய), புதிய இருக்கைகள் மற்றும் பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் பிரிவு ஆகியவை அடங்கும்.

வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் பிரன்ட் சீட்கள், ஆட்டோ AC மற்றும் ஏற்கனவே உள்ள மறு பதிப்பு மாடல்களில் இருந்து ஒற்றை-பேன் சன்ரூஃப் போன்ற அம்சங்களை இது பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ளும். பாதுகாப்பைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வரலாம்.

அறிமுகம், விலை போட்டியாளர்கள்

டாடா நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் EV -யை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். எம்ஜி ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றிற்கு குறைவான விலை மாற்றாக இருக்கும் அதே வேளையில், மஹிந்திரா XUV400 க்கு போட்டியாகத் தொடரும் .
படங்களின் ஆதாரம்

மேலும் படிக்கவும்: டாடா நெக்ஸான் EV மேக்ஸ் ஆட்டோமெட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 29 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன் EV max 2022-2023

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.74 - 19.99 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை