உளவாளிகளின் கண்களில் சிக்கியது: அபார்த்தின் ஆற்றலைக் கொண்ட புதிய அபார்த் அவென்ச்சுரா
published on அக்டோபர் 13, 2015 05:52 pm by manish
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபியட்டின் அபார்த் ரக கார்களைப் பற்றிய வதந்திகளும், ஊகங்களும், தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அபார்த் ரகம் மிகவும் பிரத்தியேகமாகவும் பிரபலமாகவும் இருப்பதினாலேயே ஓயாத கடல் அலைகள் போல, வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பெய்யும் அடைமழை போல வந்து கொண்டிருக்கும் இந்த வதந்திகளில், தற்போது வெளிவந்துள்ள ஃபியட் மோட்டோ கிளப் படம் பிடித்த புதிய அபார்த் வகை காரின் புகைப் படமும், இந்த காரைப் பற்றிய செய்தியும் மிகவும் ருசிகரமானது. கார் ஆர்வலர்கள் வேவு பார்த்து எடுத்துள்ள இந்த படத்தில், 16 அங்குல ஸ்கார்பியன் பின்செர் அலாய் சக்கரங்கள் மற்றும் இதன் கீஃபாப் ஆகியவை இடம்பெற்று உள்ளன. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தில், காரின் பெயர் அபார்த் அவென்ச்சுரா என்று தெளிவாகத் தெரிகிறது. அபார்த் புண்ட்டோவைப் போலவே இதிலும் 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் ப்ரேக் இணைக்கப்பட்டு வரும்.
145 bhp குதிரைத் திறன் மற்றும் 212 Nm டார்க் உற்பத்தி செயவல்ல 1.4 லிட்டர் T ஜெட் இஞ்ஜின், இந்த புதிய காரில் பொருத்தப்படும். வரும் அக்டோபர் 19 –ஆம் தேதி அபார்த் புண்ட்டோ EVO சந்தைக்கு வந்துவிடும். அதைத் தொடர்ந்து, இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்படும். அபார்த் புண்ட்டோ EVO காரில் உள்ள கட்டுமான தொழில்நுட்பம், அபார்த் அவென்ச்சுரா தயாரிப்பதற்கு அடிப்படை கொள்கையாக அமைந்திருக்கும். எனவே, இஞ்ஜின் அமைப்பில் எந்த வித மாற்றமும் இல்லாமல், 5 வேக ஆளியக்கி ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படும்.
அபார்த் அவென்ச்சுராவின் மைலேஜ், லிட்டருக்கு 17.1 கிலோ மீட்டர் என்ற அளவில், அபாரமானா எரிபொருள் திறனை தரவல்லதாக உருவாக்கப்படும் என்று தெரிகிறது. அபார்த் புண்ட்டோவை விட 1.1. நொடி மெதுவாக இருந்தாலும், அபார்த் அவென்ச்சுரா மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை, புறப்பட்ட 9.9 வினாடிக்குள் எட்டிவிடும் திறனைக் கொண்டதாக அமையும்.
அபார்த் அவென்ச்சுரா சிவப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு விதமான வண்ணங்களில் வரும். இதன் எரிபொருள் திறனைப் பற்றிய தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை. எனினும், அபார்த் அவென்ச்சுரா அபார்த் புண்ட்டோ EVO காரின் க்ராஸ் ஓவர் வடிவுருவமாக (வெர்ஷன்) இருக்கும். எனவே, ஒரே வகை இஞ்ஜின் பொருத்தப்பட்டாலும், புண்ட்டோவைப் போல சிறிய ஹாட்ச் ரகமாக இல்லாமல், அபார்த் அவென்ச்சுரா எடை மிகுந்ததாக இருக்கும். எனவே, நம்மால் எரிபொருள் திறனை எளிதாக கணிக்க முடியாது.
அபார்த் அவென்ச்சுராவின் மேற்பரப்பில், அபார்த் புண்ட்டோவில் உள்ளதைப் போல பட்டையான பந்தைய கோடுகளையோ, கண்ணைக் கவரும் டீகாலையோ காண முடியாது. எனினும், இதன் உட்புறத்திலோ, வெளிப்புறத்திலோ மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்களைப் பற்றிய தகவல்கள் இப்போது வரை வெளியாகவில்லை.
மேலும் வாசிக்க:
அக்டோபர் 19 –ஆம் தேதி ஃபியட்டின் அபார்த் புண்ட்டோ EVO அறிமுகம்
ஒப்பீடு: அபார்த் புண்ட்டோ EVO vs. ஃபோர்ட் பிகோ vs. வோக்ஸ்வேகன் போலோ GT