புதிய ஜெனரேஷன் செவ்ரோலெட் பீட் புகைப்பட டீசர் வெளியீடு; புதிய க்ரூஸ், கேமரோ, கோர்வேட் மற்றும் ஸ்பின் போன்றவை IAE 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்
published on ஜனவரி 18, 2016 03:05 pm by manish for செவ்ரோலேட் பீட்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
அண்மையில், செவ்ரோலெட் நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ‘2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் அனைவரும், எங்கள் நிறுவனத்தின் புத்தம் புதிய விஸ்வரூபத்தைப் பார்க்க முடியும்’ என்று செவ்ரோலெட் அறிவித்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துவதற்கு ஏராளமான மாடல்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதால், இந்த அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனம் இத்தகைய அறிக்கையை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் செவ்ரோலெட் பீட் ஹாட்ச்பேக் காரின், மேம்படுத்தப்பட்ட 2016 பீட் மாடலை இந்நிறுவனம் வெளியிட்டது. தற்போது, அடுத்த ஜெனரேஷன் பீட் காரை அறிமுகப்படுத்தும் விதமாக புதிய புகைப்பட டீசரை வெளியிட்டுள்ளது. அனேகமாக, இந்த கார் அடுத்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. பீட் மாடலைத் தவிரவும், பல வகையிலும் பயன்படும் ஸ்பின் MPV காரையும் செவ்ரோலெட் நிறுவனம் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தவுள்ளது. 7 இருக்கைகள் கொண்ட இந்த MPV, தற்போது பிரேசில் மற்றும் இந்தோனேசிய சந்தைகளில் விற்பனையாகிறது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில், செவ்ரோலெட்டின் அரங்கத்தை மேலும் ஆரவாரப்படுத்த, உலகளவில் புகழ் பெற்ற கமாரோ மற்றும் கோர்வேட் போன்ற பந்தய கார்களும் தயாராக உள்ளன. அதே நேரம், ஆஃப் ரோட் திறன்களை உடைய கார்களின் வரிசையில், இந்நிறுவனத்தின் உயர்தர SUV பிரிவில் வரும் செவ்ரோலெட் டிரைல்பிளேசர் இடம்பெறும். சர்வதேச சந்தையில் பிரசித்தி பெற்ற கொலராடோ பிக்-அப் டிரக், இந்த கண்காட்சியில் இடம்பெற்று, இந்திய சந்தையில் நுழையவிருக்கிறது. அது மட்டுமல்ல, சேடான் பிரிவு கார்களில் பிரபலமான, இந்நிறுவனத்தின் உயர்தர க்ரூஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல், இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
புதிய கார்களையும், மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் தவிர, பார்வையாளர்களின் இன்டராக்டிவ் எக்ஸ்பீரியன்ஸை அதிகப்படுத்துவதற்கு ‘ஓகுலஸ் ரிஃப்ட் விர்ச்சுவல் எக்ஸ்பீரியன்ஸ்’ போன்ற இன்டராக்டிவ் அப்ளிகேஷன்களையும் இந்நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது. ஓகுலஸ் ரிஃப்ட் அப்ளிகேஷன்களில் உள்ள 7-டி சாதனம் வழியாக, பார்வையாளர்கள் நியூசிலாந்து நிலப்பரப்பில் மெய்நிகர் (விர்ச்சுவல்) சாலைப் பயணத்தை மேற்கொள்ள முடியும். பிப்ரவரி 5 –ஆம் தேதி முதல் 9 –ஆம் தேதி வரை க்ரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெறவுள்ள 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள செவெரோலேட் பூத்தில், இந்நிறுவனத்தின் ஏராளமான சுவாரசியமான தயாரிப்புகள் இடம்பெறுவதால், ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் அனைத்து பார்வையாளர்களும் மறக்காமல் பார்க்க வேண்டிய அசத்தலான அரங்கமாக இந்நிறுவனத்தின் பூத் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் வாசிக்க
ஒப்பீடு: டாடா ஜிக்கா vs. செவ்ரோலெட் பீட் vs. ஹுண்டாய் i10 vs. மாருதி செலேரியோ
0 out of 0 found this helpful