போட்டி விவரம் : க்விட் AMT vs ஆல்டோ K10 vs இயான்
modified on பிப்ரவரி 12, 2016 02:55 pm by sumit for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் நிறுவனம் தனது ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் பிரிவு காரான க்விட் கார்களின் AMT வசதி கொண்ட வெர்ஷன் ஒன்றை சமீபத்தில் நிறைவடைந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே இந்த க்விட் கார்கள் தனது SUV போன்ற வடிவமைப்பின் காரணமாக மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்துள்ளது. இந்த ஆடோமேடிக் கியர் ஷிப்ட் வசதி உருண்டையான நாப் வடிவில் உள்ளது. இது இந்த க்விட் கார்களின் தனித்துவத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்த வசதி கொண்ட ஆல்டோ K10 கார்களில் இது ஒரு லீவர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. க்விட் கார்களின் மைய பகுதியில் அசத்தலான இன்போடைன்மென்ட் அமைப்பு ஒன்று , இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களில் இல்லாத அளவுக்கு சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. ஆல்டோ K10 ஆட்டோமேடிக் வேரியன்ட் மற்றும் இந்த பிரிவில் உள்ள மற்றுமொரு காரான இயான் கார்களுடன் இந்த க்விட் கார்கள் போட்டியிடும். . இயான் கார்களும் சந்தையில் ஓரளவு நல்ல முறையில் விற்பனை ஆகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. .
ஆம் இதையெல்லாம் பார்க்கையில் க்விட் கார்கள் எல்லா விதத்திலும் மற்ற கார்களுக்கு கடும் சவாலாக திகழ்கிறது என்பது நன்றாக தெரிகிறது. முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மேனுவல் வேரியன்ட் க்விட் கார்கள் தனது அனைத்து போட்டியாளர்களையும் பின்னுக்கு தள்ளி நிலை குலைய வைத்ததை நாம் பலமுறை எங்களது முந்தைய செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டி இருந்தோம். வெகு விரைவில் இந்த க்விட் கார்கள் கடல் கடந்து பிரேசில் நாட்டில் கால் பதிக்க உள்ளது. ஏற்றுமதி விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த காரின் டாப் - எண்டு மாடலின் தற்போதைய விலை ரூ. 3.9 இலட்சங்களாகும்.. என்ஜின் சக்தி இப்போது அதிகரிக்கப் பட்டுள்ளதுடன் ( 0.8L- ல் இருந்து 1.0L) AMT வசதியும் பொருத்தப்பட்டுள்ளதால் ரெனால்ட் நிறுவனத்திற்கு விலை கட்டுபடியாகாத நிலை உருவாகலாம் என்று தெரிகிறது.
க்விட் ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார் என்பதால் இதன் வாடிக்கையாளர்களுக்கு விலை மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும். இதை மனதில் கொண்டு ரெனால்ட் செயல்படுமே ஆனால் வேறு எந்த ஒரு விஷயமும் க்விட் கார்களின் வெற்றி பயணத்திற்கு தடையாக இருக்காது என்று உறுதியாக சொல்லலாம். . இன்னொரு புறம் ஆல்டோ K10 கார்களிலும் AMT வெர்ஷன் அறிமுகமாகி இருந்தாலும் , மாருதி என்ற மிகப்பெரிய நிறுவன தயாரிப்பு என்கின்ற பின்பலம் இருந்தாலும் மொத்தத்தில் க்விட் கார்கள் தனது மிக அசத்தலான SUV போன்ற வடிவமைப்பு மற்றும் மிகச் சிறந்த சிறப்பம்சங்கள் மூலம் ஆல்டோ கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்பதை நாம் உறுதியாக சொல்லலாம். இந்த இரண்டு கார்களுடன் ஒப்பிடுகையில் இயான் கார்களில் AMT வெர்ஷன் இல்லை என்பதைத் தவிர மற்றபடி கையாள்வதற்கு மிக எளிதாக உள்ள கார் என்ற முறையில் இந்த கார்களும் ஓரளவு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.
மேலும் வாசிக்க : க்விட்டிற்கான ஒரு போட்டியாளரை, மாருதி சுசுகி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது