ஒப்பீடு: அபார்த் புண்டோ இவோ vs ஃபோர்டு ஃபிகோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT
published on அக்டோபர் 08, 2015 02:11 pm by manish
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
வோல்க்ஸ்வேகன் குழுவினருக்கு எப்போதும் தோல்வியே இல்லை என்று நாம் நினைக்க முடியாத வகையில், அவர்களை மேற்கொள்ள இத்தாலியர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள். ஃபோர்டு நிறுவனம் தனது ஃபிகோ ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்ததில் இருந்தே, வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சிக்கல் துவக்கிவிட்டது. ஏனெனில் அது, ஜெர்மன் நாட்டு ஹேட்ச் அளிக்கும் மணிக்கு 0 – 100 கி.மீ என்ற முடுக்குவிசை புள்ளிவிபரங்களை தவிடுபோடியாக்கி உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க வாகன தயாரிப்பாளருக்கும் போட்டியாளர்கள் இல்லாமல் இல்லை. இத்தாலி நாட்டு வாகன தயாரிப்பாளர் தனது அபார்த் இந்தியா பட்டியலின் கீழ் அபார்த் புண்டோ இவோ-வை அறிமுகம் செய்து சேர்க்க உள்ளார். தேள் லோகோவை அடையாளமாக கொண்ட நிறுவனம் அளிக்கும் கவர்ச்சிகரமான செயல்திறன் புள்ளிவிபரங்களை, இந்த கார் முறியடிக்கும் என்ற நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் ஏதாவது ஒரு சிறப்பின் மூலம் தனது தனித்தன்மையை வெளிகாட்டுகின்றன. இதனால் மேற்கூறிய ஒவ்வொரு கார்களையும் எதிரெதிராக நிறுத்தி ஒப்பீடு செய்ய உள்ளோம்.
தோற்றம்
அபார்த் புண்டோ இவோவில், அபார்த் நிறுவனத்தின் அடையாளத்தை, போனட் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றில் பதித்துள்ளது. இந்த காரில் அபார்த் எழுத்துகளுடன் கூடிய ஸ்போர்ட்டி டிக்கல்கள் உள்ளது. மேலும் அலாய் வீல்களில் காணப்படும் இரு கரங்களை கொண்ட தேள் வடிவத்தை, யாராலும் கவனிக்காமல் இருக்க முடியாது. அதேபோல இரட்டை நிற வண்ணப்பூச்சும் சேர்ந்து, இந்த காருக்கு ஒரு நேர்த்தியான ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது. ஃபோர்டு நிறுவனத்தின் சிறிய ஹேட்ச், இதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல என்பதை போல, ஆஸ்டன் மார்டினில் உள்ளது போன்ற கிடைமட்ட கிரோம் பார்களை கொண்ட கிரிலை பெற்றுள்ள தன்மை, இந்த காரில் ஒரு பிரிமியம் தோற்றத்தை உணர செய்கிறது. மேலும் நமது விருப்பத்திற்கேற்ப, 7 வேறுபட்ட நிறங்களில் இந்த கார் வெளியிடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை, அடுத்துவர உள்ள முஸ்டாங்கில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டவை.
போலோ TSI GT-யின் வடிவமைப்பை பொறுத்த வரை, அதன் அடிப்படையை சார்ந்துள்ளது. அதன் அழகியலில் GT பேட்ஜை பெற்றுள்ளது மட்டுமே மேம்பாடாக காணப்பட்டு, காரில் ஆங்காங்கே காண முடிகிறது.
விலை
அபார்த் புண்டோவின் விலை ரூ.10 லட்சம் என்று நிர்ணயிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஒப்பீட்டில் வோல்க்ஸ்வேகன் போலோவிற்கு ரூ.8.4 லட்சம் என்றும், ஃபிகோவிற்கு ரூ.7.1 லட்சம் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விலை நிர்ணயத்தில், மற்ற போட்டியாளர்களை அமெரிக்கர்கள் வீழ்த்திய நிலையில், அனுபவத்திலும் அந்த கார், நாம் அளிக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பை கொண்டுள்ளது. மேற்கூறியது போன்ற விலை நிர்ணயிக்கப்பட்டால், இதுவே இந்தியாவின் பிரபலமான ஹேட்ச்சாக இருக்கும். ஏனெனில் இங்கே நாம் எண்களை குறித்து பேசுகிறோம் என்பதால், நமது வலது காலை வைப்பதற்கு 145 என்பது துல்லியமானதாக இருக்கும்.
தி கிரண்ட்
அபார்த் புண்டோ இவோ 1.4 லிட்டர் 145 bhp என்ஜினை பெற்றிருக்கும் என்று சில புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எங்களுக்கு தெரிய வருகிறது. இந்த ஆற்றல் மையத்தின் மூலம் சிறப்பான ஆற்றலை பெற முடியும் என்றாலும், ஃபோர்டு ஃபிகோ அளிக்கும் மைலேஜ் மற்றும் ஆற்றல் புள்ளிவிபரங்களோடு ஒப்பிட்டால், குறிப்பிட்ட ஹேட்ச்சிற்கு போட்டியிடுவதில் மிகவும் சிரமமாக இருக்கும். ஃபோர்டு ஃபிகோ 111bhp ஆற்றலை அளித்து, வோல்க்ஸ்வேகன் போலோ அளிக்கும் 104bhp-யை பின்னுக்கு தள்ளுகிறது. லிமிடேட் பதிப்புகள் மற்றும் மேம்பாடுகளை அளித்து எப்படியாவது தனது இடத்தை தக்கவைத்து கொள்ள வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI முயற்சி செய்து வருகிறது. அதிலும் முக்கியமாக இவை பண்டிகை காலத்தையொட்டியே வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 out of 0 found this helpful