ஃபியட் அபார்த் அவென்ச்சுராவின் விலை ஏற்றப்பட்டது!
published on அக்டோபர் 29, 2015 02:23 pm by அபிஜித்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபியட் நிறுவனம், அபார்த் புண்ட்டோ மற்றும் அவென்ச்சுரா ஆகிய மாடல்களை ரூ. 9.95 லட்சம் என்ற ஒரே விலையில் (புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியது. ஆனால், தற்போது இந்த கார் தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ இணையதளத்தில், அபார்த்தின் ஆற்றலைப் பெற்ற அவென்ச்சுராவின் விலை சற்றே கூடுதலாக, 10 லட்சத்திற்கும் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய மாற்றமாக இல்லை என்றாலும், இப்போது வரை ஃபியட் நிறுவனம் விலை ஏற்றம் பற்றிய எந்த அதிகாரபூர்வ செய்தியையும் வெளியிடவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
அபார்த் அவென்ச்சுரா மற்றும் புண்ட்டோ ஆகிய புதிய ஃபியட் மாடல்கள் அக்டோபர் 19 –ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. வெறும் 10 நாட்களே கடந்துள்ள நிலையில், அவென்ச்சுராவின் விலையைக் கூட்டியிருப்பது எதிர்பாராத விஷயமாகும். விலை ஏற்றத்தின் விளைவு நகரத்தில் வசிக்கும் மக்களை மிகவும் பாதிக்கும், ஏனெனில், 10 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட கார்களை வாங்கும் போது அதிகமான வரியை, அவர்கள் கட்ட வேண்டியது வரும். விலை உயர்வு, கிட்டத்தட்ட ரூ. 5,500 -க்கும் அதிகமாக இருக்கிறது. இது மிகப் பெரிய மாற்றமாக இல்லை என்றாலும், இத்தகைய முக்கியமான விவரத்தை இந்நிறுவனம் அறிவிக்காமல் இருப்பது, வாகன உலகில் சற்றே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க: லிமிடெட் எடிஷன் ஃபியட் புண்ட்டோ EVO ஆக்டிவ் ஸ்போர்டிவோ அடுத்த மாதத்தில் வெளிவருமா?
சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த கார்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், அபார்த் புண்ட்ட்டோவின் மாற்றியமைக்கப்பட்ட பலவிதமான அம்சங்களைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். சிவப்பு நிறத்தில் வெளிப்புற டீகால்கள், பந்தய கார்களில் உள்ளதைப் போன்ற பட்டையான கோடுகள், முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள சிவப்பு நிற வேலைப்பாடுகள்; 16 அங்குல ஸ்கார்பியன் ஸ்டிங் சக்கரங்கள்; சற்றே இறங்கிய நிலையில் உள்ள சஸ்பென்ஷன்கள் போன்ற அம்சங்களை நிச்சயமாக குறிப்பிட வேண்டும். ஆனால், அவென்ச்சுராவில் சக்கரங்கள் வழக்கமானவையாக உள்ளன. இதன் டெய்ல்கேட் பகுதியில், அபார்த் ஆற்றல் பாட்ஜ் பொருத்தப்பட்டு வருகிறது.
இரண்டு கார்களுக்கும் 1.4 லிட்டர் T ஜெட் மோட்டாரையே ஃபியட் நிறுவனம் பொருத்தி உள்ளது. எனினும், இந்த இஞ்ஜின் புண்ட்டோவில் 145 bhp சக்தியும், அவென்ச்சுராவில் 140 bhp சக்தியையும் உற்பத்தி செய்கிறது. இரண்டு கார்களிலும், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. மேலும், இவற்றின் சஸ்பென்ஷன்கள் விறைப்பான அமைப்பிற்கு (ஸ்டிப்ஃப் செட்டிங்) ஏற்றவாறு சீர் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் இஞ்ஜின்கள் 5 ஸ்பீட் கையியக்க ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க:
- ஃபியட் அபார்த் புண்ட்டோ: சிறப்பம்ஸங்கள் மற்றும் புகைப்பட கேலரி
- ஒப்பீடு: ஃபியட் அபார்த் புண்ட்டோ EVO vs. இதனுடன் போட்டிபோடும் ஹாட் ஹாட்ச்கள்