எக்ஸ்க்ளூஸிவ்: ஒன்றாக வெளிவரப்போகும் Kia Carens ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Kia Carens EV கார்கள்
க்யா கேர்ஸ் 2025 க்காக ஜனவரி 28, 2025 07:27 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 48 Views
- ஒரு கருத்தை எழுதுக
2025 கேரன்ஸ் ஃபேஸ்லிப்ட் ஆனது புதிய பம்பர்கள் மற்றும் 2025 EV6 காரில் இருப்பதை போன்ற ஹெட்லைட்கள், புதிய டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் பெரிய டிஸ்ப்ளேக்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளுடன் வரலாம்.
எலக்ட்ரிக் வெர்ஷன் -ன் கியா கேரன்ஸ் MPV விரைவில் அறிமுகமாக உள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் மத்தியில் வழக்கமான கேரன்ஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு உடன் வெளியிடப்படும் என்ற தகவல் பிரத்தியேகமான எங்களுக்கு கிடைத்தது. கேரன்ஸ் EV மற்றும் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றிலிருந்து நாம் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் பார்ப்போம்:
கேரன்ஸ் EV மற்றும் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்: ஒரு பார்வை
மேம்படுத்தப்பட்ட கியா கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் EV ஆகியவை வரவிருக்கும் கியா EV6 போன்ற முக்கோண LED ஹெட்லைட்களுடன் வரும் என்று ஸ்பை ஷாட்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இது கனெக்டட் LED DRL -கள், புதிய வடிவிலான முன்பக்கம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் புதிய டெயில் லைட்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் கேரன்ஸ் புதிய அலாய் வீல் வடிவமைப்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் வெர்ஷன் ஏரோடைனமிக் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் உடன் வரலாம்.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கேரன்ஸின் உட்புறம் ஆனது புதிய மற்றும் நவீன தோற்றமுடைய டாஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் வித்தியாசமான கலர் சீட் கொண்ட அப்ஹோல்ஸ்டரியுடன் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ICE-பவர்டு கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் EV -ன் உட்புறத்தில் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் எலக்ட்ரிக் மாடலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் விரிவான பயன்பாடு மற்றும் ஒரு தனித்துவமான கேபின் தீம் கொடுக்கப்படலாம்.
பெரிய 12.3-இன்ச் டூயல் ஸ்கிரீன் செட்டப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இரண்டு கார்களிலும் இருக்கும்.
இரண்டு கார்களிலும் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட வசதிகளுடன் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: எக்ஸ்க்ளூசிவ்: டாடாவை பின்பற்றும் கியா நிறுவனம் ! என்ன செய்யப்போகிறது தெரியுமா ?
கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய-ஸ்பெக் மாடலின் அதே பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய iMT ஐ முறையான மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மாற்றுவதும் சாத்தியமாகும். விரிவான விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT^ |
*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
கேரன்ஸ் EV: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கியா கேரன்ஸின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது 400-500 கி.மீ ரேஞ்ச் உடன் பல பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேரன்ஸ் EV மற்றும் கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்: விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா கேரன்ஸ் தற்போது ரூ.10.60 லட்சத்தில் இருந்து ரூ.19.70 லட்சம் வரையில் உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் ரூ.11.50 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரன்ஸ் EV விலை ரூ.16 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 கியா கேரன்ஸ் தொடர்ந்து மாருதி எர்டிகா மற்றும் மாருதி XL6 ஆகிய கார்களுடன் போட்டியிடும். கேரன்ஸ் EV ஆனது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.