டெஸ்லா நிறுவனம் தனது மாடல் எஸ் கார்களை உலகம் முழுதும் இருந்து திரும்ப பெற்று கொள்கிறது

மாற்றப்பட்டது மீது Dec 01, 2015 12:59 PM இதனால் Sumit for டெஸ்லா மாடல் எஸ்

  • 13 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:

அமெரிக்க கார் தயாரிப்பாளர்களான டெஸ்லா நிறுவனத்தினர் தங்களுடைய மாடல் "S”   கார்களில் காணப்பட்ட சிறிய சீட்பெல்ட் சம்மந்தமான பிரச்சனையின் காரணமாக உலகம் முழுக்க இருந்து 90,000  திரும்ப பெற முடிவி செய்துள்ளனர். இந்த மாடல் "S “ காரின் முன்னிருக்கையில் இருந்த ஒரு பயணி , பின்னால் அமர்ந்திருந்த தன்னுடைய சக பயணியுடன் பேசுவதற்காக சட்டென்று திரும்பிய போது அவரது சீட்பெல்ட் சட்டென்று அறுந்தது.  இதன் அடிப்படையில் அவர் அளித்துள்ள புகாரின் பேரில் டெஸ்லா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் , இந்த நடிவடிக்கையின் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு எந்த அளவிற்கு இருந்தாலும் அதை பற்றி டெஸ்லா கவலைக்கொள்ள போவதில்லை.   மேலும் அவர் கூறுகையில் இந்த சீட்பெல்ட் குறைபாட்டின் காரணமாக இது வரை எந்த வித விபத்தோ அல்லது காயங்களோ இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை என்றும் கூறினார். ஒவ்வொரு டெஸ்லா காரும் நுணுக்கமாக சோதித்து தரப்படும் என்றும் டெஸ்லா கார்  உரிமையாளர்கள் எந்த விதமான அச்சமும் கொள்ள தேவை இல்லை என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். அதே சமயம் வாடிக்கையாளர்கள் தாங்களே சீட்பெல்ட் கடினத்தன்மையை சுமார் 80  பவுண்ட் வலுவுடன் இழுப்பதன் மூலம் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் முழுமையான பரிசோதனையை செய்ய டெஸ்லா செர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்வதே சிறந்தது என்றும் வெறும் 6 நிமிடங்களில் அந்த சீட்பெல்ட் குறைபாடு சரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது,

மாடல் S கார்கள் சமீபத்தில் தான் ஐரோப்பிய தர நிர்ணய திட்டத்தின் ( Euro NCAP ) மிக அதிகப்படியான 5 – ஸ்டார் அந்தஸ்தையும், அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின்  (NHTSA)   அமைப்பின் சான்றிதழையும் பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இரண்டு தர நிர்ணய அமைப்பிடம் இருந்து சான்றிதழ் பெற்ற ஒரு சில கார்களில் டெஸ்லா மாடல் S கார்களும் ஒன்றாகும் .

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்

Write your Comment மீது டெஸ்லா மாடல் எஸ்

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?