ஒப்பீடு: மஹிந்த்ரா KUV 100 vs கிராண்ட் i10 vs ஸ்விஃப்ட் vs பிகோ
published on ஜனவரி 18, 2016 03:09 pm by raunak for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம், தனது புதிய KUV 100 காரை ரூ. 4.42 லட்சங்கள் (புனே எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. மைக்ரோ SUV என்ற புதிய கார் பிரிவில் KUV 100 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவு இந்திய சந்தைக்கு மிகவும் புதிது. KUV 100 கார்தான் இந்தியாவின் முதல் மைக்ரோ SUV ஆகும். எனவே, தற்சமயம் இந்த பிரிவில் KUV 100 காருடன் நேருக்கு நேர் மோத எந்த வித போட்டியாளர்களும் இல்லை. எனினும், இதன் விலையை முன்னிலைப்படுத்தி, இதை B செக்மெண்ட் ஹாட்ச்பேக் கார்களான மாருதி சுசுகி ஸ்விஃப்ட், இரண்டாவது ஜெனரேஷன் ஃபோர்ட் பிகோ மற்றும் ஹுண்டாய் கிராண்ட் i10 போன்ற கார்களுடன் ஒப்பிட்டுள்ளோம்.
மேலே உள்ள படங்களில் விளக்கப்பட்ட விவரங்கள் தவிர, நாம் KUV 100 காரின் சிறப்பம்சங்களைப் பற்றியும் விரிவாக அலசலாம். 6 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய இந்த வாகனத்தில், 6 சீட்களிலும் பொருத்தப்படுவதற்கான சீட் பெல்ட் வசதி ஆப்ஷனாக வருகிறது. கேபினுக்குள் பொருத்தப்பட்டுள்ள இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்துடன் புளுடூத் வசதி, Aux-in மற்றும் USB போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் மஹிந்த்ராவின் 'புளு சென்ஸ் (Blue Sense) ஆப்' காம்ப்பாடிபிலிட்டியுடன் வருகிறது. இந்த சிஸ்டம் மொத்தம் 6 ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, குளிரூட்டப்பட்ட க்லோவ்பாக்ஸ், LED கேபின் மற்றும் மூட் லைட்கள் மற்றும் 4 கதவுகளிலும் பொருத்தப்பட்டுள்ள படில் லாம்ப்கள் போன்ற மேலும் பலவிதமான சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இஞ்ஜினை எளிதாக ஸ்டார்ட்-ஸ்டாப் செய்ய உதவும் வசதிகள் கொண்ட மஹிந்த்ராவின் பிரத்தியேகமான 'மைக்ரோ ஹைபிரிட் டெக்' தொழில்நுட்பம், இதன் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற இரண்டு வித இஞ்ஜின்களிலும் இடம்பெற்றுள்ளது. அதே நேரம், டீசல் இஞ்ஜினில் மட்டும், ECO (எகானமி) மற்றும் PWR (பவர்) என்னும் இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் இடம் பிடித்துள்ளன.
KUV 100 காரில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களான EBD -யுடன் வரும் ABS அமைப்பு, அனைத்து வேரியண்ட்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து வேரியண்ட்களிலும் முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள் பொருத்துவது ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளது. பின்புறத்தில் குழந்தைகள் இருக்கையைப் பாதுகாக்கும் நோக்கத்தில், இந்த பிரிவிலேயே முதல் முறையாக ISOFIX அமைப்பு மற்றும் பயத்தை உடைத்தெறியும் விதத்தில் ஹசார்ட் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. KUV 100 காரின் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் முன்புறத்தில் இரட்டைக் காற்றுப் பைகள் மற்றும் EBD அமைப்புடன் வரும் ABS போன்றவை இடம்பெறுகின்றன. அதே நேரத்தில், ஹுண்டாய் கிராண்ட் i10 காரின் உயர்தர வேரியண்ட்டில் மட்டுமே ஏர்பேக்குகள் மற்றும் ABS அமைப்பு போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. KUV 100, ஃபோர்ட் பிகோ, ஸ்விஃப்ட் மற்றும் i10 போன்ற கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஒப்பிட்டால், ஃபோர்ட் பிகோ வெற்றி பெறுகிறது. ஏனெனில், ஃபோர்ட் பிகோவின் உயர்தர வேரியண்ட்டில், இந்த பிரிவிலேயே முதல் முறையாக 6 காற்றுப் பைகள்; அனைத்து வேரியண்ட்களிலும் கட்டாயமாக்கப்பட்ட ஓட்டுனர் காற்றுப் பை; மற்றும் அடிப்படை வெர்ஷன் தவிர அனைத்து வேரியண்ட்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இரட்டை காற்றுப்பைகள் போன்ற சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இறுதி இரண்டு வேரியண்ட்கள் மட்டும் EBD அமைப்புடன் இணைக்கப்பட்ட ABS பெறுகின்றன. அதே சமயத்தில், இதன் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியண்ட்டில் ESC, TC மற்றும் மலையேற்றத்திற்கு உதவும் ஹில் லாஞ்ச் அஸ்சிஸ்ட் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன
மேலும் வாசிக்க
ஒப்பீடு: மஹிந்திரா TUV 300 vs க்ரேடா vs எஸ் - கிராஸ் vs ஈகோஸ்போர்ட் vs டஸ்டர் vs டெரானோ