டெஸ்லா நிறுவனத்தில் மோடி
published on செப் 29, 2015 03:25 pm by cardekho
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் பிரதம மந்திரி திரு. நரேந்த்ரா மோடி, தனது அமெரிக்க விஜயத்தின் நடுவே, நேற்று டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்தார். இந்தியா மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்ஸங்களை, தன்னகத்தே கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், இந்த விஜயம் நடந்தேறி உள்ளது குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். டெஸ்லா மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ஏலோன் மஸ்க்கை திரு. மோடி சந்தித்து, புரட்சிகரமான பேட்டரி தொழில்நுட்பம் பற்றியும் அதை எவ்வாறு விவசாயிகளின் நன்மைக்கு பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் விவாதித்தார்.
அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கும் இலக்குகளைக் கொண்ட SDG பட்டியலில் முதன்மை படுத்தப்பட்ட, சென்ற வாரம் நடந்த ஐ.நா சபையின் பொதுக் கூட்டம் மற்றும் நரேந்த்ர மோடியின் கிளைமேட் அஜெண்டா போன்றவை நடந்தேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுற்று சுழலை மாசுபடுத்தாத பேட்டரி தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாகவும் தேவையானதாகவும் இருக்கிறது. அவர்கள் இருவரும், ‘பவர் வால்’ கண்டுபிடிப்பை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றியும், இதுவரை மாபெரும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் இதனை அறிமுகப்படுத்துவது பற்றியும் விவாதித்தனர். பவர் வால் என்பது நீண்ட நேரம் சூரிய ஆற்றலை சேமித்து வைக்கக் கூடிய ஒரு சேமிப்பு சாதனம் ஆகும். தற்போது, டெஸ்லா நிறுவனம் இந்த கருவியை இந்தியாவில் தயாரிக்க எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த பேட்டரிகளை இந்திய சந்தையில் கிடைக்கச் செய்வதிலும் சிக்கல் உள்ளது. எனினும், இந்தியா அரசாங்கம் இத்தகைய நிலையை உடைத்தெரிய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.
டெஸ்லாவின் தலைமையகத்தில் மோடி தனது பயணத்தை முடித்தவுடன், டெஸ்லாவின் செய்தி தொடர்பாளர் ரிகர்டோ ரெயெஸ் PTI –யிடம், “டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஏலோன் மஸ்க் மற்றும் பிரதம மந்திரி மோடி இருவரும், டெஸ்லாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பேட்டரி தொழில்நுட்பம், ஆற்றல் சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றியும்; இத்தகைய ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகள் இந்தியாவில் எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும் விவாதித்தனர்,” என்று கூறினார்.
திரு. மஸ்க், டெஸ்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மிகவும் முன்னேறிய தொழில்நுட்பங்களைப் பற்றியும், அவை எவ்வாறு வாகனத் துறையின் தன்மையை மாற்றும் என்றும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றியும் திரு. மோடிக்கு கருத்துரையாற்றினார். தொழில்நுட்ப ஆர்வலரான நமது பிரதம மந்திரி, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரிக்குத் தனது நன்றியை ட்விட்டரில் பதிவு செய்தார்.