ரினால்ட் கிவிட் காருக்குப் போட்டியாக ஃபியட் X1H: பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது

வெளியிடப்பட்டது மீது Dec 22, 2015 12:10 PM இதனால் Manish for ஹூண்டாய் Elite i20

  • 17 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

சில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் நிறுவனத்தின் X1H என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்ட புதிய மாடல், பிரேசில் நாட்டு சாலையில் நடந்த சோதனை ஓட்டத்தின் போது தென்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் சிறிய கார் பிரிவின் முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய கார், ஃபியட்டின் சார்பாக போட்டி களத்தில் இறங்கும். X1H காரை, 2016 -ஆம் ஆண்டின் முற்பகுதியில், பிரேசில் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த ஃபியட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ஃபியட்டின் துணை நிறுவனத்தில், இந்த ஹாட்ச்பேக் மாடலின் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபியட் X1H, தனது முன் பாதி வடிவத்தில் UNO மாடலின் தொழில்நுட்பத்தையும், பின் பாதி வடிவத்தில் ஸ்கிராட்ச் மாடலின் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது. கிராஷ் டெஸ்ட்டின் போது இந்த காரின் செயல்பாடு மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதமான பயணத்தை உறுதி செய்வதே ஃபியட்டின் முக்கிய நோக்கமாக இருப்பதால், X1H மாடலின் உட்புறத்தில் கேபின் அளவை அதிகரித்திருக்கிறது. எனவே, இதன் பூட் பகுதியின் கொள்ளளவு சற்றே குறைந்து காணப்படுகிறது.

3.86 மீட்டர் நீளம் உடைய இந்த X1H காரில், பிரேசிலியன் பாலியோ ஃப்யர் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்.  இத்துடன், 5- ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால், 73 PS ஆற்றல் உருவாக்கக்கூடியதாக திகழ்கிறது. ஃபியட்டின் X1H கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, ரினால்ட் – நிஸ்ஸான் கூட்டு நிறுவனம் 1.0 லிட்டர் இஞ்ஜின் பொருத்தி வடிவமைத்துள்ள ஃபிரெஞ்சு மாடலுடன் போட்டியிடுவதற்கு, இத்தகைய சக்திவாய்ந்த பவர்பிளாண்ட் நிச்சயமாக உதவியாக இருக்கும்.

புகைப்பட ஆதாரம்: AutosSegredos.com.br

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்

Write your Comment மீது ஹூண்டாய் i20

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

எக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?