சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவுக்கு வரும் டெஸ்லா - பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு உறுதி செய்த எலான் மஸ்க்

tarun ஆல் ஜூன் 22, 2023 12:12 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
1020 Views

மாடல் 3 மற்றும் மாடல் Y ஆகியவை இந்தியாவில் டெஸ்லாவின் முதல் கார்களாக இருக்கலாம்.

முக்கிய செய்தி! டெஸ்லா இந்தியா அறிமுகத்தை பிராண்டின் முதலாளி எலான் மஸ்க் உறுதிப்படுத்தினார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது அவரைச் சந்தித்தார், அங்கு அவர்கள் ஆற்றல் முதல் ஆன்மீகம் வரை பல விஷயங்களைப் பற்றிப் பேசினர்.

ஒரு பொது நேர்காணலில், எலான் மஸ்க், "பிரதமருடன் இது ஒரு அருமையான சந்திப்பு, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்தார். அதனால், நாங்கள் ஒருவரையொருவர் சிறிது காலமாக அறிவோம்" என்று கூறினார்.

"இந்தியாவின் எதிர்காலம் குறித்து நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக உள்ளேன். உலகின் எந்த பெரிய நாட்டையும் விட இந்தியா அதிக நம்பிக்கையை கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: பெரியது, சிறந்தது? இந்த 10 கார்கள் உலகின் மிகப்பெரிய டிஸ்பிலேகளைக் கொண்டுள்ளன

டெஸ்லா எப்போ வரும்?

முடிந்தவரை டெஸ்லா விரைவில் இந்தியாவில் இருக்கும் என்றும் மஸ்க் கூறினார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளை ஆராய டெஸ்லா நிறுவனருக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை நிறுவி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் EVகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது என்ற செய்தியை இது மேலும் வலுப்படுத்துகிறது. இது பிரீமியம் EV களின் குறைந்த விலையை உறுதி செய்யும்.

இதுவரை டெஸ்லாவின் முயற்சிகள்

டெஸ்லா-இந்தியா பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கத்தை கண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் தனது அலுவலகத்தை பதிவுசெய்தது, மேலும் மாடல் 3 இன் பல சோதனை கார்களை நாம் பார்த்தோம். இருப்பினும், அதிக இறக்குமதி வரிகள் முக்கிய தடையாக இருந்தது, இது டெஸ்லாவை அதன் இந்தியாவின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்ள வைத்தது. அமெரிக்க கார் தயாரிப்பாளரின் பியூர் EV -களுக்கான குறைந்த கட்டணங்களுக்கான கோரிக்கை நீக்கப்பட்டது மற்றும் நிறுவனம் தனது தயாரிப்புகளுடன் சந்தையை முதலில் சோதிக்க முடியாமல் உற்பத்தி முதலீடுகளை செய்வதில் நிச்சயமற்றதாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தது.

இதையும் படியுங்கள்: இந்தியாவின் லித்தியம் கையிருப்பு இப்போதுதான் பெரிதாகிவிட்டது

கார் தயாரிப்பாளரிடம் தற்போது மாடல் 3, மாடல் Y, மாடல் எக்ஸ் மற்றும் மாடல் எஸ் ஆகியவை உலகளவில் விற்பனைக்கு வந்துள்ளன இந்தியா முதலில் மாடல் 3 செடான் மற்றும் மாடல் ஒய் க்ராஸ் ஓவரைப் பெறலாம். சைபர்ட்ரக் 2024 இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும், அதே நேரத்தில் கார் தயாரிப்பாளரும் ஒரு புதிய என்ட்ரி லெவல் EV -யை தயார் செய்து வருகிறார்கள்.

Share via

Write your Comment on Tesla Model 3

S
sunilkumar
Jun 21, 2023, 12:30:42 PM

Have they agreed to lower the import duty? That was the main issue

மேலும் ஆராயுங்கள் on டெஸ்லா மாடல் 3

டெஸ்லா மாடல் 3

4.737 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.60 லட்சம்* Estimated Price
செப் 01, 2047 Expected Launch
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை