குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் ‘ஜீரோ’ மதிப்பீட்டை மட்டுமே பெற்ற Citroen eC3 கார்
published on மார்ச் 21, 2024 06:03 pm by rohit for citroen ec3
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
eC3 -யின் பாடிஷெல் 'நிலையானது' மற்றும் லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மோசமான பாதுகாப்பின் காரணமாக இது மிகவும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது.
-
சிட்ரோன் eC3 பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 0 நட்சத்திரங்களையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 1 நட்சத்திரத்தையும் பெறுகிறது.
-
பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34 புள்ளிகளில் 20.86 மதிப்பெண்களை eC3 பெற்றுள்ளது.
-
சிட்ரோன் EV -யானது குழந்தைகளின் பாதுகாப்பில் 49 புள்ளிகளில் 10.55 புள்ளிகளை பெற்றது.
-
பாதுகாப்பு வசதிகளில் முன்பக்கமாக டூயல் ஏர்பேக்குகள் ABS உடன் EBD மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
-
விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.13.35 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.
குளோபல் NCAP நடத்திய சமீபத்திய கிராஷ் டெஸ்ட்களில் சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக பூஜ்ஜிய நட்சத்திர மதிப்பீட்டையும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒரு நட்சத்திரத்தையும் பெற்றுள்ளது. eC3 -யின் பாதுகாப்பு மதிப்பீடு #SaferCarsForIndia பிரச்சாரத்தின் இறுதிச் சோதனைகளில் ஒன்றாகும். ஏனெனில் இனிமேல் அனைத்து இந்திய-ஸ்பெக் கார் மாடல்களும் இனிமேல் Bharat NCAP நடத்தும் கிராஷ் டெஸ்ட்களுக்கு மட்டுமே உட்படுத்தப்படும்.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு (34 புள்ளிகளில் 20.86)
முன்பக்க தாக்கம் (64 கிமீ/மணி)
சிட்ரோன் eC3 ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும் ஓட்டுநரின் மார்புக்கான பாதுகாப்பு 'பலவீனமானது' என்று மதிப்பிடப்பட்டது. பயணிகளின் மார்பு 'மோசமான' பாதுகாப்பைப் பெற்றது. ஓட்டுநரின் முழங்கால்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு 'விளிம்பு நிலை' என்ற மதிப்பீட்டை பெற்றது. அதே நேரத்தில் பயணிகளின் முழங்கால்களுக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைப்பதை சோதனை காட்டுகிறது.
டிரைவரின் கால்களுக்கு 'விளிம்பு நிலை' மற்றும் நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. பயணிகளின் கால்களுக்கு 'நல்ல' பாதுகாப்பைக் கிடைத்தது. அதன் ஃபுட் வெல் பகுதி 'நிலையற்றதாக' இருந்தது. அதன் பாடி ஷெல் 'நிலையானது' என அறிவிக்கப்பட்டது. மேலும் அது மேலும் லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டது என்று விவரிக்கப்பட்டது.
பக்கவாட்டு தாக்கம் (50 கிமீ மணி)
பக்கவாட்டு தாக்க சோதனையின் கீழ் தலைக்கான பாதுகாப்பில் 'விளிம்பு நிலை' என்று மதிப்பீடு கிடைத்தது. அதே சமயம் மார்புக்கு 'போதுமானதாக இருந்தது.' eC3 வயது வந்தோரின் வயிறு மற்றும் இடுப்புக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது.
மேலும் படிக்க: சிட்ரோன் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 200 டச் பாயிண்டுகளுக்கு விரிவுபடுத்த உள்ளது.
சைடு போல் இம்பாக்ட்
சிட்ரோன் இதுவரை பக்கவாட்டு ஏர்பேக்குகளுடன் eC3 ஐ வழங்காததால் பக்க துருவ தாக்க சோதனை நடத்தப்படவில்லை. ஆனால் சிட்ரோன் நிறுவனம் அதன் இந்திய வரிசையில் உள்ள அனைத்து மாடல்களும் ஜூலை 2024 முதல் 6 ஏர்பேக்குகளுடன் ஸ்டாண்டர்டாக வரும் என தெரிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)
சிட்ரோன் EV ஆனது இந்த நாட்களில் GNCAP -லிருந்து குறைந்தபட்சத் தேவையாக இருக்கும் ESC -யை ஸ்டாண்டர்டாக வழங்கவில்லை. மேலும் சீட்பெல்ட் கட்டுப்பாட்டு அமைப்பும் சோதனை நிறுவனத்தின் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த காரணங்கள் அனைத்தும் இணைந்து எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கிற்கு 0-ஸ்டார் மதிப்பீட்டை வழங்கின.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு (49 புள்ளிகளில் 10.55)
முன்பக்க தாக்கம் (64 கிமீ/மணி)
3 வயது குழந்தைக்கான குழந்தை இருக்கை முன்னோக்கி எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டது மற்றும் முன்பக்க தாக்கத்தின் போது தலை வெளிப்படுவதைத் தடுக்க முடியவில்லை. மறுபுறம் 1.5 வயதான டம்மியின் குழந்தை இருக்கை பின்புறமாக இருந்தது. மேலும் தலைக்கு முழு பாதுகாப்பை வழங்க முடிந்தது.
பக்கவாட்டு தாக்கம் (50 கிமீ மணி)
விபத்தின் போது தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அதன் பக்க தாக்கம் முழு பாதுகாப்பைக் காட்டியது.
eC3 ஆனது அனைத்து இருக்கை நிலைகளிலும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள் அல்லது இரண்டு ISOFIX மவுண்ட்களை ஸ்டாண்டர்டாக பெறவில்லை. இந்த நிலையில் பின்புறமாக எதிர்கொள்ளும் சைல்டு சீட்டை நிறுவ வேண்டும் என்றால் பயணிகள் ஏர்பேக்கைத் துண்டிக்கும் வாய்ப்பையும் சிட்ரோன் வழங்கவில்லை.
மேலும் படிக்க: புதிதாக மேலும் 2 வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள Tata Tiago EV
சிட்ரோன் eC3 -யில் உள்ள பாதுகாப்பு வசதிகள்
சிட்ரோன் eC3 காரை இரண்டு முன்பக்க ஏர்பேக்குகள் ABS உடன் EBD, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் முன் சீட்பெல்ட் ரிமைன்டர்கள் போன்ற சில அடிப்படை பாதுகாப்பு வசதிகளுடன் கொடுக்கின்றது.
சிட்ரோன் eC3 மூன்று வேரியன்ட்களில் விற்கப்படுகிறது: லைவ் ஃபீல் மற்றும் ஷைன். இதன் விலை ரூ.11.61 லட்சம் முதல் ரூ.13.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. எம்ஜி காமெட் இவி மற்றும் டாடா டியாகோ EV ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கிறது.
மேலும் படிக்க: eC3 ஆட்டோமெட்டிக்