அறிமுகத்திற்கு முன்: ஃபியட் விநியோகிஸ்தரின் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அபார்த் புண்ட்டோ EVO
published on அக்டோபர் 12, 2015 06:47 pm by அபிஜித்
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட, ஃபியட் நிறுவனத்தின் புதிய சிறிய ஹாட்ச் ரக அபார்த் புண்ட்டோ EVO கார், மீண்டும் ஒரு முறை உளவாளிகளின் கண்ணில் பட்டுவிட்டது. இம்முறை ஒரு விநியோகிஸ்தரின் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதை படம் எடுத்துள்ளனர். அந்த படத்தில், தயாரிப்பாளரின் விளம்பரப் பலகை தெளிவாக தெரிகிறது. இம்மாதம் 19 -ஆம் தேதி அறிமுகமாகவுள்ள அபார்த் புண்ட்டோ EVO கார், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் வரவுள்ளது, இரண்டு வண்ணங்களிலும், சிகப்பு நிறத்தில் பட்டையான கோடு போட்ட டீகால் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க : ஃபியட் நிறுவனம் அக்டோபர் 19 -ஆம் தேதி அபார்த் புண்டோ EVO காரை அறிமுகம் செய்கிறது
145 bhp சக்தியையும், 212 Nm விசையையும் தரவல்ல 1.4 லிட்டர் T – ஜெட் மோட்டார் பொருத்தப்பட்டு வரும் இந்த அபார்த் புண்டோ EVO கார் களத்தில் இறங்கியவுடன், VW போலோ GT TSIமற்றும் ஃபோர்ட் பிகோ 1.5 லிட்டர் TiVCT பெட்ரோல் கார் ஆகியவற்றை வலுவாக எதிர்த்து போட்டியிடும். புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட புதிய புண்ட்டோ, 0-100 km /h வேகத்தை 8.8 வினாடிகளில் அடையும் செயல்திறனையும், அதிகபட்ச வேகமான 180 km /h எளிதாக அடையும் திறனும் உடையதாக தயாரிக்கப்பட்டு உள்ளது
தற்போது சந்தையில் உள்ள புண்ட்டோவைப் போல இல்லாமல், இதன் வெளிப்புறம் பந்தய கார்களைப் போல சிவப்பு நிறத்தில் பம்பர்கள் (முன்புறம் மற்றும் பின்புறம்) பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பந்தய கார்களில் காணப்படுவது போலவே, பட்டையான பளீரென்ற சிவப்பு வண்ணத்தில் உள்ள டீகால், இதன் முன்புறத்தில் ஆரம்பித்து, மேல் விதானதின் மேல் சென்று, பின்புற டெய்ல்கேட் வரை நீண்டு, அபாரமான அழகுடன் காணப்படுகிறது. இந்த புதிய சிறிய ரக ஹாட்ச் காரில், 16 அங்குல டைமண்ட் கட் ஸ்கார்பியன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, அபார்த்தின் தனிச்சிறப்புடன் வருகிறது.
அறிமுகத்திற்கு முன்பே நமது ஒப்பீடுகளை வாசிக்க: அபார்த் புண்ட்டோ EVO vs. ஃபோர்ட் பிகோ vs. வோக்ஸ்வேகன் போலோ GT
புதிய புண்ட்டோவின் உட்புறத்தில், முழுமையான கருமை நிற வண்ணம்; சிவப்பு வண்ணத்தில் பட்டையிட்ட இருக்கைகள் மற்றும் ஸ்டியரிங் வீலில் பொறிக்கப்பட்ட அபார்த்தின் சின்னம் போன்ற புதிய அம்சங்கள் தவிர, வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முக்கியமான அம்சங்கள் என்று பார்க்கும் போது, இரட்டை பாதுகாப்பு காற்று பைகள் மற்றும் அனைத்து சக்கரங்களையும் கட்டுப்படுத்தும் டிஸ்க் ப்ரேக் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் விலை, அறிமுகப்படுத்தும் போது 10 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.