டெஸ்லா எப்போது இந்தியாவுக்கு வரும், எது முதல் மாடலாக இருக்கும் ?... இதுவரை தெரிந்த விவரங்கள் இங்கே
published on நவ 24, 2023 07:18 pm by rohit for டெஸ்லா மாடல் 3
- 42 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் EV -யை தயாரிப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கே உற்பத்தி ஆலையை அமைக்கலாம்.
ஜூன் 2023 -ல் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது - டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், அவரை சந்தித்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் நவம்பர் மாதத்தை அடைந்த பிறகும் , அது இன்னும் நடக்கவில்லை, ஆனால் இப்போது அது விரைவில் நடக்கும் என தெரிகிறது. டெஸ்லாவின் இந்திய வருகையை பற்றி இதுவரை நமக்கு தெரிந்த விஷயங்கள்:
இறக்குமதி வரிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு
இந்திய அரசாங்கத்தின் இறக்குமதி வரி நீண்ட காலமாக பேசுபொருளாக உள்ளது.டெஸ்லா EV -யின் இந்திய வருகை தாமதமானதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. டெஸ்லா போன்ற உலகளாவிய பிராண்டுகள் ஐந்தாண்டு காலத்திற்கு வரிக் குறைப்பால் பயனடையலாம் என்று இந்திய அரசு அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் இந்த EV தயாரிப்பாளர்கள் இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை நிறுவ உறுதியளித்தால் மட்டுமே.
உள்ளூரில் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும்
அமெரிக்க EV தயாரிப்பாளர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ளூர் உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை 16,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் டெஸ்லா ஆலையை நிறுவுவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளன.
முதல் சில மாடல்கள் இறக்குமதி செய்யப்படலாம்
இந்தியாவில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க டெஸ்லா -வுக்கு சில காலம் ஆகும் என்பதால் நேரத்தைக் கருத்தில் கொண்டு, டெஸ்லா முதலில் அதன் உலகளாவிய தயாரிப்புகளில் சிலவற்றை இங்கு இறக்குமதி செய்வதன் மூலம் விற்பனையை தொடங்கலாம். சீனாவில் இருந்து மின்சார கார்களை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமீபத்திய எல்லை தொடர்பான பதட்டங்களால் டெஸ்லா அதன் ஜெர்மனி ஆலையில் இருந்து மாடல்களை இறக்குமதி செய்யக்கூடும்.
இதையும் பார்க்கவும்: மஹிந்திரா XUV.e9 மற்றும் மஹிந்திரா XUV.e8 ஆகிய கார்கள் ஒரே மாதியான கேபினை பகிர்ந்து கொள்கின்றன
தயாரிப்பில் உள்ள ஒரு புதிய EV
2023 -ம் ஆண்டின் தொடக்கத்தில், டெஸ்லாவால் ஒரு புதிய என்ட்ரி-லெவல் மின்சார கார் உருவாக்கத்தில் இருப்பது தொடர்பான தகவல் வெளியானது. இந்த புதிய EV டெஸ்லாவின் மிகச்சிறிய மற்றும் மிகவும் விலை குறைந்த மாடலாக மாற உள்ளது. மாடல் 2.' டீசரின் அடிப்படையில், இது செங்குத்தான கூரை மற்றும் முக்கிய ஷோல்டர் லைன் கொண்ட உயரமான கிராஸ்ஓவராக இருக்கலாம் என தோன்றுகிறது. இதன் வடிவமைப்பு மாடல் Y மற்றும் மாடல் 3 ஆகிய கார்களில் இருந்து வடிவமைப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் இந்தியாவிற்கு வரும் கார் எது ?
டெஸ்லா மாடல் 3 மற்றும் டெஸ்லா மாடல் Y போன்ற மாடல்கள் முதலில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிற்கு வரலாம் என்று நாங்கள் நினைக்கிறோம், மேலும் இரண்டும் ஏற்கனவே சில முறை சோதனையும் செய்யப்பட்டுள்ளன. அறிக்கைகளின் படி, டெஸ்லா ஒரு சிறிய மேட்-இன்-இந்திய EV -யை அறிமுகப்படுத்தலாம், இதன் விலை சுமார் ரூ. 20-லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
நமது சாலைகளில் டெஸ்லா கார்களை எப்போது பார்க்க விரும்புகிறீர்கள், எது முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.