ஒப்பீடு : ரெனால்ட் க்விட் Vs ஆல்டோ 800 Vs ஆல்டோ K10 Vs கோ Vs இயான்
raunak ஆல் செப் 25, 2015 12:56 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 39 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது புதிய க்விட் கார்களின் விலையை அறிவித்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய்பூர் : மற்ற A - பிரிவு கார்களுடன் ஒப்பிடுகையில் க்விட் காரின் விலை மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் தனது முக்கிய எதிரியான ஆல்டோ 800 காருடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்த விலை இந்த க்விட் கார்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நானோ கார்களுக்கு அடுத்தப்படியாக நாட்டிலேயே மிகக்குறைந்த ரூ. 2.56 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ) விலையுடன் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது இந்த க்விட் கார்கள். A பிரிவு கார்களின் விலையை கொண்டிருந்தாலும் , அளவு மற்றும் சிறப்பம்சங்களை பொறுத்தவரை B பிரிவு கார்களை மட்டும் அல்ல B+ ஹேட்ச் பிரிவு கார்களையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு அற்புதமான சிறப்பம்சங்களை க்விட் கார்கள் தன்னகத்தே கொண்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ரெனால்ட் நிறுவனம் ஆரம்ப நிலை (என்ட்ரி லெவல் ) A பிரிவை தன்னுடுய அசாத்திய அம்சங்களால் சிதறடித்திருக்கும் இந்த க்விட் காரை A பிரிவு கார்கள் ஒவ்வொன்றுடனும் ஒப்பிட்டு ஒரு முழுமையான ஒப்பீட்டை உங்களுக்கென வழங்குகிறோம். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம் !