ஹுண்டாய் நிறுவனம் எலைட் i20 காரின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, எலைட் i20 யின் சிறப்பு பதிப்பு ஒன்றை மேலும் சில புதிய அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது
published on ஆகஸ்ட் 17, 2015 02:50 pm by nabeel for ஹூண்டாய் எலைட் ஐ20 2017-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலைட் i20 காரை 7 அங்குல தொடுதிரை AVN முறையுடன் அறிமுகப்படுத்திய பிறகு, ஹூண்டாய் அதன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, பல புதிய பிரிணாமங்களை இக்காரில் மேலும் சேர்த்து, வடிக்கையாளர்களுக்கு பெரிய விருந்தளிக்க முடிவு செய்துள்ளது. அவர்கள் எலைட் i20 காரை, முதலாம் ஆண்டு நிறைவு மாடலாக, ரூபாய் 6.69 லட்சம் விலையை பெட்ரோல் ரக மாடலுக்கும், ரூபாய் 7.84 லட்சம் விலையை டீசல் ரக மாடலுக்கும் நிர்ணயித்து (ஷோரூம் தில்லி) அறிமுகபடுத்தியுள்ளனர். இந்த புதிய மாடல் ரூபாய் 30,000 கூடுதல் தொகை விலையில், பந்தைய ரக மாடலை போல மாற்றம் பெறுகிறது. இந்த கூடுதல் தொகைக்கு பெரும்பாலும் அலங்கார ஒப்பனை மேம்பாடுகளை விநியோகஸ்தர்கள் தங்களின் இடத்திலேயே பொருத்தி கொடுக்கின்றனர். மேலும், முதல் 600 கார்கள் ப்ளூடூத் இணைப்பு கொண்ட 2 - டின் இசை அமைப்பு (ம்யூசிக் சிஸ்டம்), ஆறு ஒலி பெருக்கிகள் மற்றும் சீரான காலநிலை கட்டுப்பாட்டு (கிளைமேட் கண்ட்ரோல்) அமைப்பு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. இதனுடன் சேர்த்து, பார்சல் வைக்க தட்டு, அடையாள குறியீடு, தரை விரிப்பு, இருக்கை கவர்கள் மற்றும் வாசற்படி தகடுகள் ஆகிய அனைத்தும் விநியோகஸ்தர்களால் பொருத்தப்பட்டு கொடுக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இயங்கு திறனை பார்க்கும் பொது, i20 கார் 82 bhp ஓடு திறனும், 115 Nm முறுக்கு விசையும் தரகூடிய 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜினுடன் இணைந்த ஐந்து வேக ஆளியக்க பல்லினைப்பு பெட்டி (கியர் பாக்ஸ்) ஆகியவற்றை கொண்டுள்ளது. இக்காரின் மற்றொரு வகை, 89 bhp ஓடு திறனும், 220 Nm முறுக்கு விசையும் தரகூடிய 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினுடன் இணைந்த ஆறு வேக ஆளியக்க பல்லினைப்பு பெட்டி (மனுவல் கியர் பாக்ஸ்) ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த மாத முற்பகுதியில், கார் உற்பத்தியாளர்கள், i20 ரக கார்களுக்கு 7 அங்குல தொடுதிரை ஒலிகாட்சியுடன் (டச் ஸ்கிரீன் ஆடியோ விஷுவல் நேவிகேஷன்) கூடிய வழி காட்டும் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பு ஹோண்டாவின் போட்டியாளரான, புதிய ஜாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டியிட ஒரு உந்துசக்தியாக இருக்கும். இது AVN கிரேட்டாவிலிருந்து இணைத்து கொண்ட பிறகு விமர்சகர்கள் மற்றும் அதன் பயனர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. இந்த 7 அங்குல தொடுதிரை ஒலிகாட்சி வசதி எலைட் i20 காரில் புது வகையாக அறிமுகபடுத்தபட்டது. அதேசமயம் எலைட் i20 ஆக்டிவ் காரில் இவ்வசதி மேம்படுத்தபட்டு சந்தைக்கு வருகிறது.
0 out of 0 found this helpful