ஒப்பீடு: மாருதி சுசுகி பெலினோ vs எலைட் i20 vs ஜாஸ் vs போலோ vs புண்டோ இவோ
published on அக்டோபர் 27, 2015 12:45 pm by raunak for மாருதி பாலினோ 2015-2022
- 15 Views
- 7 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஹேட்ச்பேக் என்பது மாருதியின் உறுதியான கோட்டையாக உள்ளது. ஏனெனில் கடந்த காலத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அடையாள சின்னமான மாருதி 800, ஆல்டோ மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய 3 மாடல்களும், அந்த பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவை. இந்நிலையில் புதிய பெலினோ இன்னும் பல விறுவிறுப்பான காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. முதலாவதாக, இந்த நிறுவனத்தின் தலைசிறந்த ஹேட்ச்பேக் தயாரிப்பான ஸ்விஃப்ட் காரிடம் இருந்து அதன் பணிப் பொறுப்புகளை பெற்றுள்ளது. இரண்டாவதாக, இந்த கார் இந்தியாவில் இருந்து, முழு உலகிற்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. உள்ளூரில் பரவலாக கிடைக்க செய்யும் வகையிலான ஏற்றுமதி காரணமாக, விலை நிர்ணயம் கூட மிகவும் கண்ணியமான முறையில் செய்யப்பட்டுள்ளது. அடிப்படையான மாடல்களில் இருந்து கொண்டு, தரமான இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் உடன் ABS மற்றும் EBD ஆகியவற்றை பெற்று, நம் நாட்டிலேயே மிகவும் சிக்கனமான காராக பெலினோ உள்ளது பாராட்டத்தக்கது. பிரிமியம் ஹேட்பேக் பிரிவில், தனது போட்டியாளர்களுடன் பெலினோ எப்படி போட்டியிடுகிறது என்பதை இங்கே காண்போம்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
வாகனத்தின் பாதுகாப்பில் இருந்து துவங்குவோம். ஏற்கனவே கூறியது போல, பெட்ரோல் மற்றும் டீசல் கொண்ட அடிப்படையான மாடல்களில், தரமான இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் உடன் ABS மற்றும் EBD ஆகியவற்றை பெற்றுள்ள ஒரே காராக பெலினோ உள்ளது. இந்த பிரிவில் உள்ள மற்ற எந்த காரும், தரமான இரட்டை முன்பக்க ஏர்பேக்களையோ அல்லது டிரைவர் ஏர்பேக்குகளையோ அளிப்பதில்லை. பெலினோவை தவிர, தரமான ABS-யை அளிக்கும் ஒரே காராக ஜாஸ் மட்டுமே உள்ளது. அதுவும் அதன் டீசல் வகையில் மட்டுமே காணப்படுகிறது. மேலும், பெலினோ, ஜாஸ், எலைட் i20 ஆகிய மூன்று கார்களிலும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் உடன் கூடிய நேவிகேஷன் மற்றும் பின்பக்கத்தை பார்க்க உதவும் கேமரா ஆகியவற்றை கொண்டு, புண்டோ இவோ மற்றும் போலோ ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதிலும் ஆப்பிள் கார் ப்ளே அமைப்பை கொண்டு பெலினோவே முன்னிலையில் நிற்கிறது. இந்தியாவிலேயே முதன் முதலில் ஆப்பிள் கார் ப்ளே-யை அறிமுகம் செய்த முதல் வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையை மாருதி பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்:
மாருதி சுசுகி பெலினோ ரூ.4.99 லட்சத்தில் அறிமுகம்
மாருதி சுசுகி பெலினோ எக்ஸ்க்ளூஸீவ் படங்கள்: விவிடு இமேஜ் கேலரி!
மாருதி சுசுகி பெலினோ: ஃபஸ்ட் டிரைவ்
மாருதி சுசுகி நிறுவனம், பெலினோவிற்கு விலை நிர்ணயத்தை சிறப்பாக செய்துள்ளது. இதன் போட்டியாளர்களான ஹூண்டாய் எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் இதன் விலை குறைவாகவே உள்ளது. மேலும், தரமான இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் உடன் ABS+EBD ஆகியவற்றையும் அளிக்கிறது. ஒரே ஒரு எதிர்மறையான காரியமாக பெலினோவில் நாம் காண்பது என்னவென்றால், ஸ்விஃப்ட்டில் இருந்த அதே என்ஜினே, இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் போட்டியாளர்கள் மற்றும் என்ஜினை பகிர்ந்து கொண்ட ஸ்விஃப்ட்டை காட்டிலும் ஏறக்குறைய 100 கிலோ எடை குறைவான ஹேட்ச்சாக இது உள்ளது. இவ்வளவு காரியங்களின் மூலம் இது நம்பிக்கை அளிப்பதாக தெரிந்தாலும், பெலினோவை கொண்டு மாருதியின் விற்பனை 10 ஆயிரத்தை தாண்டுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும். ஏனெனில், இந்த அளவை எலைட் i20 மூலம் மாதந்தோறும் ஹூண்டாய் நிறுவனம் பெற்று வருகிறது. மேலும், இந்தியாவில் மட்டுமே இந்த கார் தயாரிக்கப்படுவதால், இதற்கான காத்திருப்பு காலம் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
0 out of 0 found this helpful