விமர்சனத்தில் சிக்கிய ஆட்டோபைலட் அம்சத்திற்கு டெஸ்லா தடை விதித்தது
published on ஜனவரி 13, 2016 01:16 pm by sumit for டெஸ்லா மாதிரி எஸ்
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாடல் S-ல் காணப்பட்ட ஆட்டோபைலட் அம்சத்திற்கு, டெஸ்லா நிறுவனம் தடை விதித்துள்ளது. இந்த அம்சம் முழுமையான பாதுகாப்பு கொண்டது அல்ல என்று பல வல்லுநர்களும் கருத்து தெரிவித்த நேரத்தில், இந்த அமெரிக்க வாகன தயாரிப்பு ஜாம்பவான் நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அம்சத்தோடு தொடர்புடைய குறைபாடுகளை நீக்கி, இன்னும் மேம்படுத்தும் வகையில், தற்போதைக்கு அதை நிறுத்தி வைக்கப் போவதாக, டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 அக்டோபர் மாதம் இந்த அம்சத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்த போது, அந்நிறுவனத்தின் CEO ஏலன் மாஸ்க் துவக்கி வைத்து பேசுகையில், இது இன்னும் ஒரு வளர்ச்சியடைந்து வரும் நிலையில் தான் உள்ளது, என்றார். கார் தயாரிப்பாளரிடம் இருந்து இது 100% பாதுகாப்பானது என்ற அறிவிப்பு வரும் வரை, கை பயன்படுத்தாமல் ஓட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று டிரைவர்களுக்கு, அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த அம்சத்தை இவ்வளவு விரைவில் அறிமுகம் செய்ததற்கு, அந்த அளவிற்கு அந்நிறுவனத்திற்கு விமர்சனங்கள் வந்தன. இந்த காரின் செயல்பாடு தற்போதைக்கு குடியிருப்பு பகுதி சாலைகள் அல்லது சென்டர் டிவைடர் இல்லாத சாலைகளுக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த காரை அதிகபட்ச வேகமாக மணிக்கு 5 மைலை விட சற்று அதிகமாக ஓட்ட முடியும் என்று பொருள் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
மாடல் S, நவீன கால உபகரணங்களான ரேடார், GPS, கேமரா மற்றும் சாலையின் போக்கை கண்டறிய உதவும் மேப்பிங் செயல்பாடு ஆகியவற்றை பயன்படுத்துகிறது. சாலைகள் சரியான முறையில் குறிக்கப்படாமல் (மார்க் செய்யாமல்) இருக்கும்பட்சத்தில், கேமரா லைன்களை தவிர விடுவதால், அது விபத்தில் சென்று முடிவடைவதே, தற்போது எழுந்துள்ள பெரிய பிரச்சனை ஆகும். யூரோப்பியன் நியூ கார் அஸ்சேஸ்மென்ட் பிரோகிராமிடம் (யூரோ NCAP) இருந்து, மாடல் S-க்கு பாதுகாப்பிற்கான அதிகபட்ச அளவான 5-ஸ்டார் கிடைத்துள்ளது.
பேட்டரி கார்களில் பலம் கொண்டதாக (ஸ்டால்வர்ட்) அறியப்படும் டெஸ்லா, அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்காகவும் பெயர்பெற்றது. முன்னதாக, சீட் பெல்ட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனை தொடர்பாக, இந்த வாகன தயாரிப்பாளர் மூலம் எல்லா S மாடல்களும் மறுஅழைப்பை (ரீகால்டு) பெற்றன. ஆனால் இது 30 நிமிட நேரத்தில் சரி செய்யப்படும் பிரச்சனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful