Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட் விற்பனை நிறுத்தப்பட்டது
published on நவ 20, 2024 10:27 pm by dipan for சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ்
- 108 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அப்டேட் உடன் எஸ்யூவி ஆனது ஃபுல்லி லோடட் ஷைன் வேரியன்ட்டுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி -யின் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
-
ரூ.36.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்த என்ட்ரி லெவல் ஃபீல் வேரியன்ட் காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
-
இது இப்போது ‘ஷைன்’ என்ற ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
-
எஸ்யூவியின் வசதிகள் மற்றும் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் எதுவும் மாறாமல் உள்ளன.
-
இது 10 இன்ச் டச் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் இது வருகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், TPMS, டிரைவர் டிரெவுஸினெஸ் டிடெக்ஷன் மற்றும் ESP ஆகியவை உள்ளன.
-
8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2-லிட்டர் டீசல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் காரின் என்ட்ரி லெவல் ‘ஃபீல்’ வேரியன்ட்டின் விற்பனை இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இந்த எஸ்யூவி இந்தியாவில் ஒரே ‘ஷைன்’ வேரியன்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. C5 ஏர்கிராஸ்-ன் விரிவான விலை பட்டியல் இங்கே:
வேரியன்ட் |
விலை |
ஃபீல் |
நிறுத்தப்பட்டது |
ஷைன் |
ரூ.39.99 லட்சம் |
ஷைன் டூயல் டோன் |
ரூ.39.99 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா
ஆனால் வசதிகளின் தொகுப்பு மற்றும் இன்ஜின் ரீதியாக எதுவும் மாறவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் இப்போது C5 ஏர்கிராஸ் காரின் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
C5 ஏர்கிராஸ் ஆனது 2022 ஆண்டில் ஒரு ஃபேஸ்லிப்ட் அப்டேட்டை பெற்றது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஃபுல்லி லோடட் 'ஷைன்' வேரியன்ட்டுடன் மட்டுமே விற்பனைக்கு வந்தது. என்ட்ரி லெவல் ‘ஃபீல்’ வேரியன்ட் பின்னர் 2023 ஆண்டு ஆகஸ்ட்டில்அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க: Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது
இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்:
சிட்ரோன் C5 ஏர்கிராஸ்: வசதிகள் மற்றும் பாதுகாப்பு
சிட்ரோன் C5 ஏர்கிராஸ் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய 10-இன்ச் டச் ஸ்கிரீன், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் பின்புற வென்ட்களுடன் கூடிய டூயல் ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஒப்பிடுகையில் நிறுத்தப்பட்ட 'ஃபீல்' வேரியன்ட் மேலே உள்ள பட்டியலில் இருந்து அனைத்தையும் பெற்றது. ஆனால் சிறிய 8-இன்ச் டச் ஸ்கிரீன் இருந்தது. ஆனால் ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை இல்லை.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டிரைவர் டிரெளவுஸினெஸ் டிடெக்ஷன், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன. ஹில் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம் போன்ற வசதிகளும் இதில் அடங்கும். நிறுத்தப்பட்ட வேரியன்ட்டிலும் இந்த அனைத்து வசதிகளும் இருந்தன.
சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்: பவர்டிரெய்ன்
சிட்ரோன் C5 ஏர்கிராஸ் ஆனது 2-லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. அதன் விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
177 PS |
டார்க் |
400 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு AT* |
*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
மேலும் படிக்க: டாடா கர்வ் மற்றும் சிட்ரோன் பசால்ட்: பாரத் NCAP மதிப்பீடுகள் ஒப்பீடு
சிட்ரோன் C5 ஏர்கிராஸ்: போட்டியாளர்கள்
சிட்ரோன் C5 ஏர்கிராஸ் ஆனது ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டியூசன் மற்றும் ஃபோக்க்ஸ்வேகன் டிகுவான் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் டீசல்