இந்தியாவிற்கு விரைவில் வரவுள்ள தனித்தன்மை உள்ள கார்கள்
published on அக்டோபர் 19, 2015 07:01 pm by raunak
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சமீப காலமாக வாகன தொழில்துறையின் காரியங்கள், விரைவான மாற்றங்களை அடைந்து வருகிறது. அதே நேரத்தில் நம் மண்ணில் இதுவரை எதிர்பார்க்காத பல காரியங்களையும் நமக்கு விரைவில் கிடைக்க வாய்ப்பு உருவாகி வருகிறது. அதில் சில, பிரபலமான பிராண்ட்கள் / கார்கள் இருக்க, மற்றவை அவை உட்படும் பிரிவிற்குள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. அநேகமாக ரூ.10 லட்சத்திற்குட்பட்ட விலையில் 145 bhp கொண்ட சிறப்பான ஹேட்ச் கிடைக்கும் என்றோ, வாகன துறையில் கடந்த 50 வருடங்களாக அனுபவம் கொண்டு முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், நம் மண்ணில் தடம் பதிக்க போகிறது என்றோ, இதுமட்டுமல்ல இன்னும் பல காரியங்களை ஒருவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
அபார்த் புண்டோ இவோ
இத்தாலியில் இருந்து குமுறல் உடன் வருகிறது! இதுவரை இல்லாமல், டர்போ சார்ஜ்டு பெட்ரோல் மோட்டார் உடன் கூடிய புண்டோவின் ஒரு புத்தம் புதிய பதிப்பை வெளியிட பியட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, இன்டர்நெட்டில் செய்திகள் பரவி வருகிறது. இந்த தொழில்துறையில் உள்ள அனைவரும், இது ஒரு 1.4-லிட்டர் 114 PS பதிப்பாக இருந்து, T-ஜெட் மோட்டாரை பெற்று, இந்த லீனியா இயங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அபார்த் புண்டோ இதே என்ஜினை கொண்டிருந்தாலும், ஆச்சரியமிக்க 145 bhp முடுக்குவிசையை அளிப்பது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி (இன்று) பியட் நிறுவனம், இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்து, விற்பனைக்கு அனுப்ப உள்ளது. இது வெற்றிப் பெறும்பட்சத்தில், இந்தியாவின் சிறப்பான ஹேட்ச் பிரிவிற்குள் இதுவரை இல்லாத தனக்கென்ற ஒரு இடத்தை பெறும். மேலும் நமக்கு ஒரு மாற்றம் தேவை என்ற நிலையில், பியட் இந்தியாவால் நம் நாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ள இது சிறப்பாக செயல்படும் என்று நம்புவோம்.
குறிப்பு: மேற்கூறிய ஆற்றல்கூடம் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் ஆகியவை உடன் இணைந்து செயல்படும் என்பது ஒரு வேடிக்கையான விஷயமாகும்.
பரிந்துரைக்கப்பட்டது: பியட் டீலர்ஷிப் ஒன்றில் அபார்த் புண்டோ இவோ, உளவுப்படத்தில் சிக்கியது
ஃபோர்டு முஸ்டாங்
வாகன தொழில்துறையில் கடந்த 51 ஆண்டுகளாக அனுபவம் கொண்டு முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், உலகம் முழுவதும் சுற்றி வரும் நிலையில், முஸ்டாங் கார் கிடைக்காமல் உலகின் எந்தொரு பகுதியும் இருக்காது என்று ஃபோமோகோ (ஃபோர்டு!) நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியே வரும் இந்த கார், RHD லேஅவுட் அம்சத்தை பெற்றுள்ளது ஆகிய இவ்விரண்டு காரியங்களும், கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றில் முதல் முறையாக நடைபெறுகிறது. இந்த தொழிற்துறையில் இருப்பவர்களும், முஸ்டாங் காரை ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று உறுதியாக உள்ள நிலையில், நம் நாட்டில் இந்த காரை முதல் முறையாக உளவுப்படத்தில் நம்மிடம் சிக்கியது. மேலும் இந்தியாவில் இந்த காரை விரைவில் அறிமுகம் செய்ய ஃபோர்டு நிறுவனம் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருவது, ஒரு பெரிய ஆறுதலான விஷயம் ஆகும்.
பரிந்துரை:
- சீரிஸ் 1: 51-லும் நீங்கள் எப்படி அழகாக தெரிகிறீர்கள் – ஃபோர்டு முஸ்டாங்
- எக்ஸ்க்ளூஸீவ்: ஃபோர்டு முஸ்டாங் GT 5.0L V8, ARAI-ல் உளவுப்படத்தில் சிக்கியது, விரைவில் அறிமுகம்!
நிசான் GT-R
காட்ஸ்வில்லா வருகிறது! சமீபத்தில் திரு.கிறிஸ்டியன் மார்ட்ரஸ் (நிசான் மோட்டார் கம்பெனி லிமிடேட்டின் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியா பகுதிகளின் நிர்வாக கமிட்டியின் சேர்மன் மற்றும் மூத்த துணை தலைவர்) உடனான ஒரு பேட்டி எடுத்திருந்தோம். அதில் அவர், இந்தியாவிற்கு GT-R-யைக் கொண்டுவருவதை உறுதிப்படுத்தி இருந்தார். உலகிலேயே இது ஒரு சிறந்த புகழ்பெற்ற கூபே ஆகும். மேலும் GT-R என்ற இந்த காட்ஸ்வில்லாவின் என்ஜினை, ஜப்பானைச் சேர்ந்த ‘தாகுமி’ என்ற நான்கு பேர் மட்டுமே கொண்ட தலைமை வடிவமைப்பாளர்களால் அசம்பிள் செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை:
- முன்னணி வகிக்கும் பிரபலமான 8 ஜப்பானிய கார்கள்
- இந்த ஆண்டு நிசான் GT-R இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவது உறுதி செய்யப்பட்டது
ஜீப் பிராண்ட்
ஜீப் வாகனத்தின் உண்மையான தயாரிப்பாளர் நிறுவனம், அடுத்தாண்டு இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்க உள்ளனர். பெரும்பாலும் இது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெறலாம். மஹிந்திரா நிறுவனத்திற்கு தார் வடிவமைப்பிற்கு உத்வேகம் அளித்த, உண்மையான ராங்குலர் வர உள்ளது. கிராண்ட் செரோகீ வர தயாராகி வருகிறது. இதை எல்லாவற்றையும் தவிர, பியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்(FCA), FCA உடன் சேர்த்து ஜீப் பிராண்ட்டையும் தனதாக்கி கொண்டு, டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து பியட்டின் ரஞ்சான்கவுன் தயாரிப்பு தொழிற்சாலையில், நாட்டிற்கு பெரிய முதலீட்டை அறிவித்துள்ளது. இதில் ஒரு ஆரம்ப நிலை ஜீப் SUV கூட இடம் பெற்றுள்ளது. இது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட உள்ளது.
பரிந்துரை:
- வரும் 2017 ஆம் ஆண்டு முதல் புதிய SUV-களை இந்தியாவின் உள்ளூரிலேயே ஜீப் நிறுவனம் தயாரிக்கிறது, முதலீடு 280 டாலர் மில்லியன்!