• English
  • Login / Register

எக்ஸ்க்ளூஸிவ்: 2024 Jeep Meridian விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

ஜீப் meridian க்காக அக்டோபர் 16, 2024 08:23 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 49 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த புதிய வேரியன்ட்கள் பிரத்யேகமாக ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கும்..

  • 2024 மெரிடியன் 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அமைப்புடன் வரும்.

  • புதிய மெரிடியனுக்கான முன்பதிவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.

  • புதிய அடிப்படை வேரியன்ட்களில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற வசதிகள் இருக்கும்.

  • புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி ஆனது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் ADAS வசதிகளைக் கொண்டிருக்கும்.

  • வேரியன்ட்-ஸ்பெசிஃபிக் இன்ட்டீரியர் கலர் தீம்களுடன் வரலாம்.

  • மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் 2-லிட்டர் டீசல் இன்ஜின் அப்படியே இருக்கும்.

  • விலை ரூ.29.99 லட்சத்தில் இருந்து ரூ.37.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கலாம். மேலும் தற்போதைய மாடலை விட கூடுதல் விலையில் இது வரலாம்.

2024 ஜீப் மெரிடியன் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. மேலும் இந்த எஸ்யூவி-க்கான முன்பதிவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இது ஒரே மாதிரியான வடிவமைப்பைப் பெறும் அதே வேளையில் லாங்கிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் (ஓ) ஆகிய இரண்டு புதிய பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களையும் பெறும் என்று எங்கள் டீலர் சோர்ஸ்கள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளன. கூடுதலாக மெரிடியனை பற்றிய மேலும் சில தகவல்களையும் நாங்கள் பெற்றுள்ளோம். அது கீழே விவரிக்கப்பட்டுள்ளது:

2024 ஜீப் மெரிடியன்: வேரியன்ட்களுகளில் என்ன கிடைக்கும்?

2024 Jeep Meridian front grille

புதிய பேஸ்-ஸ்பெக் லாங்கிட்யூட் வேரியன்ட் 5 இருக்கைகள் இருக்கை அமைப்பில் கிடைக்கும். கேபினில் பிளாக் மற்றும் கிரே கலர் உட்புற தீம் இருக்கும். ஜீப் காம்பஸின் லாங்கிட்யூட் வேரியன்ட்டில் இருந்து இது பெறப்பட்டுள்ளது. இந்த பேஸ்-ஸ்பெக் மெரிடியனில் 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்கும். இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் LED ஹெட்லைட்களுடன் வழங்கப்படும். இது 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170 PS/350 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக கனெக்ட் செய்யப்பட்டு FWD வசதியுடன் கிடைக்கும்.

ஒன்-அபோவ்-பேஸ் லாங்கிடியூட் (O) வேரியன்ட் 7 சீட்களை பெறும். இது புதிய பேஸ் மாடலின் அதே உட்புற தீம் உடன் வரும். இதில் லெதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் இருக்கும். லாங்கிட்யூட் உடன் வழங்கப்படும் வசதிகளுடன் கூடுதலாக இது ஒரு சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஃபாக் லேம்ப்களைப் பெறும். லாங்கிட்யூட் (O) வேரியன்ட் மேனுவல் அல்லது FWD செட்டப் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு இடையே ஒரு ஆப்ஷனை பெறும்.

2024 Jeep Meridian dashboard

மிட்-ஸ்பெக் லிமிடெட் (O) ஆனது, இது ஒரு புதிய பீஜ் இன்டீரியர் தீம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கனெக்டட் கார் டெக்னாலஜி வசதியுடன் வரும். மற்ற அம்சங்கள் தற்போதைய-ஸ்பெக் வேரியன்ட்டில் இருந்து பெறப்படும். 2 -வது மற்றும் 3 -வது வரிசைகளுக்கான வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஏசி, 10.2 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 9 ஸ்பீக்கர் ஆல்பைன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இந்த காரில் உள்ளன. இது FWD அல்லது ஆல் வீல் டிரைவ் (AWD) செட்டப் உடன் தொடர்ந்து வழங்கப்படும்.

ஃபுல்லி லோடட் ஓவர்லேண்ட் வேரியன்ட் கனெக்டட் கார் டெக்னாலஜி உடன் கூடிய டியூப்லோ-கலர் கேபின் மற்றும் புதிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பைப் பெறும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் FWD அமைப்பையும் பெறும். ஆட்டோமெட்டிக் மட்டுமே AWD செட்டப்பை பெறும்.

மேலும் படிக்க: 2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?

2024 ஜீப் மெரிடியன்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Jeep Meridian

தற்போதைய ஸ்பெக் ஜீப் மெரிடியனின் விலை ரூ. 29.99 லட்சத்தில் இருந்து ரூ. 37.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கும். புதுப்பிக்கப்பட்ட மெரிடியன் இரண்டு புதிய பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களை கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அதுவும் இதேபோன்ற தொடக்க விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஜீப் மெரிடியன் டீசல்

was this article helpful ?

Write your Comment on Jeep meridian

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience