க்விட்டிற்கான ஒரு போட்டியாளரை, மாருதி சுசுகி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது
published on பிப்ரவரி 11, 2016 06:43 pm by manish
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவின் சிறப்பான விற்பனையாகும் காராக, ஆண்டுதோறும் மாருதி சுசுகியின் ஆல்டோ 800 தான் இருந்து வருகிறது. ஆனால் ரெனால்ட் க்விட் காரின் அறிமுகத்திற்கு பிறகு, இதன் விற்பனை வேகம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இந்த பிரான்ஸ் நாட்டு வாகனத் தயாரிப்பாளரின் மூலம் பிரிவிலேயே முதல் முறையாக அதிகளவிலான அம்சங்கள் அளிக்கப்பட்டதால், துவக்க-நிலை ஹேட்ச்பேக் பிரிவின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெருவாரியான வரவேற்பை பெற முடிந்தது. மாருதியின் மொத்த விற்பனையில் 35% துவக்க-நிலை ஹேட்ச்பேக் பிரிவில் இருந்து தான் கிடைக்கிறது என்பதை கருத்தில் கொண்டால், இந்த வாகனத் தயாரிப்பாளர் உடனடியாக ஒரு புதுப்பிக்கப்பட்ட மாடலை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தெரியவரும். இதன்மூலம் சந்தையின் மீது மாருதிக்கு ஒரு புதிய அணுகுமுறை கிடைப்பதோடு, அதன் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் எதுவாக அமையும். சமீபகால ஒரு அறிக்கையை வைத்து பார்த்தால், இந்திய சந்தையில் க்விட் காரை எதிர்த்து போட்டியிடும் ஒரு A-பிரிவை சேர்ந்த துவக்க-நிலை ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்ய, மாருதி நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு பேட்டியில் மாருதி சுசுகி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கினிச்சி ஆயுகவா கூறுகையில், “சந்தை மற்றும் தயாரிப்புகளை மறுஆய்வு செய்து, இந்த பிரிவிற்கான ஒரு புதிய தயாரிப்பின் வடிவமைப்பில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே நாங்கள் ஒரு தயாரிப்பிற்கு திட்டமிட்டு இருக்கிறோம். ஆனால் சந்தையை முதலில் மறுஆய்வு செய்து, எந்த தயாரிப்பு மற்றும் எந்த மாதிரியான மாடல் தேவைப்படுகிறது என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளது. எங்களின் வணிகத்தில் மினி பிரிவு மிகவும் முக்கியமானது என்பதால், அந்த பிரிவில் நாங்கள் தொடர்ந்து எங்களின் கவனத்தை செலுத்துவோம். எங்களின் தயாரிப்புகளை நாங்கள் பராமரிக்க வேண்டியுள்ளது” என்றார்.
ரெனால்ட் க்விட் காரின் முன்பதிவு 85,000 என்ற இலக்கையும் கடந்து சென்ற நிலையில், அதன் அறிமுக நாளில் இருந்து இதுவரை ஏறக்குறைய 25,000 யூனிட் ஹேட்ச்பேக்குகளை, அவ்வாகனத் தயாரிப்பாளர் விற்பனை செய்துள்ளார். இந்த பங்களிப்பை தொடர்ந்து, இப்பிரிவை சேர்ந்த ஆல்டோ மற்றும் வேகனார் ஆகிய மாருதியின் தயாரிப்புகளின் ஆண்டுத்தோறும் நடக்கும் விற்பனை 4.3% சரிந்துள்ளது. இதை தவிர, சமீபத்தில் பிரபலமடைந்து வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், ரெனால்ட் நிறுவனத்தின் அடுத்து வரவுள்ள 1-லிட்டர் மற்றும் AMT-சாதனம் கொண்ட க்விட் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful