அக்டோபர் 19 –ஆம் தேதி ஃபியட் அபார்த் புண்ட்டோ EVO அறிமுகம்
published on அக்டோபர் 09, 2015 04:52 pm by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபியட் நிறுவனத்தின் ஆற்றல் வாய்ந்த, 145 bhp குதிரைத்திறனை தரவல்ல, அபார்த் புண்ட்டோ EVO கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் சிறிய ஹாட்ச்பேக் ரக கார்களின் அம்சங்களை மாற்றியமைக்கவல்ல ஒரு சிறந்த வாகனமாக உருவெடுக்க, தனிச்சிறப்பு வாய்ந்த சீரிய அம்ஸங்களை இந்த காரில் அறிமுகப்படுத்த, ஃபியட் நிறுவனம் ஆயத்தம் செய்துள்ளது.
இந்த காரை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் தனது செயல்திறன் மிக்க பிராண்டை அறிமுகப்படுத்தும் முதல் பிரபலமான நிறுவனம் என்ற சிறப்பை, ஃபியட் நிறுவனம் தட்டிச் செல்கிறது. இந்த இத்தாலிய கார் நிறுவனம், அபார்த் ரக கார்களில் அபார்த் 595 காம்படிஷன் என்ற காரை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தாலும், இந்த ரகம் பிரபலமாகவில்லை. ஆனால், அபார்த் புண்ட்டோ EVO காரின் அறிமுகத்திற்கு பிறகு, இந்த செயல்திறன் மிக்க அபார்த் ரகம் இந்தியாவில் நிச்சயமாக பிரபலமாகும்.
VW போலோ GT TSI மற்றும் ஃபோர்ட் பிகோ 1.5 லிட்டர் Ti VCT போன்ற குறைந்த செயல்திறன் கொண்ட போட்டியாளர்களை எளிதாக எதிர்நோக்க, ஃபியட் நிறுவனம், இந்த புதிய காரின் விலையை ரூபாய். பத்து லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. புண்ட்டோ EVO –வை வெளியிட்ட பின், அதைத் தொடர்ந்து அபார்த் அவேன்சுரா மாடல் வெளியிடப்படும். அவேன்சுரா மாடலும் இதே மோட்டாரைப் பெற்று, அபார்த் ரக கார்களின் பிரத்தியேக சிறப்பம்ஸங்களைப் பெற்று வரும்.
பரிந்துரை செய்யப்பட்டது: இந்தியாவில் வளர்ந்து வரும் சிறிய ஹாட்ச் கார்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு, அபார்த் புண்ட்டோவின் சிறப்பம்ச விவரங்கள் கசிந்து வெளிவந்தன. அதன்படி, இந்த புதிய ஹாட்ச் பேக் மாடல், புறப்பட்ட 8.8 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை அடையக் கூடிய சக்தியுடன் வரும். இதில் பொருத்தப்பட்ட 1.4 லிட்டர் T ஜெட் டர்போ மோட்டார், 145 bhp குதிரைத்திறனும், 212 Nm டார்க்கும் உற்பத்தி செய்யவல்லது. வெளிவந்த விவரங்களின்படி, புண்ட்டோ EVO லிட்டருக்கு 16.3 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். இந்த காரின் உயரத்தை சற்றே குறைத்திருப்பதாக ஃபியட் நிறுவனம், அறிமுக உரையில் குறிப்பிட்டது. எனவே, அபார்த் புண்ட்டோ EVO தரையில் இருந்து 155 மிமீ உயரத்தில் (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) இருக்கும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் 16 அங்குல சக்கரங்கள், அபார்த்தின் ஸ்கார்பியன் அலாய் பொருத்தப்பட்டு வருகின்றன.
தவறவிட்டுவிடாதீர்கள்: